World Tamil Blog Aggregator Thendral: கெட்ட வார்த்தையா டீச்சர்?

Tuesday 8 November 2016

கெட்ட வார்த்தையா டீச்சர்?


கெட்ட வார்த்தையா டீச்சர்?

இன்று மாணவிகளுக்கு அறிவியல் பாடத்தில் உறுப்பு மண்டலங்கள் என்ற பகுதியை நடத்திக்கொண்டு இருந்தேன்.

இறுதியாக இனப்பெருக்க உறுப்பு மண்டலம் என்று கூறிய போது ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்..விழித்த படி..கெட்ட வார்த்தை பற்றி பேசுறேன்னு..

அமீபாவாக இருந்த உயிர் இன்று பகுத்தறிவு பெற்ற மனிதனாக வளரக்காரணமே இனப்பெருக்கம் தான் காரணம்..

உயிர்கள் தங்களின் சந்ததிகளை பெருக்கவே இனிப்பெருக்க உறுப்புகள் உள்ளன...

ஒரு மலருக்கு சூலகமும்,மகரந்தமும் எப்படி உதவுகின்றதோ அதைப்போலவே பெண் இனப்பெருக்க உறுப்பும் ,ஆண் இனப்பெருக்க உறுப்பும்...

உயிர்களை இவ்வுலகத்திற்கு தருவதற்காக உள்ள உறுப்புகளின் பெயர்களைத் தான் இன்று கெட்ட வார்த்தையாக மக்கள் பயன் படுத்துகிறார்கள்..இது சரியா என்றேன்?..

இல்ல டீச்சர் ரொம்பத்தப்பு என்றனர்...கண் ,காது போல அதுவும் ஒரு உறுப்பு தான் அதை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டும் என்ற போது உணர்ந்து கொண்டனர்.

வளரிளம் பருவத்தில் உள்ள அக்குழந்தைகளிடம் இன்னும் பேச வேண்டும்...

5 comments :

  1. vadhyar ayya ppatthhu soodhanama teach pannu...
    paliyal casele book pannapporanga...appu

    ReplyDelete
  2. நல்லதொரு விழிப்புணர்வு!

    ReplyDelete
  3. பக்குவத்துடன்
    தரவுகளோடும் பேச வேண்டும்..
    மாதவிடாய் குறித்து தெளிவாக பாடம் எடுத்த மேல் நிலை வகுப்பாசிரியர் ஒருவர் (எனது நண்பர் ) நினைவில் வருகிறார்.

    ReplyDelete
  4. குழந்தைகளிடம் கவனமாக சொல்லித்தரும்போது தெளிவுபிறக்கும். அண்மையில், இலண்டனிலிருந்து வெளிவருகின்ற கார்டியன் இதழில் இக்கருத்தை மையமாக வைத்து வெளியான கட்டுரையைப் படித்தேன். நுணுக்கமாக நீங்கள் பகிர்ந்த விதம் அருமை.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...