World Tamil Blog Aggregator Thendral: ஏன்மா நேத்து வரல?

Monday 18 July 2016

ஏன்மா நேத்து வரல?

ஏன்மா நேத்து வரல?

ஆறாம்வகுப்பில்  சேர்ந்துள்ள.,பள்ளியிலேயே குட்டிச்சிறுமி அவள்....
எல்லோருக்கும் பிடிக்கும் அமைதியான முகம்.

எங்க அம்மா மேல சுடுதண்ணி ஊத்திடுச்சு அம்மா ..நான் தான் வீட்டுவேலை பார்த்தேன் அதனால வரலம்மா. இப்ப எப்படிடா இருக்காங்க...பரவால்லமா நடக்க முடியுதா காலில் ஊத்திடுச்சுன்னு சொல்றியேம்மா என்றேன். 

அவங்களால நடக்கவே முடியாதும்மா தவழ்ந்து தான் செல்லமுடியும் போலியோ அட்டாக்ன்னு சொன்னா அதிர்ந்து போனேன்.

 ஏன்னா அவ அப்பாவாலும் நிமிர்ந்து நடக்க முடியாது.அவரும் மாற்றுத்திறனாளி.தனியார் மருத்துவமனையில் சலவைத்தொழிலாளியாகப்பணிபுரிகின்றார். இருவரும் .பத்திரிக்கை மூலம் வந்த விளம்பரத்தில் பார்த்து திருமணம் செய்துள்ளனர் என்றாள்.

 இரண்டு பெண் குழந்தைகளை கஷ்டப்பட்டு படிக்க வைக்கின்றனர்.இவள் என்னிடம் ஆறாம்வகுப்பு படித்தாள்...

கஷ்டப்படுகிறார்களே என்று நாம் உதவி செய்ய கேட்டால் வேணாம்மா இன்னும் கஷ்டப்படுற குழந்தைக்கு செய்யுங்கன்னு தன்மானத்தோடு கூறுபவளை அதிசயமாகப்பார்ப்பேன்.

 ஒழுக்கத்திலும் ,மரியாதையிலும் சிறந்த குணமுள்ளவள்...எங்க அப்பா அம்மாவ காப்பாத்தனும் டீச்சர்னு அடிக்கடி சொல்வாள்...அவள் அப்பாவும் எது என்றாலும் உடனே அலைபேசியில் சொல்வது வழக்கம். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 485     /500 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று பெருமை சேர்த்தாள்.

 இவ்வாண்டு[2016] பன்னிரெண்டாம் வகுப்பில் 1116/1200 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாகவும் .ஆங்கிலத்தில் 190/200 மதிப்பெண்கள் பெற்று அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளாள்.

சென்னை அகரம் பவுண்டேசன் இவளுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது. சென்னையில் உள்ள ராஜேஸ்வரி பொறியியல் கல்லூரியில் சீட் கிடைத்துள்ளது.கல்லூரிச்செலவும் விடுதிச்செலவும் அகரம் பவுண்டேசன் செய்யும் போலம்மா.

மற்ற போகவர செலவு,அவளுக்குத்தேவையானவற்றை வாங்குற செலவு நம்முடையதும்மா என அவ அப்பா கூறிய போது..

 நம்மால் என்ன செய்ய முடியும்னு தோன்றியது.நன்கு படிக்கும் அக்குழந்தைக்கு உங்களாலும் முடியுமெனில் உதவலாம்.

 மாற்றுத்திறனாளி பெற்றோரின் போராட்ட வாழ்க்கையில் நாமும் சற்று கை கொடுத்து தூக்கிவிடலாமே.....

 தனது ஆங்கில ஆசிரியரிடமிருந்து ஆங்கிலத்தில் முதல் மதிப்பெண் பெற்றமைக்கு பரிசு வாங்கும் எங்களின் நந்தினி அன்னாள்......

உதரவும் கரங்கள் பேச 9659247363

No comments :

Post a Comment

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...