World Tamil Blog Aggregator Thendral: இணையும் கரங்களின் குரலாய்

Sunday, 30 November 2014

இணையும் கரங்களின் குரலாய்

இணையும் கரங்களின் குரலாய்

இன்றைய செய்திகளில்...30.11.14

1]ஹைதராபாத் கல்லூரி மாணவர் தன் கூடப்படிக்கும் மாணவியை சீனியர் மாணவர் கேலி செய்ததை எதிர்த்ததால் அவரை தலையில் அடித்துக்கொலை செய்துள்ளார்...சீனியர் மாணவர் கைது...

2]ரோகர் என்னும் பகுதியில் பேரூந்தில் வந்த இரு சகோதரிகளை தொடர்ந்து கேலி செய்து வந்த ஒருவனை பொறுக்க முடியாது அச்சகோதரிகளே பெல்ட்டால் அடித்து உதைக்கும் காட்சியை பேருந்தில் ஒருவர் செல்போனில் படம் பிடித்த காட்சி ஒலிபரப்பானது...

முதல் செய்தி  நமக்கு கேட்டு பழகிப்போய்விட்டது .தரமற்ற.கல்வியின் சீரழிவு ..சந்ததிகளின் செயலாய்.

இரண்டாவது செய்தியில் பாதிக்கப்பட்டவர்கள்  தட்டிக்கேட்கும் வகையில் அடித்து உதைத்த போது வெல்டன் என வாழ்த்து கூறியது மனம்..

நான் கூறவந்தது இதுவல்ல..


.இரண்டிலும் யோசிக்க வேண்டிய விடயம் ஒன்று....நிகழ்வுகளை பார்த்துக்கொண்டிருந்தவர்களின் பொறுப்பற்ற தன்மை குறித்தே...

சக மாணவியை கேலி செய்பவனை அந்த வகுப்பில் ஒருவன் மட்டுமே கேட்டதால் தான் இன்று அவன் தன் உயிரை இழந்து உள்ளான்..அவனுக்கு ஆதரவாக அந்த வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் ஒரு சேர எதிர்த்து இருந்தால் நிச்சயம் இனியும் தொடர்ந்து நடக்காமல் தடுக்கப்பட்டிருக்க வாய்ப்பிருந்திருக்கும்.அந்த மாணவனும் இன்று உயிரை இழந்திருக்க மாட்டான்...ஆனால் வேடிக்கை பார்க்கவே கற்றுக்கொடுத்துள்ளது சமூகம்....

பேருந்தில் அதைப் படம் எடுக்கவேணும் என்று தோன்றியவருக்கு அவர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பத்தோணவில்லை...அவர் மட்டுமல்ல அப்பேருந்தின் ஓட்டுநர்,நடத்துனர்,பயணிகள் அனைவருமே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தக்காட்சியைத்தான் பொறுத்துக்கொள்ள முடியவில்லை...கேலி செய்தால் அனைவரும் தட்டிக்கேட்பார்கள் என்ற அச்சம் இருந்தால் இந்த இரு நிகழ்வுகளுமே நிச்சயம் நடந்திருக்காது..

அந்த சகோதரிகள் கோபத்தில் படபடத்த காட்சியைப்பார்த்த போது மிகவும் வேதனையாக இருந்தது..யாருக்கோ நடப்பது தானே என இன்னும் எத்தனை நாட்களுக்கு எல்லோரும் விட்டேத்தியாய் இருப்பார்கள்...என்னைக்கேட்டால் இப்படி ஒரு அநீதி நடக்கையில் தட்டிக்கேட்காதவர்களுக்குத்தான் முதலில் தண்டனைதர வேண்டும் எனக்கூறுவேன்...சரிதானே...

சில ஆண்டுகளுக்கு முன் வீட்டின் பின் புறம் உள்ள முட்புதர் அருகே மாடுகளின் கூக்குரல் என்னவென ஓடிப்பார்த்தால் ஆடு ஒன்று முட்புதரில் மாட்டிக்கொண்டு வெளிவரமுடியாமல் தவித்துக்கொண்டிருக்க, சுற்றிலும் ஐந்து மாடுகள் குரலெழுப்பி எல்லோரையும் அழைத்து ஆட்டை மீட்டப்பின் அதன் பின்னேயே சென்றன...

வெட்கமாக உள்ளது...ஆறறிவை எண்ணி...

28 comments :

  1. குற்றவாளிகளைத் தண்டிப்பது இருக்கட்டும். முதலில் வெட்டியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சக பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    (ஃபேஸ்புக்கில் பகிர்ந்ததை அப்படியே இங்கும் தருகிறேன்)

    ReplyDelete
  2. அருமையான இரண்டு நிகழ்வுகளை குறித்து பதிவிட்டமைக்கு நன்றி இரண்டாவது நிகழ்ச்சி தங்களது மனதுக்கு இதமாக இருக்கும் 80 நான் அறிந்ததே.... காரணம் ‘’ஒரு கோப்பை மனிதம்’’ பருகினேன் இதற்கெல்லாம் மாற்றுக்கருத்து என்னைக்கேட்டால் ? ஆண்களையும் பெண்களையும் ஒரே கல்லூரியில் இணைப்பதே என்பேன் இந்த ஈவ்டீசிங் 80 என்ன ? இது அவசியமா ? 80தை மாணவர்கள் உணரவேண்டும் இதற்க்கு அரசாங்கமும் ஒரு காரணமே நான் மேலே சொன்னதை அரசாங்கமே நடைமுறை படுத்தவேண்டும் வேறுயார் செய்வது ? (எனக்கு இந்த மாதிரியான வாழ்க்கை கிடைக்கவில்லை என்ற பொறாமையால் சொல்கிறேன் என கருதவேண்டாம்) அரசாங்கம் எப்படி செய்யும் ? அவர்கள் போட்ட முதலை எடுப்பார்களா ? இல்லை சமூகசேவை செய்வார்களா ? ஆகவே அதற்க்கு காரணகர்த்தா நாம்தான் வெட்கி தலைகுனிவதைத்தவிற வேறு WAY இல்லை.
    தாங்களைத்தொடர்கிறேன் தாங்கள் வராவிடினும்.. சமூக சிந்தனைக்கான பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா வந்துடுறேன் சகோ..

      Delete
  3. ஆம் தோழி சமுதாயத்தில் ஐந்தறிவு உயிரினங்கள்கூட விழிப்புணர்வோடு இருக்கிறது நானும் அந்த நிகழ்வினை தொலைகாட்சியில் கண்டேன் மனம் கொதித்துப்போனது.

    ReplyDelete
  4. பொறுப்பற்ற சமூகம்! தைரியமானப் பெண்கள். இப்படித்தான் பெண்கள் தங்களைக் காத்துக் கொள்ளப் பழக்கப்பட வேண்டும். வீட்டிற்குள் அடைந்திருப்பவர்கள் அலல்வே பெண்கள்! மிகவும் நல்ல ஒரு பதிவு!

    ஆறறிவுகளா? யாருக்கு? ஆறறிவுகளை விட ஐந்தறிவுகளே மேல் மட்டுமல்ல அறிவாளிகளும். ஆறறிவுகளை விலங்குகள் போல் நடந்துகொள்கின்றார்கள் என்று சொல்லி விலங்குகளைக் கேவலப்படுத்துகின்றோம்....

    நல்ல பதிவு!

    ReplyDelete
    Replies
    1. ஆனா நாம ஐந்தறிவுன்னு சொன்னத அவைகள் ஏத்துக்குச்சான்னு தெரியல சகோ...

      Delete
  5. இது போன்று படம் எடுத்து முகனூலில் பகிர்ந்து லைக் வாங்கி பெருமிதம் கொள்வார்கள் இதைத்தான் ஓனாயும் ஆட்டுக் குட்டியிலும் சொல்லப்பட்டது....

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சகோ...

      Delete
  6. கவிஞரே!
    துணையாடலுக்கே கருத்திட எல்லாம் அடித்தும் பதிவிட முயன்றபோது இணையம் துண்டிக்கப்பட்டது.
    வெறுத்துப்பொய் மீண்டுவந்த போது உங்களின் அடுத்த பதிவு!
    துணையாடல் ஒரு நல்ல சொல்லாட்சி என்றால் உங்களின் இந்த இணையும் கைகளின் குரல் ஒட்டுமொத்த சமூக எழுச்சிக்கான கைதட்டல்!
    நன்றி

    த ம 1

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ...த.ம.விற்கும்...

      Delete
  7. வேதனையாக இருக்கிறது..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்மா பெண்கள் கூட பார்த்துக்கிட்டு உட்கார்ந்திருக்காக..

      Delete
  8. சமீபங்கலீல் இது போன்ற இது போலான செயல்கள் நிறைந்து வருகின்றன/

    ReplyDelete
    Replies
    1. வருத்தப்பட வேண்டிய செய்திகள்.

      Delete
  9. உள்ளத்தில் ஓங்கி ஒன்றால் அடித்ததைப் போன்று இருந்தது ஆக்ரோஷமான உங்கள் எழுத்து!..
    மிக அருமை!

    ஒன்று நடந்தால் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கவும் படம் எடுத்து அதை பப்ளிக் பண்ணிப் பேர்வாங்குவதிலுமே சமூகத்திற்கு ஆர்வம் இருகிறது என்பது அசிங்கமான உண்மைதான் சகோதரி!..

    அதிகம் போவான் ஏன்... இங்கு,.. வீதியில் ஒருவர் விழுந்து கிடந்தாலோ, அல்லது பக்கத்து வீட்டில்.. ஏதாகிலும் காரசாரமான சண்டை, அலறல் கேட்டாலோ காதை இறுகப் பொத்தி வானொலி சத்தத்தை அதிகமாக வைத்து எதையும் கண்டுக்காமல் இருக்கும் வெள்ளைகள் சமூகம்..!
    கேட்டால் பேசாமற் போங்கள் பொலீசு, கோர்ட், கேஸ் என்று யாரால் ஏலும் அலைய.. என்பார்கள்..:(

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் தோழி சின்னதொரு கடுகு போல் உள்ளங்கொண்டவர்களே அதிகமாய்...

      Delete
  10. இன்றைய சமூகம் இப்படியாகிவிட்டது!! ஐந்தறிவு மேல்!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அவை நம்மை மதிக்கவே மதிக்காது..

      Delete
  11. ஒவ்வொரு விலங்கினமும், மற்ற விலங்கினங்களுக்கு உதவிக்கொண்டுதான் இருக்கின்றன.
    மனிதனைத் தவிர,
    மனிதனை விலங்கினத்தில் சேர்த்ததே தவறு என்பேன்.

    ReplyDelete
    Replies
    1. விலங்கை விட கீழ் நிலையில் மனிதன் சகோ.நன்றி த.ம.விற்கு

      Delete
  12. வவேதனை தரும் செய்திகள்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ...தடுக்க முடியாத இயலாமை..

      Delete
  13. வேதனை தரும் செய்திகள். ரோதக் சம்பவத்தில் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருவரையும் இன்று Suspend செய்திருக்கிறார்கள்.

    பார்த்துக் கொண்டிருந்த மனிதர்கள் ஒவ்வொருவரும் போலீஸ் கேஸ் என்று அலைய வேண்டியிருக்கும் என்ற எண்ணத்தில் வேடிக்கை மட்டும் பார்க்கிறார்கள். தனக்கென்று வரும் வரை யாருமே தட்டிக் கேட்பதில்லை என்பது தான் நிதர்சனம்.

    ReplyDelete
  14. நல்லதொரு பகிர்வு மேடம்...

    ReplyDelete
  15. இரண்டாவது செய்தியில் , அம்மாணவிகள் புகாரளித்தும் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்படவில்லை . காரணம் நம்முடைய தண்டனைச்சட்டமும் , அரசியலமைப்பும் தான் . ஈவ்டீசிங்கு கடுமையான தண்டனையிருந்தும் அது தொடர்வது வருத்ததிற்குரியதுதான் . சட்டத்தை சாதகமாக்க , இயன்றவன் துடிக்கிறான் . பாதகம் என புரியாதவன் பரிதவிக்கிறான் . வாள்வீச்சைவிட கூர்மையானது பேனா முனை என்பதை தங்களின் எழுத்து நிருபிக்கின்றது. இன்னும் மனிதத்திற்கு எதிரான செயல்கள் எண்ணிலடங்காமல் நம் நாட்டில் நடந்துகொண்டுதான் இருக்கிறது என்பது வருத்ததிற்குரியதுதான் .

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...