World Tamil Blog Aggregator Thendral: தங்கச்சி வீட்டுக்கு வாங்க

Tuesday, 19 September 2017

தங்கச்சி வீட்டுக்கு வாங்க

வாவ் அசத்தல் "தங்கச்சி வீடு."
புதுக்கோட்டை சாந்தநாதபுரம் 3ஆம் வீதியில்...s s hospital சாலையில்..
புதிய பேருந்து நிலையம் எதிரில்..
இனி புதுக்கோட்டை பெண்கள் கொஞ்சம் சமையலறை தாண்டி புத்தகம் படிக்கலாம்... சமூகப் பணிகளில் ஈடுபடலாம்.
சமையலறையில் இருந்து விடுவிக்கிறார் சகோதரி ரேகா (புதுகை செல்வா).
இதமான வரவேற்பில்....
"தங்கச்சி வீடு"
சாதம் நீங்க குழம்பு நாங்க என அழைக்கிறார்கள்....
இருவர் தாராளமாக சாப்பிடக்கூடிய வகையில்....
சுவையான அசைவ,சைவக்குழம்புகள் மணக்கிறது....வீட்டுத்தயாரிப்பில்.....
அசைவம்
மட்டன் குழம்பு-1 கப் -₹70
நாட்டுக்கோழி கோழிக் குழம்பு1கப்-₹60
மீன் குழம்பு-1கப்-₹50
கருவாட்டு குழம்பு1 கப்-₹40
நண்டு குழம்பு 1கப்₹40
-----+++++++----
கிரேவி
சிக்கன் கிரேவி1கப்-₹50
இரால் கிரேவி 1கப்-₹50
நண்டு கிரேவி1கப்-₹50
_----------------
சைவம்
சாம்பார்1கப்-₹20
வத்தக்குழம்பு1கப்-₹20
ரசம் 1 கப்-₹10
கூட்டுப் பொரியல்1கப்-₹10
வறுவல்1கப்-₹10
மோர்.1கப்-₹10
--------------
இதற்கு மேல் வேறென்ன வேண்டும்......
மனம் நிறைந்த வாழ்த்துகள் மா.. மென்மேலும் வளர..

இன்று இரவு பேலியோ உணவாக செக்கு எண்ணெயில் தயாரிக்கப்பட்ட சிக்கன், இறால் கிரேவி ..... வாங்க சாப்பிட....







18 comments :

  1. வணக்கம் !

    தங்கச்சி வீடு ஆஹா இதுவல்லோ பெயர் ...............

    பாசமுடன் பெயர்வைத்தீர் பார தத்தின்
    ...பண்புகளை வளர்த்திட்டீர் ! உயிர கத்தில்
    நேசமுடன் நினைப்போர்க்கும் நித்தம் நித்தம்
    ...நெய்மணக்க உணவுதனை அள்ளித் தந்தீர்
    தோசையுடன் கிரேவிகளும் சாம்பார் சாதம்
    ...தொட்டுண்ணக் கைதேடும் தொலைவில் நின்றும்
    ஆசையுடன் உண்டமனம் போலே உம்மை
    ...அன்புருக வாழ்த்துகிறேன் உயர்ந்தே செல்வீர் !

    தம முதல் வாக்கு

    ReplyDelete
  2. பெயர் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் வாழ்த்துகள் எமது...

    ReplyDelete
  3. பெயரே கவர்ச்சியாக இருக்கே! வாழ்த்துகள்!!!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சுவையும் அருமை

      Delete
  4. கடையோட பேர் வித்தியாசமா இருக்கு...

    புரட்டாசி மாசம் அதுமா இப்படி ஒரு பதிவா?!

    ReplyDelete
  5. சென்னைக்கு வந்தால் நன்று! த ம 2

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா... விரைவில் வரவேண்டும்

      Delete
  6. இந்த முளை.. விரைவில் விருட்சமாக வளர வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  7. முமபையில் இவை வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்ணடிருக்கின்றன. வேலைக்குப் போய்வரும் பெண்களுக்கு வரப்பிரசாதமாய்
    .

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் மா பெரியார் சொன்னது போல பொது சமையல் அறை வந்தால்... சிறப்பு

      Delete
  8. வாழ்த்துக்கள். இன்னும் பல கிளைகள் பரப்பட்டும் தங்கச்சிவீடு நளபாகத்தில்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...