இது நாள் வரை எத்தனையோ திருவிழாக்களுக்கு சென்றுள்ளேன் . மனதை நிறைக்கும் விழாவாக எதுவும் இல்லை .பல வருடங்களாக கனவாய் இருந்தது நிறைவேறியது .இன்னும் கண் முன் கண்டகாட்சிகளின் தாக்கம் மறையவில்லை .
இது நனவு தானா என்று அடிக்கடி என்னும் படி என்னைக் கவர்ந்தது .777 கடைகள் .அறிவு தேடலின் விளைவாய் அலைகடலென மக்கள் கூட்டம் .குழந்தைகள் கூட புத்தகங்களை தேடிய காட்சி ....!
ஒவ்வொரு கடையை விட்டும் வெளியே வர மனமின்றி வந்தோம் நானும் சுவாதியும் ...முதல் நாளிலேயே பை கொள்ளாத புத்தகங்களுடனும்,எழுத்தாளர் எஸ் ,ராமகிருஷ்ணன் பேச்சுடனும் என மகிழ்வாய் ...!
மறு நாளும் புத்தகங்களோடு புத்தகமாய் ...
நிறைய எழுத்தாளர்கள்எங்களுடன் வீட்டிற்கு வந்துள்ளார்கள் ....என்னுடன் பேச ...விரைவில் பேசும் ஆவலுடன் நானும் ....!
இத்தனைக்கும் முத்தாய்ப்பாக
டைரக்டர் எஸ் .பி.முத்துராமன் அவர்களைக் கண்டோம் ...எவ்வளவு எளிமை ..!யாராலும் நம்ப முடியாது. சாதாரணமாக அரங்கில் அமர்ந்திருந்தார்.சுவாதியின் திருமணம் அவர் தலைமையில் நடந்ததென அறிந்தேன் .ஆண்டுகள் பல ஆன பின்னும் சுவாதியை மறக்காமல் அதே அன்புடன் பேசியபோது... .அவரிடம் என் வியப்பை எப்படி சார் இத்தனை எளிமையாய் என கேட்டே விட்டேன் .நிறைய மனிதர்கள் எளிமையாய், யாரும் அறியாமல் வாழ்வதாக கூறினார்.வியப்பின்எல்லையில் நான்...
புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தீர்களா
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி சகோதரியாரே
மகிழ்ச்சி கீதா, நான் வரவேண்டும் என்று நினைத்திருந்தேன்..முடியவில்லை
ReplyDeleteஎளிமையே என்றும் சிறப்பு...
ReplyDeleteவாழ்த்துக்கள்...