World Tamil Blog Aggregator Thendral: சமத்துவம் வந்தாச்சா?....

Sunday, 3 July 2016

சமத்துவம் வந்தாச்சா?....

சமத்துவம் வந்தாச்சா?....

 எத்தனையோ பெண்களை இழந்துள்ளோம்...ஆண்களின் வக்கிரங்களுக்கு இரையாக்கி.... ”இன்று தி இந்து பேப்பர் நிறைய சுவாதிக்கொலையே நிறைந்திருந்தது..

மனம் சுவாதிக்காக அழுதாலும் இதற்கு முன்
சென்னையில் ஈவ்டீசிங்கால் சரிகாஷா ,
தர்மபுரியில் பேருந்தில் எரிக்கப்பட்ட கோகிலவாணி,ஹேமலதா,காயத்ரி,

ஓமலூரில் கிணற்றில் வீழ்ந்து இறந்ததாக சொல்லப்பட்ட சுகன்யா,

சித்த மருத்துவக்கிணற்றில் கிடந்த சரண்யா,பிரியங்கா,மோனிஷா.

கோவைக்கிணற்றில் திவ்யா,அத்தனையும் இளம் தளிர்களை கொன்று குவித்த வக்கிரங்கள்,

 ஆசிட் வீச்சுக்கு பலியான காரைக்கால் வினோதினி ,சென்னை வித்யா,தூத்துக்குடி புனிதா,

டெல்லி நிர்பயா,உளுந்தூர் பேட்டை பிரியா,சிதம்பரம் சந்தியா, சென்னை உமாமகேஸ்வரி,மதுரை லீலாவதி,கடலூர் விக்டோரியா,ஆதனூர் பொன்னருவி,மேலப்பாளையம் சகுந்தலா,செல்லஞ்சேரி சிவகாமி,திருச்செங்கோடு விஷ்ணுப்ரியா,புதுச்சேரி பார்வதி ஷா,ஏற்காடு விஜயலெட்சுமி...

என தொடரும் துயரங்களின் பட்டியல் நீண்டுகொண்டே..”நன்றி தி இந்து 

”உணவை செரிப்பதாகவே கொலைகளையும் செரிக்கின்றோம்”

 சமத்துவம் வந்தாச்சுன்னு சொல்றவங்களுக்கு

இப்படி பெண்கள் வெளியே நடமாட முடியாத,வீட்டுக்குள்ளேயும் இருக்க முடியாத ஒரு நாடாகத்தான் நம் பாரதநாடு உள்ளதை உணர்த்த வேண்டியுள்ளது...

 தி இந்து வில் திரு சஞ்சீவிகுமார் அவர்களின் கருத்தை முன் மொழிகிறேன். 

’முதலில் பெண்களுக்காக நம் சமூகம் தயார் செய்து வைத்திருக்கும் பிம்பங்களை மாற்ற முற்படுவதே பிரச்சனைகளுக்கான தீர்வாக அமையும்.தாய் என்பவள் தெய்வமும் அல்ல:காதலி என்பவள் தேவதையும் அல்ல.அவர்களும் உங்களைப்போலவே அழுக்கும் மணமும் ஒருசேரப்பெற்றவர்கள் தான்.உங்களைப்போல நகமும்சதையுமான சகமனிதர்கள் தான். 

 குழந்தைகளுக்கு கற்பிப்போம்

 குடும்பத்தில் மனைவியை கணவன் அடிப்பது,அதிகாரம் செய்வது போன்ற செயல்கள் எல்லாம் பெண் என்பவள் ஆணால் ஆளப்படுவதற்கானவள் என்கிற பிம்பத்தை குழந்தைகளின் மனதில் ஆழப்பதியச்செய்து விடுகிறது.இதன் முற்றிய வடிவம் தான் ஆணால் ஆளப்பட முடியாமல் போகும் பெண்ணை கொலை செய்வதில் முடிகிறது.

 வேலைகளில் ஆண்வேலை,பெண்வேலை என்று எதுவும் இல்லை.சூழலைப்பொறுத்து அனைத்து பணிகளையும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.மனைவியை மட்டுமின்றி அனைத்து பெண்களையும் விளிக்கும் போது மரியாதையாகப்பேசுங்கள்....”
 இப்படி கட்டுரை எழுத பெண்களை உணர்ந்து கொண்டவர்களால் மட்டுமே முடியும் ...நன்றி சஞ்சீவி சார்.

2 comments :

  1. சிந்திக்க வைக்கும் சிறந்த பதிவு
    மாற்றம் மலர வேண்டும்

    கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
    http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு.....

    திரு சஞ்சீவி அவர்களின் முழுக்கட்டுரையும் படிக்கத் தூண்டுகிறது உங்கள் பகிர்வு.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...