World Tamil Blog Aggregator Thendral: காடு -இயக்குனரிடம் ஒரு கேள்வி

Sunday, 23 November 2014

காடு -இயக்குனரிடம் ஒரு கேள்வி

காடு -இயக்குனரிடம் ஒரு கேள்வி

இயக்குநர் சமுத்திரக்கனி மீது  மிகுந்த நம்பிக்கை உண்டு .சமூக அக்கறைக்கொண்டவர் ,அவரது படைப்புகள் சமூகச்சிந்தனையைத்தூண்டுவதாக இருக்கும் என்பதில்  மாற்றுக்கருத்து இல்லை

.அவர் மீது உள்ள நம்பிக்கையில் இன்று காடு திரைப்படம்திரையரங்கம் சென்று பார்த்தேன் .காடு அழிப்பதை தடுக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் திரைப்படத்தை எடுத்துள்ளமைக்கு அவருக்கு என் பாராட்டுக்கள் . கதாநாயகியை அரைகுறை ஆடையில் ஆடவிடாமல் பணத்தை விட சமூக அக்கறையையே முன்னிறுத்தி துணிந்து படம் எடுத்துள்ள அவருக்கு என் பணிவான நன்றி .


அது மட்டுமின்றி வேறு எந்தப்பெண்களையும் அரைகுறையாய் காட்டாததற்கும் ஆசிரியர் என்ற நிலையில் என் வணக்கங்கள் .சிறந்த படம்.காடு நம் உயிர். அதை அழிப்பது என்பது தண்டிக்க வேண்டிய ஒன்று என்பதை ஆணித்தரமாக கூறியுள்ளவிதம் மிகச்சிறப்பு .

ஆனால் ஆசிரியராய் ஒரு உறுத்தல் படம் பாரத்த உடன் எழுந்தது..இதற்கு அவரிடம் தான் பதிலை எதிர்பார்க்கிறேன் .

சார் சாட்டைப்படம் மிக அருமையான ஒரு படம் .காடும் அப்படியே ...ஆனால் இரண்டிலும் பள்ளி வயதுக்குழந்தைகள் காதலிப்பது போலவே காட்டியுள்ளீர்கள் ..இது ஏன் ?சாட்டைப்படத்தில் காதலிப்பதால் அவன் நன்கு படிப்பதாய் காட்டியிருந்தேனே எனக்கூறலாம்.

 ஆனால் நடைமுறையில் பள்ளிவயதுக்காதல் குழந்தைகள் வாழ்வை படுகுழியில் தள்ளி விடுகின்றது .காடு படத்திலும் பள்ளியில் படிக்கும் மாணவி  காதலிப்பது அதிலும் படிக்காத ஒருவனைக் காதலிப்பதாக காட்டியுள்ள விதம் சமூகத்தில் இரு  பாலரிடமும் தீய எண்ணங்களையே உண்டாக்கும் என்பதை அறிவீர்களா ?
1]ஆண்கள் படிக்கலன்னாலும் பரவால்ல படித்த பெண் வாழ்க்கைத் துணைவியாய் வருவாள் என்ற மாயை நம்பி தன்  படிப்பில் முக்கியத்துவம் காட்டாமல் பெண்கள் பின்னாலேயே சுற்றுவதையே வேலையாய் திரிகின்றனர் .
2] பெண்களுக்கும்  மோசமான எண்ணத்தை மனதில் உண்டாக்கியுள்ளது இன்றைய திரைப்படங்கள் .இதனால் படிக்கும் மாணவிகள் கூட படிப்பை விட்டு விட்டு காதலில் வீ ழ்ந்து திருமணம் செய்வதையே குறிக்கோளாக கொண்டு தன்  வாழ்வை அழித்து கொண்டுள்ளனர் .இது பத்தாம் வகுப்பிலேயே துவங்கி விட்டது.கையறு நிலையில் பெற்றோரும் ஆசிரியர்களும் ..திரைப்படங்களின் வலிமைக்கு முன் எதுவும் செய்ய முடியாத நிலையில் .நீங்கள் கூறலாம் காடு படத்தில் அந்தப்பெண்ணை திருமணம் செய்து கொண்டு படி என்று தானே கூறி உள்ளேன் எனக் கூறலாம்...

இல்லை சார் அதை  மேம்போக்காக விட்டு விட்டீர்கள் .படித்த அழகான பெண் படிக்காத கணவனுடன் எத்தனை நாள் வாழ்வாள் ?காதல் இருக்கும் வரை ஓடும் வண்டி ..அதற்குப்பின் ..?யோசிக்க வேண்டிய ஒன்றல்லவா...இதை உங்களிடம் தான் நான் எதிர்பார்க்க முடியும்..பெண்களுக்கும் சமூகத்தில் அக்கறை உண்டு என்பதை உணர்த்துவதாக எப்போது திரைப்படங்கள் வரும்....பெண்கள் குறித்த பார்வை எப்போது மாறும் ...

23 comments :

 1. சரியான கேள்விகள்தான் (சாட்டையடிக் கேள்வி?)
  பதில் வராவிட்டாலும், பலரும் பார்க்கட்டுமே? நன்றி டீச்சர்! (சகோதரி இப்ப டீச்சராத்தானே எழுதியிருக்கீங்க அதான்..)

  ReplyDelete
 2. எங்களுக்கும் மிகவும் பிடித்த ஒருஇயக்குனர். நல்ல இயக்குனரும்கூட.

  உங்கள் கேள்விகள் மிக அருமை. நியாயமானவை. ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மட்டுமே இந்தப் பள்ளி வயதுக் காதல் எத்தனை படாத பாடு படுத்துகின்றது என்பது புரியும். உடனே பலரும் பல உதாரணங்களுடன் வருவார்கள். இளம் இசை இயக்குனர் ஜிவி பிரகாஷ், சைந்தவி பள்ளியிலிருந்துதானேன் காதலிக்கத் தொடங்கினார்கள் என்று. ஆனால் அவர்களின் சமூகப் பின்னணி வேறு. இருவரும் தங்களை வாழ்க்கையில் நன்றாக ஊன்றிக் கொண்டுள்ளார்கள். இது போன்றவை ஒன்றோ இரண்டோ. ஆனால், 99.9% நீங்கள் சொல்லியிருப்பது போலத்தான். காதல் வேறு யதார்த்தம் வேறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டும் ஒன்றாக வேண்டும் என்றால் அதற்கு மன முதிர்ச்சி மிகவும் அவசியம். சமுத்ரகனிக்கு நீங்கள் வைத்திருக்கும் வேண்டு கோளை வழிமொழிகின்றோம்.

  சகோதரி இதில் இன்னும் ஒரு பாயின்ட் உண்டு அல்லவா, பெற்றோரும் தங்கள் குழந்தைகளை வளர்க்கும் முறையில் கவனம் கொள்ளலாமே. திரைப்படங்களையும், நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்களையும் யதார்த்த வாழ்க்கையிலிருந்தும், தனிப்பட்ட அனுபவங்களிலிருந்தும் வேறுபடுத்திப் பார்க்கக் கற்றுக் கொடுத்து வளர்க்கலாமோ என்று.

  மிக நல்ல பதிவு!

  ReplyDelete
  Replies
  1. உண்மை சகோ...நன்றி

   Delete
 3. ஹ்ம்ம் நல்ல கேள்வி கீதா, படங்களில் இன்னும் சற்று சமூகப் பொறுப்போடு காட்டவேண்டும்.
  ஆனா எனக்கு ஒரு சந்தேகம்..பள்ளி பருவத்தில் காதல் வருவது தப்பா? அப்பொழுது காதல் வருவது இயல்பு..ஆனால் உடனடியாக முடிவெடுக்காமல் படிப்பும் வேலையும் முக்கியம், என்று உணர்த்தி காதல் பற்றிய முடிவைப் பின்னர் எடுக்க வேண்டும் என்று சொன்னால்? காதல் தப்பு தப்பு என்று பெரியவர்கள் சொல்லச் சொல்லத் தங்களுக்கு ஏற்படும் காதல் பற்றி பெற்றோரிடமோ வேறு பெரியவரிடமோ பிள்ளைகள் பேச அஞ்சுவதாலேயே பல பிரச்சினைகள்..அப்படி இல்லாமல் எது பற்றியும் பேசமுடியும் என்ற நிலையைப் பெற்றோர் உருவாக்கினால் எல்லாம் நல்ல விதமாகவே இருக்கும் ...காதலுக்கும் பருவ ஈர்ப்புக்கும் உள்ள வேறுபாடை சொல்லிக்கொடுக்க வேண்டும், இரண்டுக்கும் இடையே உள்ள மெல்லிய வித்தியாசத்தைப் பிள்ளைகள் உணர வேண்டும், அது சமூகத்தின் கைகளில் இருக்கிறது..இது என் எண்ணம் :))

  ReplyDelete
  Replies
  1. இல்லைமா..முதிர்ச்சியற்ற குழந்தைகள் தவறாகவே கருதுகின்றனமா..உண்மை.

   Delete
  2. நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் கீதா. ஆசிரியரா பல குழந்தைகளைப் பார்க்குறீங்க.
   எனக்குத் தோணினதைச் சொன்னேன், தவறாக நினைக்கவில்லை தானே? :)

   Delete
 4. சரியான கேள்விதான் சகோதரியாரே
  சாட்டை படத்தில் மட்டுமல்லர, பள்ளிக்கூடம் படத்தில் கூட சில காட்சிகளை நீக்கியிருக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து
  இயக்குநர்கள் யோசிப்பார்களாக

  ReplyDelete
 5. சரியான கேள்வி... வணிக ரீதியாக சிலர் அவரை சமாளித்து இருக்கலாம்...

  http://dindiguldhanabalan.blogspot.com/2014/11/Gandhi.html

  ReplyDelete
  Replies
  1. ம் இருக்கலாம் சார்.

   Delete
 6. நியாயமான கேள்விகள்தான். என்ன இருந்தாலும் வணிக நோக்கு என்பதானது அவர்களை பின்னுக்கு இழுத்துவிடுகிறது என்பதே உண்மை.

  ReplyDelete
 7. எங்கே எனது கருத்துரை...

  ReplyDelete
  Replies
  1. ஒண்ணும் வரலயே சகோ.

   Delete
 8. படம் வியாபார வெற்றியடைய இப்படி எடுத்திருப்பார்!

  ReplyDelete
 9. அன்பு சகோதரியின் ஆதங்கம் எனக்கும் உண்டு.

  என்னதான் தம்மை சமூக நலனில் அக்கறை கொண்டவர்கள் போல் காட்டிகொள்ளும் , கொஞ்சம் பிரபலமானவர்கள்,தங்களின் அடிப்படை நோக்கமான பணம் பண்ணும் சூத்திரமாகவே இது போன்ற சமூக சீர்கேட்டான விஷயங்களை படங்களில் இணைக்கின்றனர்.

  படத்தில் காட்டும் இதுபோன்ற நிகழ்சிகள் தங்கள் சொந்த மகனுக்கோ மகளுக்கோ நிகழ்ந்தால் அன்றைக்கு ஊரே சிரிக்கும்படி பத்திரிக்கை, தொலைக்காட்சி என விஷயங்கள் பற்றி எரியும்.

  அலைகள் ஓய்வதில்லையிலும் அப்படிதானே, யாராக இருந்தாலும் திரை துறைக்கு வருபவர்களின் ஒரே நோக்கம் எப்படியாவது பணம் பண்ணவேண்டும் என்பதுதானே தவிர சமூக சீர்திருத்தம் என்பது எல்லாம் சும்மா - மாய்மாலம்.

  நன்றி வணக்கம்.

  கோ

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சகோ..மிக்க நன்றி வருகைக்கு..

   Delete
 10. சரியான கேள்விதான். பலரும் போகிறபோக்கில் அந்த பின்னு மனங்களில் நஞ்சை விதைத்து விடுகிறார்கள். ஆசிரியராய் உங்க இந்த கேள்வி கேட்கவேண்டியவரையும் சென்றடையட்டும் அக்கா!

  ReplyDelete
  Replies
  1. உண்மைமா..பொறுக்க முடியாம..தான் எழுதுனேன்..

   Delete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...