World Tamil Blog Aggregator Thendral: அப்பா-திரைப்படம்

Tuesday 5 July 2016

அப்பா-திரைப்படம்



                                                         அப்பா

 பெற்றோர்கள் தங்களது கனவுகளை குழந்தைகள் மீது சுமத்தி பந்தயக்குதிரைகளாக்கி ஓட விட்டு, சமூகத்தால் கற்பிக்கப்பட்ட தவறான பாதையில் செல்ல நாம் எப்படித்துடிக்கிறோம் என்பதை தோலுரித்துக்காட்டுகிறது.

 ஆண்குழந்தை பிறந்த உடன் சமூகத்தை நேசிக்கும் நல்ல மனிதனாக உருவாக்க வேண்டும் என்ற இலட்சியமே நம்மை திரையினுள் இழுத்துக்கொண்டு விடுகிறது.

 பெற்றோர்கள் எதற்கும் லாயக்கில்லாத கௌரவம் என்ற கோடரியால் தங்களைத்தாங்களே வெட்டிக்கொள்வதை சுட்டிக்காட்டுகிறது.





 பிராய்லர் கோழிகளாக பிள்ளைகள் உருவாக்கப்படுவதை எதிர்த்து குரல் கொடுக்கின்றது.

 வாழ்க்கையை குழந்தைகளுக்கு கற்றுத்தர பெற்றோர்கள் கடமைப்பட்டவர்கள் என்பதை உணர்த்துகின்றது.

 முதன்முதலாக திருநங்கைகளை நல்ல பார்வைக்கொண்டு பார்க்க வைத்துள்ளது.

 நீச்சல் பயிற்சியாளரைப் பெண்ணாக காட்டுவதன் மூலம் சமூகத்தில் பெண்களை மரியாதையுடன் அடையாளப்படுத்துகிறது.

 ”அப்பாக்கிட்ட சொல்லமுடிந்த செயல்களையே செய் ”என குழந்தைகளுக்கு தனக்குத்தானே சுயக்கட்டுப்பாடுகளை உண்டாக்க கற்றுத்தருகின்றது. 

பருவவயது மாற்றம் இயல்பான ஒன்றே என்று உணர்ந்த அப்பாவாக குழந்தைகளின் தடுமாற்றங்களைப்போக்கி சகதுணைகளை மதிக்க செய்ய வைக்கின்ற அணுகுமுறைக்கு சமுத்திரகனி அவர்களுக்கு ஒரு ஆசிரியராக மனம் நிறைந்த பாராட்டுக்களை அள்ளித்தர வைக்கின்றது.

 மதிப்பெண்களால் குழந்தைகளின் கழுத்தில் சுருக்கிடப்படுவதை சாட்டையால் அடித்து சுட்டுகின்றது.

 எந்த சமரசமும் இன்றி கோழிப்பண்ணைகள் போல குழந்தைகளை சித்ரவதை செய்கின்ற உண்மையை உலகுக்கு பறை சாற்றுகின்றது.

 தனியார் பள்ளிகளில் பெற்றோர்கள் அவமானப்பட்டு கூனிக்குறுகி நிற்பதைக்காட்டி கலங்க வைக்கின்றது.

பெற்றோர்களின் அறியாமையால் குழந்தைகளின் எதிர்காலம் சீரழிக்கப்படுவதை சுட்டிக்காட்டுகின்றது..

 குழந்தைகளை குழந்தைகளாக நடத்த உணர்த்திய அப்பா திரைப்படத்தின் இயக்குநர் சமுத்திரகனி அவர்களுக்கு சமூகத்தைச் சீரழிக்கின்ற சினிமாக்களுக்கு மத்தியில் எந்த வித ஆபாசமும் இன்றி ,டூயட் இன்றி காசுக்காக விலை போகாமல் சமூக அக்கறையோடு எடுத்திருப்பதற்கு வாழ்த்துகளும் நன்றியும்....

 இப்படிப்பட்ட படங்களே நாட்டுக்குத்தேவை ...

6 comments :

  1. அழகிய விமர்சனம் நன்று

    ReplyDelete
  2. அருமையான கண்ணோட்டம்
    தொடருங்கள்

    ReplyDelete
  3. நல்லதோர் அறிமுகம். சாட்டை பிடித்திருந்தது. அப்பாவும் பார்க்க நினைத்திருக்கிறேன். எப்போது என்பது தான் பெரிய கேள்விக்குறி....

    ReplyDelete
  4. அருமையான விமர்சனம் அம்மா

    ReplyDelete
  5. அவசியம் காண வேண்டிய படம்.....

    ReplyDelete
  6. அருமையான திரைப்படம் என்பது அவசியம் காண வேண்டிய படம்..

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...