World Tamil Blog Aggregator Thendral: தெரியவில்லை

Monday 27 January 2014

தெரியவில்லை



நான் செய்தது சரியான்னு தெரிய வில்லை .....இப்படி கூற  வேண்டி வரும் என நினைத்ததும் இல்லை .காலையில் ஏழாம் வகுப்பு மாணவி ஓடி வந்தாள் ..+1படிக்கும் அக்கா பள்ளிக்கு வெளியே ஒரு பையனுடன் பேசுனாங்க உடனே கிளம்பிப் போய்ட்டாங்க நீங்க கேளுங்கம்மா என்று  பதட்டமாய்க் கூறினாள்  .என்ன செய்வதென தெரியாமல் அவளது தோழிகளை  கேட்டால் அவள் அம்மா கடையில் இருக்காங்க அழைச்சிட்டு போனது அவ மச்சான் னு சொன்னார்கள் நானும் சரின்னு விட்டு விட்டேன் .மாலை பள்ளி முடிந்ததும்  வெளியே சென்ற பெண் உள்ளே நுழைந்தாள்  .என்னவென்று விசாரித்த போது இது வழக்கமான ஒன்று அவளைஅன்பாக கூறினாலும் திருந்தவில்லை மேலும் கேட்டு ஏதாவது பிரச்சனை என்றால் என்ன செய்வது என்று வகுப்பு ஆசிரியர்கள் வெறும் பார்வையாளராக இருக்கும் நிலை என்னால் பொறுக்க  முடியாமல் அவளை கூப்பிட்டு சற்று கண்டிப்பாய் அவள் செய்வது தவறு எனக் கூறினேன் சக ஆசிரியர்கள் என் செயலை தேவையில்லாத ஒன்றாய்க்  கருதுகின்றனர். நான் செய்யாமல் விட்டால் சரியான ஆசிரியரல்ல .ஆசிரியர் இரண்டாவது பெற்றோர் எனில் இப்படி தடம் மாறும் குழந்தைகளை  கண்டிக்காமல் விடுவது முறையா ?.மீண்டும் குழந்தைத் திருமணத்திற்கு திரைப்படங்களும் ,தகவல் தொடர்பு சாதனங்களும் தூண்டுகின்றன .எல்லா படங்களிலும் பள்ளிக் குழந்தைகளே காதல் செய்வதே குறிக்கோளாய்க் காட்டுகின்றன .தனக்கென ஒரு ஆள் இல்லையென்றால் அது கேவலமாய் கருதும் நிலையை குழந்தைக ள் மனதில் தூண்டிவிட்டனர் .இப்படி எங்கள் பள்ளியில் மேலும்சில மாணவிகள் நீங்கள் யார் எங்களைக் கேட்பது என்ற எண்ணத்தில்நடந்து கொண்டுள்ளனர் . பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகள்கெட்டுப் போவதைப் பார்த்து கொண்டு அமைதியாக இருக்க வேண்டுமா ?கேட்டால் தற்கொலை செய்து கொள்வேன்னு மிரட்டுகின்றனர் ,தவறான பாதையில் செல்வது அறிந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் கண்ணீர் வடிக்கின்றனர்சில பெற்றோர் .இது மட்டுமல்ல கண்டிப்பதே தவறு என்பது போல் எங்களின்  .இந்நிலை எங்கள் பள்ளியில் மட்டுமல்ல அனைத்து பள்ளிகளிலும் நடக்கின்றது .குழந்தைகளை சீராக்குவது ஆசிரியரின் கடமை அல்லவா இப்படி அவர்களை கட்டிப் போட்டால் வருங்காலச் சமுதாயத்தின் நிலை ?

8 comments :

  1. உங்களின் ஆதங்கம் புரிகிறது..இப்படித்தான் பல பள்ளிகளில் கண்டிக்க முடியவில்லை என்று ஆசிரியர்கள் கூறுவதைக் கேட்டிருக்கிறேன்..
    நீங்கள் செய்தது சரிதான்..

    ReplyDelete
  2. எனக்கு என்னமோ நீங்கள் செய்தது சரி என்றே தோன்றுகிறது. இதில் வருத்தம் கொள்ள என்ன இருக்கிறது. பிள்ளைகளுக்கு கல்வியையும் நற்குணங்களையும் அன்றாடம் நல்லபழக்க வழக்கங்களையும் ஆசிரியர் பெற்றோர் போன்றும் நண்பர்களாகவும் இருந்து கற்றுக் கொடுப்பது சிறந்த வழி என்றே எண்ணத் தோன்றுகிறது. என்னெனில் அதிக நேரம் பிள்ளைகள் பெற்றோருடன் இருப்பதை விட பாடசாலையில் தான் இருக்கிறார்கள். என்பதும் ஒரு காரணம். அத்துடன் பிள்ளைகளோடு பிள்ளைகளாக வைத்து சொல்லிக் கொடுக்கும் போது கொஞ்சம் கேட்பார்கள்.
    இது எப்போதும் எல்லோருக்கும் சாத்தியம் என்று சொல்லமுடியாது. கையாளும் விதம் ஒவொருவருக்கு ஒவ்வொருமாதிரி இருக்கும். பார்த்து தான் செயல் பட வேண்டும் இல்லையா.
    நன்றி வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  3. நாமும் கண்டித்துக் கொண்டுதான் இருக்கிறோம். பலன்தானில்லை. இன்றைய கல்விமுறை, படிக்க மட்டும்தான் கற்றுக் கொடுக்கிறதே தவிர,வாழ்வது எப்படி என்ற வழியினைக் கற்றுத் தருவதாக இல்லையே? மதிப்பெண் பெற்றால் போதும் என்றல்லவா ஆசிரியரைத் துளைக்கிறார்கள்
    இச்சமூகம் தவறான பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டது. ஆசிரியர்களின் கரங்களும். வாய்களும் கட்டப்பட்டுள்ளன,

    ReplyDelete
  4. குழந்தைகளை குட்டிச்சுவர் ஆக்குவதே இந்த பெற்றோர்கள் தான்...

    ReplyDelete
  5. எனது பதில் முகநூலில் இருந்ததே பார்த்தீர்களா...

    ReplyDelete
  6. கண்டித்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் பிள்ளைகள் இருக்கிறார்களா என்பதே கேள்வி. தனிமையில் அழைத்து நல்ல முறையில் தன்மையாக எடுத்துச்சொன்னால் ஒருவேளை மனம் மாறலாம். ஆனால் புரிந்துகொள்ளவே மாட்டேன் என்று வம்பாயிருப்பவர்களை என்ன செய்தும் திருத்த முடியாது. ஒரு நல்லாசிரியராய் கடமையைச் செய்திருக்கிறீர்கள் என்ற மனநிறைவு கொள்ளுங்கள்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...