World Tamil Blog Aggregator Thendral: லீவு வேண்டாம்

Tuesday, 19 September 2017

லீவு வேண்டாம்

அம்மா அடிச்சிக்கிட்டே இருக்காங்க..
வீட்ல இருக்க பிடிக்கல...
ஏழாம் வகுப்பு மாணவி ...கலைவாணி..
ஏன் அடிக்கிறாங்க?
விளையாடும் பொழுது கடைக்கு அடிக்கடி போகச் சொல்றாங்க நான் போலன்னா அடிக்கிறாங்க....
அப்படியா.... ஓகே இனி நீ கடைக்கு போக வேண்டாம்..அம்மாவே கடைக்கு போகட்டும்.நீ அம்மாவோட வேலைகளை மட்டும் செய்தால் போதும்.
பசங்களா அம்மா என்னென்ன செய்வாங்க?
காலைல வாசக்கூட்டி கோலம் போடுவாங்க ....
ஓகே நீ இனி செஞ்சுடு...
பாத்திரம் தேய்ச்சி..அடுப்பு மோடைய தொடச்சி டீ போடுவாங்க...
சரி அதையும் செஞ்சுடு...
வீட்டக்கூட்டி காலப்பலகாரம் செய்வாங்க
ஓகே அதயும் செஞ்சிடு..
ஒரு மாதிரியாக என்னைப்பார்த்துக்கொண்டே.....நின்ற கலைவாணியின் முகம் ..என்னடாஇதுன்னு....
சரிடா அப்பறம் என்ன செய்வாங்க....
மறுபடியும் பாத்திரம் தேய்ச்சி,துணி துவச்சி ,கடைக்கு போய் காய் வாங்கி ....மத்தியானத்துக்கு சமைப்பார்கள்...
சரி அதையும்.... நான் சொல்றதுக்குள்ள ..... அம்மா நான் கடைக்கே போய்டுறேன்னு சரண்டர் ஆன குழந்தைய....
சபாஷ் வாவழிக்கு என்றேன்......
இன்னும் நிறைய பேசனும்....குழந்தைகளிடம் நேற்று மாலை குழந்தை நேயப்பள்ளி ஒருங்கிணைப்பாளர் தோழர் கவிதா மற்றும் தோழர் புதுகை செல்வா இருவரும் பள்ளிக்கு வந்து குழந்தைகளின் உரிமைகள் குறித்து பள்ளியில், வீட்டில் , சமூகத்தில் என்னென்ன என்று கலந்துரையாடும் முன் நடந்த உரையாடல்....
மிக அருமையாக இருவரும் மாணவிகளிடம் உரையாடினார்கள்.
தலைமையாசிரியரிடமும் குழந்தைகளின்,ஆசிரியர்களின் உளவியல் சிக்கல்களை கேட்டு அறிந்தனர்....
வேறு ஒரு தளத்திற்கு .....பாதை அமைத்து உள்ளனர்.....
கல்வியாளர் வசந்தி தேவி அவர்களின் கனவு குழந்தை நேயப்பள்ளியாக ஒவ்வொரு பள்ளியும் மாற்ற வேண்டும்.....தடம் பதிப்போம்.....





5 comments :

  1. நல்ல அனுகுமுறை

    ReplyDelete
  2. வணக்கம் சகோ !


    கறந்தபால் பசுமை யன்னக்
    ...கல்வியைக் கொடுத்து நாளும்
    சிறந்தநல் சமுதா யத்தைச்
    ...சீர்பெறச் செய்யும் சேவை
    மறந்ததோர் மனித ருக்கும்
    ...மகத்துவம் அளிக்கும் !நல்லோர்
    பிறந்தமண் இதுவென் றிங்கே
    ...பிரமனும் வாழ்த்து வானே !

    ஆஹா அருமை அருமை நானும் சில வருடங்கள் ஆசிரியனாய் இருந்த நினைவுகளை மீட்டிச் செல்கிறது நல்ல அணுகுமுறை தொடர வாழ்த்துகிறேன்
    வாழ்க நலம்

    தங்கள் ஓட்டு சேர்க்கபட்டது நன்றி

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...