World Tamil Blog Aggregator Thendral: உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்....

Monday 3 October 2016

உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்....

உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்....

நான் பிறந்தது பக்கத்து மாநிலம் ஆனால் வளர்ந்தது ...என்னை வாழவைத்தது....தமிழ்நாட்டின் தலைநகரம் தான்.நான் வாழ்ந்த வீட்டுக்கு அருகில் ஒரு குளம் உண்டு அதில் மழைக்காலத்தில் நீர்நிரம்பி அருகில் உள்ள குட்டையில் நிறையும்..நாங்கள் எங்கள் வீட்டின் வழியாகச்செல்லும் நீரில் குதித்து விளையாடுவோம். என்னை வாழவைத்த சென்னையை மிகவும் நேசிக்கிறேன்...
இன்று என் வீட்டின் அருகே உள்ள குளத்தின் மீது உயர்ந்து நிற்கிறது ஒரு குடியிருப்பு பகுதி ...சென்ற வருட வெள்ளத்தில் நீர் தனது பகுதியை ஆக்ரமித்ததைக்கண்டேன்...



நாங்கள் குளத்தை சுத்தம் செய்யும் பணியில் இருந்த போது ஒருவர் ஏதோ மந்திரம் சொல்லி மாலை, பூ...என இன்னும் பல பொருட்களை அதில் கொட்டிச்சென்றார்,
அதிர்ந்து நீங்க எந்த ஊருன்னு கேட்டேன் ..திருநெல்வேலின்னு சொன்னார்...அங்க உள்ள நீர்நிலையில் இப்படித்தான் கொட்டுவீர்களா என்றேன்...அய்யோ அது சுத்தமான தண்ணி அதை அசுத்தப்படுத்த யாரையும் விடமாட்டோம் என அவசரமா சொன்னார்..அப்படின்னா எங்க சென்னையை மட்டும் இப்படி அசுத்தப்படுத்தலாமான்னு கேட்டேன்.

இப்படித்தான் ஒவ்வொருவரும் சென்னையை நம்மை வாழவைக்கும் இடமாகக் கருதாமல் அசுத்தப்படுத்தி அதிலேயே வாழ்கின்றோம்...
நான் மிகவும் வேதனைப்படுகின்றேன்...என் காலத்திலேயே இப்படி என்றால் இனி வருங்கால குழந்தைகள்...வாழ்வதற்கு வழி என்ன?

வாழ்வதற்கு தூய்மையான இடமின்றி, நீர் இன்றி ,கழிப்பறைகள் இன்றி தவித்துக்கொண்டு இருக்கும் போது, இந்தியா வளர்கிறது என்றால் எது வளர்ச்சி என எனக்கு புரியவில்லை

ஆசிரியர்களாகிய உங்களைக் கெஞ்சிக்கேட்கின்றேன்....உங்களுக்குப்பின்னால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இருக்கின்றனர் என்பதாலேயே நான் இங்கு வந்தேன்...தயவு செய்து உங்கள் ஊரிலுள்ள ஏரிகளை,குளங்களை ,தூய்மைப்படுத்தி நீர்நிலைகளை பாதுக்காப்பு செய்யுங்கள்...

கைதட்டி என்னை வருத்தப்படுத்தாதீர்கள்...இது என்கடமை.
என்கடமையை நான் செய்வதற்கு பாராட்டுதல் தேவையில்லை....

ஏதாவது செய்து இந்த பூமியைப்பாதுகாக்க வேண்டும்..அதற்கு இன்னும் இருநூறு வருடங்களாகலாம்.நாம் அழித்த இந்த அழகான இந்தியத்திருநாட்டை.....மீட்க...

என்னால் அதைப்பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை...நான் அன்பு செய்கின்ற,நேசிக்கின்ற எனது நாட்டின் சுற்றுச்சூழலைக் காப்பாற்ற ஏதாவது செய்ய வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளேன்...

உங்களின் கைகளை என்னுடன் இணைத்துக்கொண்டு நம் நாட்டினை சுத்தமாக,நீர்நிலைகளை மீட்டெடுக்க வாருங்கள்.

ஒரு 26 வயது இளைஞனிடமிருந்து இத்தகைய அக்கறையான ,நேசமிக்க ,அன்புநிறைந்த பேச்சை நான் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை ..

கரூரில் நடந்த கல்வியாளர்கள் சங்கமத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தனது ஆதங்கத்தை மனதை வருடும் வார்த்தைகளால் கூறியபோது மனம் நெகிழ்ந்து கரைந்து நின்றோம்...

இவர்கள் தான் நம் நாட்டின் சொத்து....
கரம் கொடுப்போம் அருண்கிருஷ்ணமூர்த்தி என்னும் இந்த சுற்றுச்சூழலின் மகனுக்கு...


9 comments :

  1. அருண் கிருஷ்ணமூர்த்தி தனது லட்சக்கணக்கிலான சம்பளம் தரும் வேலையை விட்டுவிட்டு, இப்படிச் சுற்றுச் சூழலுக்கான பணிகளை இளைஞர்களையும் மாணவர்களையும் கொண்டு செய்து வருகிறார். வருமானத்திற்காக யாரிடமும் போய் நிற்பதில்லை, தந்தி தொலைக்காட்சியில் தேர்தல் கருத்துக் கணிப்புடன் தினமும் ரங்கராஜ் பாண்டேயுடன் வந்து சரியான புள்ளிவிவரங்களைத் தந்ததைப் பார்த்திருப்பீர்கள்..அதுதான் இவரது இதரப் பணி மற்றும் வருமானமாம். என்ன ஒரு தெளிவு! என்ன ஒரு வாழ்க்கை! இந்த இளைஞன் நிச்சயமாக நாளை ஒரு பெரும் தலைவராக வேண்டும். இன்றைய சுயநலத்தலைவர்கள் இவரைக் கண்டு வருந்த அல்லது திருந்த வேண்டும். நல்ல பதிவுக்கு நன்றிம்மா.

    ReplyDelete
  2. நம் நாட்டினை சுத்தமாக்குவதும், நீர்நிலைகளை மீட்டெடுப்பதும் நம் ஒவ்வொருவரின் கடமையுமாகும்.

    நம் நாட்டின் சொத்தான அருண்கிருஷ்ணமூர்த்தி என்னும் இந்த சுற்றுச்சூழலின் மகனுக்கு நாமும் கரம் கொடுத்து ஊக்கமும் உற்சாகமும் அளிப்போம்.

    இந்த நெருக்கடி நேரத்திற்கு ஏற்ற மிகவும் பயனுள்ள பகிர்வுக்கு நன்றிகள், மேடம்.

    ReplyDelete
  3. அருண் கிருஷ்ணமூர்த்தி பாராட்டுக்குறிய மாமனிதரே.....
    வாழ்த்துவோம்

    ReplyDelete
  4. சிறந்த அலசல்
    அருமையான சிந்தனை

    ReplyDelete
  5. அரிய பணியைச் செய்துவரும் அருண் கிருஷ்ணமூர்த்திக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  6. அருண் விழிப்புணர்வு மனிதர். அவரது பணிகள் மென்மேலும் தொடரட்டும்..!

    ReplyDelete
  7. ஆம் சகோ அருண் கிருஷ்னமூர்த்தியைக் குறித்து செய்தித்தாளில் வாசித்தோம். பாராட்டிப் போற்றப்படவேண்டிய இளைஞர்.

    ReplyDelete
  8. அருண் கிருஷ்ணமூர்த்தியின் அருமையான சேவைக்கு வாழ்த்துகள் :)

    ReplyDelete
  9. வாழ்த்துக்குரிய இளைஞர். அவர் பணி சிறக்க வேண்டும். ஒவ்வொருவரும் இது போன்ற சீரிய பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அருண் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...