World Tamil Blog Aggregator Thendral: பள்ளி பரிமாற்றம் திட்டம்.-அனைவருக்கும் கல்வித்திட்டம்

Tuesday, 25 October 2016

பள்ளி பரிமாற்றம் திட்டம்.-அனைவருக்கும் கல்வித்திட்டம்

அனைவருக்கும் கல்வித்திட்டம்-பள்ளி பரிமாற்றம் திட்டம்[25.10.16]

நகரத்து பள்ளிகளுடன் கிராமத்து பள்ளிகள் இணைப்பு

                                        ,கிராமத்து பள்ளிக்குழந்தைகள் நகரத்து பள்ளிகளின் வசதிகளை பயன்படுத்திக்கொள்ளவும்,நகரத்து குழந்தைகளுடன் இணைந்து பழகவும்,நகரத்து ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை உணரவும்,அவர்களின் மனதில் நாம் கிராமத்தில் படிக்கின்றோம் என்ற தாழ்வு மனப்பான்மையை மாற்றவும் அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.இது போல் புதுக்கோட்டை மாவட்டத்தில் 22 நகரப்பள்ளிகள் 22 கிராமப்பள்ளிகளுடன் இணைத்து இத்திட்டம் செயல்படுகின்றது.ஒரு ஆண்டுக்கு 12 நாட்கள் இத்திட்டம் செயல்படும் படி திட்டம்தீட்டப்பட்டு வழிகாட்டப்பட்டுள்ளது.

அதன்படி 25.10.16 அன்று காலை 9.00 மணியளவில் கரம்பக்குடி ஒன்றியத்தைச் சேர்ந்த செவ்வாய்ப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இருந்து ,புதுக்கோட்டை நகரத்தில் உள்ள  சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு [எங்கள் பள்ளி] 20 மாணவிகளும் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமிகு சந்திரா அவர்களும் பொறுப்பாசிரியர்கள் இருவரும் வந்தனர்.

அவர்கள் பள்ளியில் நுழைந்ததும் அவர்களை என் பள்ளி ஜே.ஆர்.சி. மாணவிகள் வரவேற்றனர்.

பள்ளியில் அவர்களுக்காக வழிபாட்டுக்கூட்டம் நடந்தது .பதினொன்றாம் வகுப்பு மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வித்தனர்.






செவ்வாய்ப்பட்டி தலைமை ஆசிரியர் தனது வாழ்த்துரையில் பள்ளிக்கு வந்துள்ளது மகிழ்வாக உள்ளதென்றும் படிப்பில் மட்டுமின்றி ஒழுக்கத்திலும் மாணவிகள் சிறந்து விளங்க வேண்டும் என்று வாழ்த்துரை வழங்கினார்கள்.

அறிமுகம்


மாணவிகளின் பெயர்களை அறிந்து கொள்ளும் வகையில் வட்டமாக நின்று பந்தை தூக்கிப்போட்டு தங்கள் பெயர்களை வரிசையாக சொல்லி விளையாடினர்.

வரவேற்பு


பள்ளிக்கு முதல்முதலாக வந்த குழந்தைகட்கு பூங்கொத்து ,சாக்லேட் கொடுத்து எட்டாம் வகுப்பு மாணவிகள் அன்புடன் வரவேற்றனர்.

பாடம்

முதல்நாளான இன்று தமிழ்ப்பாட வகுப்பு ....பள்ளியின் தமிழாசிரியர் சுமதி அவர்கள் காட்டுயிரிகள் என்ற உரைநடைப்பாடத்தை மிகச்சிறப்பாக விலங்குகளின் முகமூடிகளை மாணவிகளுக்கு அணிவித்து ,காட்டுவிலங்குகளின் ஒலிகளை வகுப்பில் ஒலிக்கச்செய்து  வகுப்பையே காடாக்கி பாடத்தை நடத்திய விதம் மிக அருமை.

கலைப்பயிற்சி

பள்ளியின் தையற்கலை ஆசிரியர்கள் திருமிகு யோகேஸ்வரி ,திருமிகு விமலா மற்ரும் ஓவிய ஆசிரியர் ஜெயா ஆகியோர் மாணவிகளுக்கு வீணாகும் பொருள்களிருந்து பூங்கொத்து செய்வதையும்,வண்ணத்து பூச்சி செய்யும் முறை,பூங்கொத்து சாடி செய்யும் முறையையும் மிக அழக்காக சொல்லிக்கொடுத்தனர். விழிகள் விரிய மாணவிகள் மிக ஆர்வமாய் கற்றுக்கொண்டனர்.

I.C.T.பயிற்சி

மாணவிகளுக்கு மதிய உணவு இடைவேளைக்குப்பின் தமிழாசிரியர் திருமிகு கிருஷ்ண வேணி அவர்கள் தலைமேல் வீழ்த்தி கருவி மூலம் காட்டுவிலங்குகள் குறித்த வீடியோ,ஐம்பூதங்கள் படம்,உணவுச்சங்கிலி நகரும் காட்சி,ஒரு நீதிக்கதை,ஆகியவற்றை மாணவிகளுக்கு காட்டி மாணவிகள் மனதில் நீங்கா இடம் பெற்றார்.

செயல்திட்டம்







                                 பள்ளியின் ஆசிரியர் திருமிகு கீதா அவர்கள் மாணவிகளை ஐந்து குழுக்களாகப்பிரித்து , காட்டுவிலங்குகள் மாதிரிகளை வைத்து காடு தயாரிக்கவும்,சிறுவர் கதைப்புத்தகங்களைத்தந்து கதை விமர்சனம் எழுதவும்,வண்ணத்துப்பூச்சி மரம் ஒயர் மற்றும் சாக்லேட் பேப்பரிலிருந்து தாயரிக்கவும்,செய்தித்தாளிலிருந்து உயிர் எழுத்து ,மெய் எழுத்து சொற்களைக் கண்டுபிடிக்கவும் கூறினார்..மாணவிகள் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பாடுகளை மிகச்சிறப்பாகச் செய்தனர்.

வழியனுப்புதல்

மாலை 4.30 மணியளவில் செவ்வாய்ப்பட்டி மாணவிகள் அவர்கள் பள்ளிக்கு போக மனமின்றி புறப்பட்டனர்.

காலையில் வரும்போது சிறிது அச்சத்தோடு வந்த குழந்தைகள் போகும் போது போக மனமின்றி சென்றது எங்கள் பள்ளிக்கு கிடைத்த வெற்றி.27.10.16 அன்று எங்கள் பள்ளிக்குழந்தைகளுடன் நாங்கள் செல்ல உள்ளோம்....
                                                                                         
                                                                                      மீண்டும் சந்திப்போம்.
                                                                                              அன்புடன் கீதா.


5 comments :

  1. மிகவும் அருமையான திட்டம். வாழ்த்துகள். படங்களும் பகிர்வும் சிறப்பாக உள்ளன. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. விழா நிகழ்வுப்பகிர்வினை நுணுக்கமாக புகைப்படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. இனிய தீபாவளி வாழ்த்துகள்

    ReplyDelete
  4. நல்ல திட்டம் . 85 யிலேயே இது போல் நாங்கள் ஆலங்குடியிலிருந்து , புதுக்கோட்டை R.C பள்ளிக்கு வந்துள்ளோம்
    நன்றி

    ReplyDelete
  5. அருமையான திட்டம் வாழ்த்துக்கள்.
    படங்கள் அழகு.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...