World Tamil Blog Aggregator Thendral: இணையும் கரங்களின் நோக்கம் மற்றும் கொள்கைகளாக...

Sunday, 2 November 2014

இணையும் கரங்களின் நோக்கம் மற்றும் கொள்கைகளாக...

இணையும் கரங்களின் நோக்கம் மற்றும் கொள்கைகளாக...
--------------------------------------------------------------------------------------
1]பாதிக்கப்பட்ட குழந்தைகள் பட்டியல் சேகரித்தல்.தேவையான உதவிகளைச் செய்தல்.

2]குழந்தைகளுக்கான சட்டங்கள் என்னென்ன என்ற விவரப்பட்டியல் தயாரித்தல்.

3]பள்ளிகளில் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பயிற்சிகள்,கல்வித்துறையுடன் இணைந்து அளித்தல்.

4]கல்லூரி மாணவர்கள் கொண்ட அமைப்பு உருவாக்கல்.

5]ஆண் குழந்தைகட்கும் பெண் குழந்தைகட்கும் உள்ள சமூகக்கடமையை உணர்த்தும் பாடத்திட்டம் ,செயல் திட்டங்கள் கல்வியில் சேர்க்க வலியுறுத்தல்.

6]பாதிக்கப்பட்ட குழந்தைகட்கு உளவியல் வழிகாட்டல்கள்.

7]அவரவர் பகுதியில் உள்ள இளைஞர்களோடு இணைந்து பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்ட வகை செய்தல்.

8]யதார்த்த வாழ்வை உணர்த்த முயற்சி எடுத்தல்.

9]மாணவ வழிகாட்டிகளை உருவாக்கல்.வளரும் சமுதாயம் உணர்ந்தால் மாற்றம் நிச்சயம் வரும்.

10]குழு உறுப்பினர்கள் பொறுப்புணர்வுடன் செயல் படுதல்.

11]இது குழந்தைகட்கான சேவையை அடிப்படையாகக் கொண்டு துவங்கப்பட்டுள்ளது.இதை தவறான  வழிகளுக்கு பயன்படுத்தாமல் கண்ணியம் காத்தல்.

12]வன்முறையால் எப்போதும் தீர்வு கிடைக்காது என்பதை உணர்ந்து நமக்கான பாதையில் தீர்வு நோக்கி நடத்தல்.

இது என்னில் தோன்றியுள்ள கருத்துகள்...நீங்களும் கூறலாம்.மேலும் தொடர்வோம்..

15 comments :

 1. நல்ல கருத்துக்கள்.கருத்துக்கள்:
  உயிர் உருவம் பெற வாழ்த்துக்கள்/

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் தொடர்க

  ReplyDelete
 3. அன்புத் தோழிக்கு என்னே ஒற்றுமை இதை பற்றி தான் நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். நான் வேறு வழியில் சிந்தித்தேன் தோழி! இயந்திரத் தனமான இந்த உலகத்தில் குழந்தைகளும் இயத்திரத் தனமாகவே வாழ்கிறார்கள். எவ்வளவு தான் கல்வியை கற்றாலும், வாழ்க்கை என்பது வேறு வாழக் கற்றுகொடுக்க வேண்டும். நெறிமுறைகளையும் வாழ்கையில் உள்ள அனுபவப் பாடங்களையும் பெரியவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளல். அன்பு. பாசம், வலிகள் கடமை கண்ணியம், புரிந்துணர்வு இவைகளை புரிந்து கொள்ள நேரம் செலவிடாது வாழ்கை பாடத்தை கற்றுக் கொள்ளாது கணணியிலும் கைபேசியிலும் காலத்தை களிப்பவர்களை திசை திருப்ப வேண்டும். நல்ல நெறி முறைகளை கற்றுக் கொடுக்க வேண்டும். நமது நெறிமுறைகளையும் கலாச்சாரம் போன்றவற்றையும். நல்ல பதிவுகள் மூலமும் திரைப்படம் மூலமும் செலுத்த வேண்டும். நமது தோழி தேன் தமிழ் கிரேஸ் போன்றோர் அவர்களை சுண்டி இழுக்கும் படி ஆங்கிலத்தில் பதிவுகள் இட வேண்டும். அத்துடன் நம்ம சகோதரர் துளசி அவர்களும் இப்படி குறுந் திரைப்படங்களை எடுக்கலாம் இல்லையா சகோ ஹா ஹா.... இந்தியாவிலேயே இன் நிலை பெருகி வரும் வேளையில் வெளி நாடுகளில் வளரும் குழந்தைகளின் நிலைமை கடினம் தான். வறுமையை உணராதவர்களாக இருப்பார்கள். ஒரே காதலும் அடிபிடியும் தான் வேறு என்ன இருக்கிறது என்று திரைப்படத்தை அவர்கள் வெறுக்கும் நிலைமை மாறவேண்டும் குழந்தைகளை வைத்தே திரைப் படங்கள் எடுக்கப் படவேண்டும் அதன் மூலம் பக்தியையும் பண்பையும் அழகிய தமிழின் முக்கியத்துவதையும் புகுத்தி இளைய சமுதாயத்தை ஆட்கொள்ள வேண்டும் என்று ஆதங்கமாக இருக்கிறது. கத்தி படம் பார்த்து அதில் ஒரு பகுதியை அதாவது வறுமை நீரின் முக்கியத்துவம், முதியவர்கள் கையாலாகதவர்கள் என்று எண்ணுபவர்களுக்கும் ஒரு சாட்டையடி தந்து நுட்பமான முறையில் மொத்த உலகத்துக்கும் எடுத்து சொன்ன விதம் அருமை அதை நிச்சயம் பிள்ளைகளும், அறியாதவர்களும் உணர்ந்திருப்பார்கள். இவற்றை நாம் வாயினால் சொல்லியிருந்தால் நிச்சயம் புரிந்திருக்காது. ஒரு பதிவு இட வேண்டும் என்று எண்ணினேன். தங்கள் பதிவை கண்டத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியில் உங்களுடன் பகிர்ந்துள்ளேன். மிக்க நன்றிமா அதிகம் எழுதிவிட்டேனோ.
  எடுத்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் ....! பாராட்டுக்கள் ...!

  ReplyDelete
  Replies
  1. பதிவை விட நீளமாக ஒரு பின்னூட்டம்...
   கலக்குங்க சகோதரி

   Delete
  2. சகோதரி இனியா! தங்களதுக் கருத்தை மனதில் கொண்டோம். கண்டிப்பாக முயற்சி செய்கின்றோம். நல்லது நினைப்போம். நல்லதே நடக்கும்!

   Delete
  3. சகோதரி இனியா எதற்காக உங்களைக் கோபிக்க வேண்டும்? மிக நல்ல கருத்தை முன் வைத்துள்ளீர்கள்! எனவே முயற்சிக்கின்றோம்.

   Delete
  4. உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன் தோழி..என்னால் முடிந்ததைச் செய்கிறேன்..என்னால் ஏதோ செய்ய முடியும் என்று நம்பி என்னைக் குறிப்பிட்டுச் சொல்லியிருப்பது நெகிழவைக்கிறது..நன்றி தோழி..

   Delete
 4. சிறந்த கருத்துப் பகிர்வு
  தொடருங்கள்

  ReplyDelete
 5. உயர்ந்த எண்ணங்கள்
  வாழ்த்துக்ள் சகோதரியாரே

  ReplyDelete
 6. புதிய முயற்சி..!.வாழ்த்துகள்..!

  ReplyDelete
 7. நல்லதை நினை நன்மை நடக்கும்
  தொண்டு செய் மேலான நிலை அடைவாய்
  - ஸாது ஸுவாமிகள்
  என்ற போதனையே நினைவில் வந்தது வாழ்த்துக்கள்.
  மதுரையில் தங்களை சந்தித்தது குறித்து மகிழ்ச்சி.

  ReplyDelete
 8. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 9. சகோதரி நல்ல முயற்சி! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. நல்ல கருத்துப் பகிர்வு...
  வாழ்த்துக்கள் சகோதரி.,

  ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...

There was an error in this gadget