World Tamil Blog Aggregator Thendral: நீங்க வந்துட்டீங்களா புதுகை புத்தகத்திருவிழாவிற்கு..

Wednesday, 30 November 2016

நீங்க வந்துட்டீங்களா புதுகை புத்தகத்திருவிழாவிற்கு..


நீங்க கிளம்பிட்டீங்களா புதுகை புத்தகத்திருவிழாவிற்கு..
 
இன்று கவிஞர் முத்துநிலவன் அவர்கள் பேசுகின்றார்.

மனம் மீள முடியாத துன்பத்தில் மூழ்கும் போதெல்லாம் எனை மீட்க புத்தகக்கடைக்குச் சென்று விடுவேன்..
புன்னகையால் என்னை வரவேற்று என்னை மீட்டு அவை எனக்கே என்னை தரும்...

எனக்கு மட்டும் இல்லை இது என்பதை புத்தகத்திருவிழா எனக்கு உணர்த்தியுள்ளது..

முதல் நாள் பேசிய எழுத்தாளர் எஸ் .ராமக்கிருஷ்ணன் அவர்களும்,
நேற்று பேசிய பேச்சாளர் மதுக்கூர் ராமலிங்கம் அவர்களும் தங்களை மீட்க புத்தகங்களேயே நாடுகின்றனர் என்று கேட்ட பொழுது..
மேலும் புத்தகங்களில் கரைந்து போகின்றேன்.

என்னை வழி நடத்திய புத்தகங்களை எனது மாணவிகளுக்கும் அறிமுகம் செய்ய புதுகை புத்தகத்திருவிழா உதவுகின்றது...

அம்மா உங்க கவிதைகள் ரொம்ப நல்லாருக்கும்மான்னு குழந்தைகள் சொல்லும் போது விருது கிடைத்த மகிழ்வு.

ஒவ்வொரு நாளும் முடியும் போது இன்னும் 4 நாள் தானே இருக்கும் என்ற கவலையும் வருகின்றது.


 புத்தகங்களை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யுங்கள்..

இன்றைய சமூக சீர்கேட்டிலிருந்து உங்கள் குழந்தைகள்
மீள புத்தகங்களே கை கொடுக்கும்..

ஓடி ஓடி மேடையில் மற்றவர்களை ஏற்றி அழகு பார்த்து ,ஒவ்வொன்றையும் திட்டமிட்டு செய்யும் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் வியக்க வைக்கின்றார்...கற்றுக்கொள்ள வேண்டும் அவரிடமிருந்து நிறைய அனைவரும்..எந்த செயலையும் முழு முயற்சியுடன்...இறங்கி பணி செய்வதால் தான் இத்தனை உயரத்திற்கு வர முடியும் என்பதற்கு அவரே உதாரணம்..நன்றி அவருக்கு..

7 comments :

  1. சொன்ன கருத்துக்கள் அனைத்தும் உண்மை...

    ReplyDelete
  2. இன்னும் நான்கு நாட்கள்.... ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவம்....

    தொடரட்டும் புத்தகத் திருவிழா. தமிழகத்தில் இருந்தால் வந்திருக்கலாம்....

    ReplyDelete
    Replies
    1. வெங்கட் நாகராஜ்

      //தொடரட்டும் புத்தகத் திருவிழா. தமிழகத்தில் இருந்தால் வந்திருக்கலாம்....//

      புத்தகத் திருவிழா தமிழகத்தில்தான் இருக்கிறது ஜி :)))))

      ஓஹோ ..... ஒருவேளை நீங்க இப்போ தமிழகத்தில் இல்லை என்பதைச் சொல்லியுள்ளீர்களோ?

      Delete
  3. நல்லவற்றை மட்டும் நல்லவிதமாக எடுத்துச்சொல்லும்
    மிக நீண்ட ’நூல்’கண்டு போன்ற கற்கண்டுப் பதிவு.

    பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. அருமையான பதிவு

    ReplyDelete
  5. நம் எழுத்தை பிறர் ரசித்து பாராட்டுவதை காணும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. மனதிற்கு நிறைவைத் தந்த பதிவு.

    ReplyDelete
  6. எனது கல்லூரிப் பருவத்தில் மனக் குழப்பத்தில் நான் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து இருந்தேன் ஆனால் என்னுடைய புத்தக படிக்கும் பழக்கத்தில் இருந்துதான் நான் அதில் இருந்து தப்பித்து இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.. நான் தற்கொலை செய்யும் எண்ணத்தில் இருந்த எனக்கு அப்போது நான் படித்த ஒரு புத்தகத்தில் உள்ள வரிதான் என்னை இன்று வரை வாழ வைத்து கொண்டிருக்கிறது

    தற்கொலை செய்து கொள்வது என்பது எளிதான செயல் அல்ல ஆனால் அதற்கும் துணிந்த நீங்கள் இன்னும் சிறிது காலம் வாழ முயற்சி செய்து பாருங்கள் அதன் பின் பிரச்சனைகள் பிரச்சனையே இல்லாதது போல ஆகிவிடும் அப்படி ஒரு வேளை மாறவில்லை என்றால் அதன் பின் உங்கள் தற்கொலை முயற்சியை மேற்கொள்ளுங்கள் என்று சொல்லி இருந்தது. அதனை பின்பற்றியதால்தான் நான் இன்று வரை வாழ்ந்து வருகிறேன். இதை ஏதோ எழுதுவதற்காக எழுதவில்லை இது என் வாழ்வில் நடந்த உண்மை

    அதனால் சொல்லுகிறேன் புத்தகம் படிப்பது அது பிரிண்ட் புக் அல்லது ஆன்லைன் வெர்ஷனாக இருந்தாலும் சரி ஏதாவது படித்து கொண்டிருங்கள்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...