World Tamil Blog Aggregator Thendral: பிளஸ் 1 வகுப்பு மாணவர் அடித்துக்கொலை...

Wednesday 12 November 2014

பிளஸ் 1 வகுப்பு மாணவர் அடித்துக்கொலை...

தமிழ் - தி இந்து-13.11.14

பிளஸ் 1 வகுப்பு மாணவர் அடித்துக்கொலை...

ஆசிரியர் மாணவர் இடைவெளியே காரணம் ...படித்த போது
மனம் வேதனையானது..

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி காட்ட ஆசிரியர்களை கட்டாயப்படுத்துவதும்,மாணவர்களை கண்டிக்கும் நிலையற்று இருப்பதும் முக்கிய காரணமாகின்றது.விளைவு ஒன்பதாம் வகுப்பு ,பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே இடைவெளி அதிகமாகின்றது என்பது உண்மை .இன்னும் அதிகமாகத்தான் செய்யும்...



,குறைவான மதிப்பெண் வாங்கும் மாணவர்களை தனியார் பள்ளிகள் டி.சி.கொடுத்து அனுப்பி விடுவதால் அவர்களால் 100% தேர்ச்சி காட்ட முடிகின்றது ஆனால் 9ஆம் வகுப்பு வரை இடைநிற்றலைத்தவிர்க்க கட்டாயத்தேர்ச்சி என்ற நிலையும்,பருவத்தேர்வு முறையில் படித்த குழந்தைகளை திடீரென முழுபாடமும் படிக்க வைக்கும் நிலையும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பத்தாம் வகுப்பு மாணவர்களை 100% தேர்ச்சி என்பது சாத்தியமில்லாதது...ஆனால்  ஆசிரியர்கள் மதிப்பெண் நோக்கி ஓடவைப்பது என்பது வருங்கால சந்ததிகட்கு நிச்சயம் பாதிப்பான ஒன்று..

அரசுப்பள்ளியில் படிக்கும் குழந்தைகள் மிகவும் வறுமையானச்சூழ்நிலையில் கல்வியின் முக்கியத்துவம் அறியாத பெற்றோர்களால் பல நாட்கள் பள்ளிக்கே வராமல் தேர்விற்கு மட்டுமே வருகின்றார்கள்..சில குழந்தைகள் மனவளர்ச்சிக்குறைவானவர்கள் ,கற்றல் குறைபாடுடையக் குழந்தைகளும் இருக்கின்றனர்..இந்நிலையில் அக்குழந்தைகளின் ஆசிரியர்கள் எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் குழந்தையை கண்டிக்கவும் முடியாமல் தேர்ச்சி பெறவைக்கவும் முடியாமல் திறமை இருந்தும் 100% தேர்ச்சி தர முடியவில்லையே என மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்...

எதைச் சாதிக்க இந்த ஓட்டம்...ஆசிரியர்கள் வழியற்ற நிலையில் வேகமாக பாடம் நடத்தி விட்டு தனியார்பள்ளிகள் போல மனப்பாடம் பண்ணி எழுது எழுது என குழந்தைகளை விரட்டுவதால் குழந்தைகளும் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்..பத்தாம் வகுப்பும் பன்னிரண்டாம் வகுப்பும் மாணவர்களின் கொலைக்களமாகின்றது....இது சரியா...இதற்குத்தான் கல்வியா..படிக்காத மக்கள் இயல்பாய் மனநிறைவோடு வாழும் போது படித்தவர்கள் மனித நேயமற்று குழந்தைகளை அவர்களின் குழந்தமையைக்கொல்வது எந்த விதத்தில் நியாயம்...

விளையாட்டு,பாட்டு,தையல் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்படும் பிரிவேளைகள் பாட ஆசிரியர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டு எந்தவித மாற்றும் இல்லாமல் எழுத்துகளையே பார்த்து நொந்து போகின்றனர்...இதற்கு யார் முடிவு கட்டுவது...?



9 comments :

  1. மதிப்பெண்ணை நோக்கி ஓட வைக்கும் இந்தியக் கல்வி முறையில் மாற்றம் வேண்டும். 100 சதவீத தேர்ச்சி என்பது ஒரு மாயை! ஆசிரியர்களுக்கு ஏற்கனவே நிறைய நெருக்கடிகள்! இதில் இந்த நெருக்கடியும் தருவது கூடாதுதான்!

    ReplyDelete
  2. பதிவு மனதை வருத்தியதே,,,
    இதற்க்கு அடிப்படை காரணம் இப்பொழுது வரும் சினிமாக்களில் ஆசிரியரை மாணவர்கள் கிண்டல் செய்யும் காட்சிகள் நிறைய இடம் பெறுகிறது இது வகுப்புகளில் நடப்பதால் சினிமா எடுக்கிறார்களா ? இல்லை சினிமாவில் வருவாதால் மாணவர்கள் இப்படி நடக்கிறார்களா ? என்பதை நானறியேன் காரணம் எமக்கு அனுபவம் இல்லை இதை இந்திய தணிக்கை குழுவினர் கவனிக்கவேண்டும் தயாரிப்பாளர்கள் ‘’கவனிக்க’’வும் கவனம் சிதறி விடுகிறது இதைக்காணும் ஆசிரியர்களுக்கு இயல்பாகவே தோன்றும் பதிவுக்கு நன்றி தோன்றக்கூடிய அவமான உணர்வு இதுவே வகுப்புக்கு வந்தும் தொடரும்போது இருவருக்குமான இடைவெளி அதிகமாகி கொண்டே.... போகிறது இதை பெற்றோர்கள் சங்கமும், ஆசிரியர்கள் சங்கமும் கூடி ஒரு சுமூகமான தீர்வைக்கண்டால் ஒழிய இது இன்னும் தொடரும் என்பதே எமது கருத்து..
    சும்மா இருந்தால் நம்ம ஏரியாப்பக்கம் வாங்க,,,

    ReplyDelete
    Replies
    1. சகோ சொல்வது போல சமூக ஊடகங்கள் நல்ல மாற்றத்திற்கு அடிகோல வேண்டும்...

      Delete
  3. வணக்கம்.கலைகளை வளர்க்கவேண்டிய பள்ளிக்கூடங்கள்,கொலைக்களமாகி வருவது வேதனையாக இருக்கிறது.ஆசிரியர் உமா கொலை,மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுக் கொலை,போன்ற நிகழ்வுகள்..சமகாலத் தேர்வுமுறைகளினால் ஏற்பட்ட அழுத்தம் தவிர வேறென்ன..?.இனியும் உயிர்ப் பலிகள் ஏற்படுமுன்,அரசும் கல்வியாளர்களும் மாற்று வழிகளை ஆய்ந்து, உடன் செயல்படுத்த முயலவேண்டும்..?

    ReplyDelete
  4. வருத்தமாக இருக்கிறது..நீங்கள் சொல்வதுபோல மதிப்பெண் பந்தயத்தில் அனைவரும் மனதை நெருக்குகின்றனர்..

    ReplyDelete
  5. மனம் கனக்கிறது சகோதரியாரே
    பயணம் தவறான திசையில் வேகமாய்
    அரசும் கல்வியாளர்களும் என்று தான் புதிய பாதையை நோக்கி கல்வித் துறையை திருப்பிவிடுவார்களோ

    ReplyDelete
  6. நமது கல்வி முறையில் மாற்றம் வந்தாலே நாம் நினைப்பது சாத்தியமாகும். நமது கல்வி ரோபோக்களை உருவாக்குகின்றதே அல்லாமல் மனிதர்களை உருவாக்குகின்றதா என்று தெரிய வில்லை! கல்வியை ஆழ்ன்து, சிந்திஹ்து, சுவைத்தும் அனுபவித்து ரசித்துப் படிக்கும் நிலை வர வேண்டும். வருமா?!!!

    ReplyDelete
  7. மனம் வேதனை அடைகின்றது இது போன்ற செய்திகளை வாசிக்கும் போது!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...