World Tamil Blog Aggregator Thendral: 2014 ஆண்டின் நினைவலைகள்

Wednesday, 31 December 2014

2014 ஆண்டின் நினைவலைகள்

.

சனவரியில்

*நீண்ட நாள் ஆசையான சென்னை புத்தகக்கண்காட்சிக்கு சென்று கைநிறைய புத்தகங்கள் வாங்கி வந்தது  மறக்க முடியாத ஒன்று....

*12.01.14இல் ஆலங்குடி முகநூல் நண்பர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு அனைவரையும் அறிந்து கொண்டது.

*எனது பிறந்த நாளை பள்ளிக் குழந்தைகள்  கொண்டாடியது...

பிப்ரவரியில்

*கறம்பக்குடியில் த.மு.எ.க.ச வின் கவிதைப்பயிலரங்கில் கலந்து கொண்டது.

*வழி தவற இருந்த பதினொன்றாம் வகுப்பு மாணவிகளை நல்வழிப்படுத்தியது.

மார்ச்சில்

* தஞ்சை புத்தகக்கண்காட்சியில் கரந்தை அண்ணா ஜெயக்குமார் மற்றும் அவர்களின் துணைவியாரைச் சந்தித்தது..

*30.03.14 இல் தூப்புக்காரி நாவலாசிரியர் மலர்வதியிடம் பேசியது.



ஏப்ரலில்

*06.04.14 இல் முகநூலில் பைந்தமிழ் குழு ஆரம்பித்தது.

மே மாதத்தில்

*06.05.14 உறவுகளுடன் குரங்கணி மலைப்பகுதியில் சுற்றுலா சென்றது.

*17 ,18 தேதிகளில் கணினி பயிற்சி வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக்கில் கலந்து கொண்டது.

*என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வாக 23.05.14 அன்று கின்னஸ் சாதனை பதிவு நிகழ்வில் கவிதை வாசித்தது.

சூன் மாதத்தில்

*27.06.14இல் மறக்க முடியாத விருதாக” புரட்சித்தென்றல்”கின்னஸ் சாதனையில் கவிதை வாசித்தமைக்காக பெற்றது..

சூலை மாதத்தில்

*13.07.14இல் பள்ளிக்குழந்தைகளுடன் அருங்காட்சியகம் சென்றது.

ஆகஸ்ட் மாதத்தில்

*15.0.14இல் எங்கள் பள்ளிக்குழந்தைகள் சுதந்திர தினவிழாவில் ஆயுதப்படை மைதானத்தில் சிறப்புடன் நடனமாடியது

*24.08.14இல் கவிதைகளால் இணைவோம் என்ற நிகழ்வில் கலந்து கொண்டு புதிய தோழர்களைச் சந்தித்தது.

*29.08.14இல் அம்மாவின் நினைவு நாளில் உண்டு உறைவிடப்பள்ளி மாணவர்களுடன் கழித்தது.

செப்டம்பர் மாதத்தில்
*14.09.14இல் வலைப்பூ விருது பெற்றது.

*27.09.14-29.09.14 ஆகிய மூன்று நாட்கள் பறை பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டது.

*26 வருட ஆசிரியப்பணியில் கவிராசன் அறக்கட்டளை மூலம் 05.0914 அன்று நல்லாசிரியர் விருது பெற்றது.

அக்டோபர் மாதத்தில்

*11.10.14இல் வலைப்பூவில் வலைச்சரப்பணியில் ஒருவாரம் செயல்பட்டது.

* கவிஞர் வைகறை  ஏற்பாடு செய்த கவிஞர்கள் சந்திப்பில் கலந்து கொண்டது.

*26.10.14 அன்று மதுரையில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பில் எனது 2ஆவது கவிதை நூலான ஒரு கோப்பை மனிதம் நூல் வெளியிடப்பெற்றது மறக்க முடியாத ஒன்று.

நவம்பர் மாதத்தில்
*.01.11.14இல் முகநூலில் இணையும் கரங்கள் குழுவை ஆரம்பித்தது.

*09.11.14 இல் புதுகையில் ஒரு கோப்பை மனிதம் நூல் அறிமுக விழா நிறைவாக நடந்தது.

*14.11.14 இல் முதல் முதலாய் எங்கள் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடியது.

டிசம்பர் மாதத்தில்
*05.12.14 பத்தாம் வகுப்பு செய்யுள் பகுதிகளை திரைப்படமாக்கியது.

*09.12.14இல் மலைவாழ் குழந்தைகளைச் சந்தித்தது.

*14.12.14இல் தினமலர் நாளிதழில் ஒரு கோப்பை மனிதம் கவிதை நூல் வெளியீட்டு விழா குறித்த எனது பேட்டி வெளியானது..

*27.12.14 அன்று மணப்பாறை லயனஸ் மாநாட்டில் முதல் முறையாக மேடைப்பேச்சாளராக பேசியது.

*27.12.14 அன்று மாலை கம்பன் கவியரங்கில் எதிர்பாராத விதமாக கவிதை வாசித்தது...

என் வாழ்வில் மறக்க முடியாத ஆண்டாக 2014 ஆம் ஆண்டு அமைந்துள்ளது...பல ஏற்றங்கள் என் வாழ்வில் இவ்வாண்டில் நிகழ்ந்துள்ளன...பல நல்ல நட்புகள் உறவுகளை இவ்வாண்டு தந்துள்ளது.மனிதர்களின் சுயரூபங்களை எனக்கு வெளிக்காட்டி என்னை பக்குவப்படுத்தியுள்ளது....

நிறைகளாலும் குறைகளாலும் நான் பாதிக்கப்படாதவாறு என்னை சீர் படுத்தியுள்ளது...
நன்றி 2014 ஆண்டே சென்று வா..வரும் ஆண்டும் உன்னைப்போலவே அமைய எனக்கு வரம் தந்து செல்..

13 comments :

  1. so.......ஆண்டு முழுக்க பயனுள்ளதா கழித்திருகீங்க!! இதில் நாம் இருந்த போழுதுகளுக்காய் நன்றி அக்கா! புத்தாண்டு மேலும் பயனுள்ளதாக அமையட்டும்:)

    ReplyDelete
  2. நிறைவான நினைவுகள்.

    ReplyDelete
  3. 2015 சிறக்கவும் நிறைய எழுதவுமாய் வாழ்த்துக்கள்/

    ReplyDelete
  4. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. "அன்பும் பண்பும் அழகுற இணைந்து
    துன்பம் நீங்கி சுகத்தினை பெறுக!"

    வலைப் பூ நண்பரே / சகோதரியே!

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (2015)

    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspoty.fr

    ReplyDelete
  6. பயனுள்ள நிறைவான ஆண்டு தங்களுக்கு! சகோதரி!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    அன்புடனும் நட்புடனும்

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  7. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    அன்புடனும் நட்புடனும்

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  8. வாழ்க வளமுடன்
    இனிய 2015 புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  9. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. எத்தனை நல்ல பல நல்ல பணிகள் செய்துள்ளீர்கள். அதையும் மாதவாரியாக போட்டு அசத்தியுள்ளீர்கள். மனம்நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. வணக்கம்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  12. ஆஹா அருமைத் தோழியே பயனுள்ள ஆண்டாக களித் துள்ளமை நிச்சயம் சிறப்பே மேலும் நற்பணிகள் தொடர என் வாழ்த்துக்கள்...! இனியா புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  13. புத்தாண்டு மேலும் சிறப்பாக அமைய எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...