World Tamil Blog Aggregator Thendral: முன்னோர்களின் வருகையில்...

Saturday, 15 November 2014

முன்னோர்களின் வருகையில்...

முன்னோர்களின் வருகையில்...

                                   முத்தம் குறித்த போராட்டம் படித்து தீவிரமாய் கருத்துகளுடன் முகநூலில் ..இருக்கையில் மெலிதாக நிழலாடியது யாரோ ஒருவர் நடந்து போவதாய்...யாருமற்ற நிலையில் இது சாத்தியமில்லை கற்பனையே என மீண்டும் முகநூலில்...

                                   மறுபடியும் இருவர் கடந்து செல்லும் நிழல்..கொஞ்சம் அடிவயிறு கலங்க பூட்டியிருக்கும் வீட்டில் எப்படி என்ற அதிர்ச்சியுடன் திரைச்சீலையை விலக்க...ஆத்தாடி...என் தாத்தா வின் தாத்தாக்கள் குடும்பத்துடன் உள் நுழைந்து தனக்கான காலை உணவை உரிமையுடன் எடுத்துக்கொண்டு.கொண்டு.ஒருத்தர் பிரிட்ஜை திறந்து கொண்டு..ஒருவர் பையை ஆராய்ந்து கொண்டு...சத்தமின்றி உள் நுழைந்து..

                       .ஐய்யோ என என்னை மீறி அலற பெரிய்ய்ய்ய தாத்தா என்ன கத்துறன்னு தன் ஈறு தெரிய உறும...கதவை பட்டென்று சாத்தி வெடவெடுத்து...வயசான உனக்கே இத்ன திமிரான்னு கதவை அடித்து விரட்ட பால் பாக்கெட் வழிந்தோட...ஒரு கிலோ கோதுமை  பாக்கெட்டை எடுத்துக்கொண்டு நிதானமாக சென்று மீண்டும் திரும்பி பார்த்து முதல்ல வீட்டு வேலையைப்பார் பின் முகநூல பாருன்னு திட்டாமத்திட்டிட்டு போயிட்டாக..மூவரும் ...

                            என்னத்த சொல்ல..காக்காக்கள் எச்சரித்தும் கவனிக்காம இருந்தா இப்படி அதிர்ச்சியான விருந்தினரை சமாளிக்க வேண்டியதுதான் ..நான் போறேன்பா...விடுவோமா அவர்களையும் போட்டோ பிடிச்சிட்டோம்ல..ஆனா போச் கோதுமை பாக்கெட்...

4 comments :

  1. குரங்கு நடமாட்டம் அதிகம் போல உங்க ஊரிலே! கவனமாகத்தான் இருக்க வேண்டும்!

    ReplyDelete
  2. இவங்களுக்கு பயந்து தான் நான் இருக்கும் அறை தவிர மற்ற அறைகளில் பல நேரம் கதவு, சன்னல் எல்லாம் மூடியே வைத்திருக்கிறேன்:))

    ReplyDelete
  3. கோதுமை பாக்கெட்டு எதுக்கு எடுத்துட்டு போனாங்க ஒருவேளை போண்டா சுட்டு திண்பாங்க போல....

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...