World Tamil Blog Aggregator Thendral: குழந்தைகளுக்கான நாடில்லையா இது.?..யார் பொறுப்பு இதற்கெல்லாம்.?.

Thursday 18 December 2014

குழந்தைகளுக்கான நாடில்லையா இது.?..யார் பொறுப்பு இதற்கெல்லாம்.?.

இணையும் கரங்களின் குரலாய்..


குழந்தைகளுக்கான நாடில்லையா இது.?..யார் பொறுப்பு இதற்கெல்லாம்.?.

கேட்க முடியவில்லை...ஆறாம் வகுப்பும்,பத்தாம் வகுப்பும் ...?!

ஆசிரியர்களின் கைகளைக்கட்டிப்போட்டு அவர்கள் மாணவர்களின் வன்முறையை பார்வையாளராய்ப் பார்க்கும் நிலை தொடர்ந்தால் இன்னும் சீரழியும் சமுகம்...

பாலுணர்வு போதையாய் வளரும் சந்ததிகளை  அழிப்பதை யார் கேட்பது?

மதிப்பெண்களை நோக்கி ஆசிரியர்களை ஓடவைப்பதை விட மாணவர்களின் மனதை நோக்கி ஓடவைத்து அவர்களை மடைமாற்றம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்..

மாணவர்களுக்கு சமூகத்தில் பொறுப்பை அளித்து,சமூகக்கடமையை உணரவைக்கும் பாடத்திட்டம் எப்போது வரும்?

சமூக வலைத்தளங்கள் குழந்தைகள் மனதில் விடத்தை விதைக்கின்றன.சீன நாட்டில் இத்தகைய விடக்கிருமிகளை அனுமதிப்பதில்லை..நமக்கு தானா தெரியலன்னாலும் பார்த்தாவது...கத்துக்க எப்போது முயலுவோம்?


6 comments :

  1. சமூக சிந்தனையுள்ள நல்ல பதிவுக்கு நன்றி

    வலைச்சரம் அப்படினு 1 இருக்கூகூகூகூகூகூகூகூகூகூகூகூ.......

    ReplyDelete
  2. ஆசிரியர்களின் கையை மட்டுமல்ல,
    வாயைக் கூட கட்டிப்போட்டுவிட்டார்கள்
    இதுபோன்ற நிகழ்வுகளை எல்லாம் பார்த்தபிறகும் கூட
    நம் பாதையினை , மறுபரிசீலனை செய்யாவிட்டால், என்ன செய்வது?

    ReplyDelete
  3. அருமையான கருத்து சகோதரி!

    ReplyDelete
  4. நெனச்சா ரொம்ப கேவலமா தான் இருக்கு அக்கா!:(((

    ReplyDelete

  5. மாணவர்களுக்கு சமூகத்தில் பொறுப்பை அளித்து,சமூகக்கடமையை உணரவைக்கும் பாடத்திட்டம் எப்போது வரும்?
    ஏங்கவைக்கும் கேள்விகள்..

    ReplyDelete
  6. ஆசிரியர்களும்,பெற்றோர்களும்,சமூக ஆர்வலர்களும் சேர்ந்து உடன் களத்தில் இறங்கி,குழந்தைகளை சமூகச் சீரழிவிலிருந்து மீட்கப் போராடவேண்டும்..!
    போராட்ட வடிவம்....கலையாகவோ,இலக்கியமாகவோ இருக்கலாம்..!..யார் முன்னெடுப்பது..?

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...