ஒரு வீட்டில் என்னென்ன பொருட்கள் இருக்க வேண்டுமென பார்த்து வாங்குகிறோம்.அழிந்து போகும் பொருட்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
தமிழ் செம்மொழி உயர்மொழி என பெருமை பேசும் நாம், நம் வீட்டில் அழியாச்செல்வத்தை தரக் கூடிய நம் தாய்மொழியின் சிறப்பை
உணர்த்துகின்ற தமிழ்நூல்கள் சிலவற்றையாவது வைத்திருக்க வேண்டாமா?
அப்படியெனில் என்னென்ன நூல்கள் நாம் வைத்திருக்க வேண்டும்.அதுவும் ஒரு தமிழாசிரியர் வைத்திருக்க வேண்டிய தரமான நூல்கள் எவைஎவை என்ற என் தேடல்களுக்கு விடையாக இன்றைய கணினி பயிற்சியில் எங்கள் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் தந்த கருத்துக்கள் அமைந்தன.
உங்கள் வீட்டில் அவற்றில் சிலவாயினும் கட்டாயம் இருக்க வேண்டும்.நம் தாய்மொழியின் பெருமை உணர்த்தும் நூல்கள் நீங்கள் வைச்சுருக்கீங்களா?
பாருங்க..
இலக்கிய நூல்கள்
----------------------------
திருக்குறள்
சங்க இலக்கியம்
பதினெண்கீழ்க்கணக்கு
சிலப்பதிகாரம்
மணிமேகலை
கம்பராமாயணம்
நீதிநூல்கள்
தனிப்பாடல்திரட்டு
கவிதைகள்
-------------------------
பாரதியார்
பாரதிதாசன்
கண்ணதாசன்
வைரமுத்து
அப்துல்ரகுமான்
காசிஆனந்தன்
பட்டுக்கோட்டையார்
தமிழ் ஒளி
புதுக்கவிதைகள்
நவீனக்கவிதைகள்
ஹைக்கூ
ஈழக்கவிஞர்கள்
இலக்கண கண்ணாடி
--------------------------------
தொல்காப்பியம்
நன்னூல்
யாப்பருங்கலக்காரிகை
தண்டியலங்காரம்
நம்பியகப்பொருள்
புறப்பொருள் வெண்பா மாலை
நற்றமிழ் இலக்கணம்
அடிப்படைத்தமிழ் இலக்கணம்
தமிழ் இலக்கணம்
இலக்கணகொத்து
பீடுநடை போட உரைநடைகள்
-----------------------------------------------
பாரதியார் கட்டுரைகள்
புதுமைப்பித்தன்
வ.சுப.மாணிக்கம்
பெருமாள்முருகன்
எஸ்.ராமக்கிருஸ்ணன்
பொ.வேல்சாமி
ஆ.சிவசுப்பிரமணியன்
நாஞ்சில் நாடன்
மாடசாமி
தொ.பரமசிவம்
வரலாற்றுநூல்கள்
--------------------------------
மொழி வரலாறு
தமிழ் இலக்கிய வரலாறு
குழந்தை இலக்கிய வரலாறு
தமிழர் சால்பு
மயிலை சீனி.வெங்கடசாமி
கார்த்திகேசு சிவத்தம்பி
வாழ்க்கை வரலாறு
--------------------------------
பாரதியார்
என்சரித்திரம்
பாவலர் சரித்திர தீபகம்
தமிழ் புலவர் வரலாற்றுக்களஞ்சியம்
பன்னிரு திருமுறை வரலாறு
அகராதிகள்
-------------------
அபிதான் சிந்தாமணி
தமிழ் லெக்சிகன்
தமிழ் கையகராதி
க்ரியாவின் தற்காலத்தமிழகராதி
தொகையகராதி
ஆங்கிலம் தமிழகராதி
மயங்கொலிச் சொற்பொருள் அகரமுதலி
சுராவின் தமிழ்-தமிழ்-ஆங்கிலம்
கையேடுகள்
-------------------
தமிழண்ணல்
ம.நன்னன்
சு.சக்திவேல்
பயன்பாட்டுத்தமிழ்
தமிழ்நடைக்கையேடு
சொல்வழக்கு கையேடு
இதழ்கள்
----------------
நாளிதழ்கள்
தரமான வார இதழ்கள்
தரமான சிற்றிதழ்கள்
சிறந்த தமிழ் பற்றுள்ள மனித நேயமிக்க முதன்மைக்கல்வி அலுவலர் எங்களுக்கு கிடைத்திருக்கிறார்.ஒரு அதிகாரி என்ற
பயமின்றி நாங்கள் இருந்தோம்.தமிழ் தண்மையானது என்பதற்கு இவரே உதாரணம் .முகப்பூச்சு இல்லை .தமிழை நேசிப்பவள் என்பதால் உணர்ந்து கூறப்பட்ட பதங்கள்.இதன் மூலம் என் மனம் நிறைந்த நன்றியை அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
மறக்ககூடாத புத்தக பட்டியல்
ReplyDeleteநன்றி
உண்மை .
Deleteஇதைவிட சிறந்த தொகுப்பு ஏது...? அதுவும் முதலில் நம்ம ஐயன்...!
ReplyDeleteநன்றி சார்.
Deleteஅருமையான பதிவு.
ReplyDeleteநன்றி.
நன்றி வருகைக்கு.
Deleteசகோதரிக்கு வணக்கம்
ReplyDeleteகருவி நூல்கள் எனும் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் வகுப்பை மறந்து விட முடியுமா! சிறப்பானதொரு வழிகாட்டுதலைத் தந்துள்ளார்கள். இதிலுள்ள புத்தகங்களைச் சேர்த்தும் படித்தும் வருகிறேன். நல்லதொரு பகிர்வுக்கும் வகுப்பை மீண்டும் நினைவு படுத்தியமைக்கும் நன்றிகள் சகோதரி..
நன்றி சகோ.புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Deleteநல்லது ஒரு சில என் கிட்ட இருக்கிறது. முக்கியமாக திருக்குறள். தப்பினன். நன்றி.....! தோழி
ReplyDeleteநலமா தோழி .இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். நன்றி.
Deleteமுதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள்
ReplyDeleteகருவி நூல்கள்
எனும் தலைப்பில் பேசியதைக்
கேட்டுக் வாய்ப்பு கிடைத்தமையை
எண்ணி மகிழ்கின்றேன்
சகோதரியாரே
நன்றி
நன்றி சார்.
Deleteவலைச்சர அறிமுகத்தில் தங்களின் தளம் பார்க்க கிடைத்துள்ளது... மிக்க மகிழ்ச்சி....
ReplyDeleteவாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
mikuntha nandri sir
Deleteவணக்கம். இன்றைய வலைச்சரத்தில் தங்கள் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி.
ReplyDeletehttp://blogintamil.blogspot.com.au/2014/01/blog-post_21.html
வணக்கம் .தோழி .வலைசரத்தில் கோர்த்தமைக்கு மிக்க மகிழ்ச்சி .வாழ்த்துகள் மீண்டும் வலைச்சரம் கோர்வைபணி சிறக்க .
Deleteநல்லதொரு பட்டியலுக்கு நன்றி கீதா. சில புத்தகங்கள் வைத்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சியுடன் அனைத்தையும் சேர்க்கிறேன் தோழி!
ReplyDelete