World Tamil Blog Aggregator Thendral: velunatchiyar -வேலு நாச்சியார் நினைவு நாள்

Wednesday 24 December 2014

velunatchiyar -வேலு நாச்சியார் நினைவு நாள்

வேலு நாச்சியார் நினைவு நாள்

ஜான்சி ராணியை போற்றும் நாம்,அவளுக்கு முன்பே 75 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சிவகங்கையின் அரசி, ஆங்கிலேயரை எதிர்த்து போராடி வெற்றி பெற்ற வீரமங்கை வேலுநாச்சியாரை அறியாமல் இருப்பது வேதனையே..

எனது எம்ஃபில் ஆய்விற்காக வேலுநாச்சியாரை தேர்ந்தெடுத்த போது என்னில் நுழைந்து என்னோடு வாழ்ந்து கொண்டிருக்கும் மாவீரப்பெண்மணி....

காளையார்க்கோவிலில் ஆங்கிலேயன் பான்ஜோர், தனது கணவர் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரையும் இளையமனைவி கௌரி நாச்சியாரையும் மறைந்திருந்து சூழ்ச்சியாக கொலை செய்து விட்டபின் ஆங்கிலேயரைப்பழிவாங்க விருப்பாட்சி மன்னர் உதவியுடன் எட்டு ஆண்டுகள் மறைந்திருந்து,திப்புசுல்தான் உதவி பெற்று பெரும் படைகளுடன் போராடி வெற்றி பெற்ற வீரத்திருமகளின் நினைவுநாள் இன்று...

வீரமங்கை மட்டுமல்ல,தன்னைக்காட்டி கொடுக்க மறுத்ததற்காக தனது உயிரை இழந்த உடையாளுக்காக, தனது கணவன் இறந்த போதும் கழற்றாத தாலியைத் தனக்காக உயிர்நீத்த உடையாளுக்காக அர்ப்பணித்த தாயவள்.....




இவரது படையில்  உடையாள் படை என பெண்கள் படை இருந்ததாக வரலாறு கூறுகின்றது. முதல் தற்கொடைப்போராளியாகத்திகழும் குயிலி இப்படைக்குத்தலைமை தாங்கி சிவகங்கை அரண்மனையை பிடிக்கும் போரில் தன் உடல் முழுதும் நெய் ஊற்றி எரித்து ஆங்கிலேயரின் ஆயுதக்கிடங்கை சிதைத்து வேலுநாச்சியாரின் வெற்றிக்கு வித்திட்ட வீரமகள்.. குயிலி .தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவளையும் தனது மகளாக போற்றியவர் வேலுநாச்சியார்..

ஏழு மொழிகளில் வல்லமை பெற்றவர்.தனது திருமணத்திற்குச்சீதனமாக குதிரை வேண்டும் என தன் தந்தையிடம் கேட்டவர்...சாதிமதம் பாராத தாயவளின் நினைவுநாள் இன்று....

போற்றுவோம் தமிழகத்தின் வீரமங்கையை...

8 comments :

  1. வீர மங்கை வேலு நாச்சியாரின் நினைவினைப் போற்றுவோம்
    வாழ்க வாழ்க என வாழ்த்துவோம்

    ReplyDelete
  2. மறக்கப்பட்ட வரலாறா, மறைக்கப்பட்ட வரலாறா... வீரமங்கை நினைவைப் போற்றுவோம்.

    ReplyDelete
  3. மெய்சிலிர்கிறது அக்கா! ஆம் போற்றுவோம்!

    ReplyDelete
  4. தமிழக வரலாற்றில் மிக முக்கியமான பங்காற்றியவரைப் பற்றிய தங்களின் பகிர்வு சிறப்பாக உள்ளது.

    ReplyDelete
  5. வீரம் விலைபோகாது! அருமை!
    போற்றுகின்றேன் சகோதரி!

    இனிய திருநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. இவரது வரலாற்றை திரு கரந்தை ஜெயக்குமார் வலையில் வாசித்து வருகிறேன்! மெய்சிலிர்க்க வைக்கிறது! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  7. வீர மங்கை வேலு நாச்சியாருக்கு எமது வீரவணக்கம்.

    ReplyDelete
  8. வீர வேங்கை வேலு நாச்சியாரைப் பற்றி வலைப்பதிவுகளில் தற்போது அதிகமாக வாசிக்க முடிவதில் சந்தோஷம்...

    அவரின் வரலாற்றை உலகறியச் செய்வோம்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...