World Tamil Blog Aggregator Thendral: காலம் மாறும்....

Friday 1 July 2016

காலம் மாறும்....

பெண்ணுக்கு என்று தனிப்பட்ட விருப்பங்கள் இருக்கக்கூடாது என்ற எண்ணத்தை ஆணின் மனதில் ஆழமாக விதைத்து விட்ட சமூகத்தின் அவலநிலையின் விளைவு ...

 எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க கூடாதென்ற ஆணாதிக்க வெறியின் வெளிப்பாடு தொடர்கிறது வினோதினி, ஸ்வாதி,வினுப்ரியா.. 

இன்னும் எத்தனை நாள் தான் இப்படியே போராடிக்கொண்டே இருப்பது என்ற ஆயாசம் வருகின்றது...

 ஒன்று இருக்கின்ற பெண்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கணும் அல்லது செத்து மடியனும்...

 இதைப்பார்த்துக் கொண்டு வாழ்வதெல்லாம் ஒரு வாழ்வான்னு சலிப்பு வருகின்றது சில நேரங்களில்...

பிரச்சனை வரும்போது குரல் கொடுப்பதும் பின் ஓய்வதும், ஓயாத கொடுமைகளை தடுக்கவிக்கவில்லை...

 ஆண்பிள்ளைகளை வளர்ப்பவர்கள் கொஞ்சம் முயற்சி எடுங்கள்....பெண்களை மதிக்கக்கற்றுக்கொடுங்கள்..

 எங்களைப்போல் எதிர்காலப்பெண்கள் சும்மா வேதனைப்பட்டுக்கொண்டு இருக்கமாட்டார்கள்..அவர்கள் எதிர்விளைவு பண்ண ஆரம்பிக்கும் காலம் தொலைவில் இல்லை.

7 comments :

  1. பெண்கள் எதிர்விளைவு பண்ண ஆரம்பிக்கும் காலம் விரைவில் வரட்டும்...

    ReplyDelete
  2. பெண்களுக்கு எதிரான வழக்குகளில் ,குற்றவாளி இவன்தான் என்று தெரிந்ததும் சுட்டுக் கொன்று விடவேண்டும் !சட்டப் படி தண்டனை என்பது குற்றவாளியை உயிர்பிழைக்கச் செய்வதுடன் ,இம்மாதிரி இழிசெயல்களில் ஈடுபடுவோர்க்கு தைரியத்தைக் கொடுக்கிறது .தாமதிக்கும் நீதி ,நீதியே அல்ல !

    ReplyDelete
  3. //ஆண்பிள்ளைகளை வளர்ப்பவர்கள் கொஞ்சம் முயற்சி எடுங்கள்....பெண்களை மதிக்கக்கற்றுக்கொடுங்கள்..//
    நாட்டில் தேவைபடுவதை மிகவும் சரியாக சொன்னீர்கள்.

    ReplyDelete
  4. நிச்சயமாக எதிர்காலத்தில் பெண்கள் எதிர்விளைவு பண்ணுவார்கள். நம்மூரில் சட்டமும் இன்னும் மாற வேண்டும்.

    ReplyDelete
  5. கிட்டத்தட்ட பெண்ணியத்திற்குள்
    போதுமானதாய்
    அடங்கியிருக்கும் பதிவு,
    வெறும் அறிவுரைகளாகவும், திடீர் சிபிஐ க்களாகவும் மாறியிருக்கும் பல்வேறு தரப்பினர்களின் வாதங்களுக்குள் சென்றுவிடாமல் இயல்பாய் தன் ஆதங்கப் பதிவாக ஆணாதிக்கத்திற்கு எதிராக எழுதியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  6. அருமையான பகிர்வு

    கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
    http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html

    ReplyDelete
  7. நல்ல பகிர்வு. குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்போம்......

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...