World Tamil Blog Aggregator Thendral: சொல்

Friday, 23 September 2016

சொல்

ஒரு வார்த்தையை வீணாக்கிட்டீயே அக்கா..

இன்று தம்பி வில்வத்துடன் பேசிக்கொண்டிருந்த போது என்னக்கா...இந்த வார்த்தையை வீணடிச்சிட்டீயே..
இதற்கு உரியவர்களிடம் சொல்லியிருந்தா...மகிழ்ந்திருப்பாங்களே என்ற கூறினார்கள்...

பொட்டில் அடித்த மாதிரி இருந்தது..வார்த்தைகளை நாம் எவ்வளவு எளிதாக செலவு செய்கின்றோம்...

செலவழிக்கின்ற வார்த்தைகளால்...நாம் பெறும் பயன்கள் என்ன?தீமைகள் என்ன?யோசித்து வார்த்தைகளை விட கற்றுள்ளோமா?

விலங்குகளோ,பறவைகளோ தேவையற்று ஒலிப்பதில்லையே....

சொல்லாத சொல்லுக்கு விலையேதுமில்லை என்ற கண்ணதாசனின் வரிகள் எத்தனை உண்மை...


அமைதியான இயற்கையை சொற்களால் நிரப்பி அசுத்தமாக்குகின்றோமோ எனத் தோன்றுகிறது...

அமைதி எல்லோருக்கும் பிடிக்கின்றது..

கடலின் ஆழ் அமைதி,
காட்டின் அடர்ந்த இருளமைதி,
மலையின் ஓங்கி உயர்ந்த அமைதி...

அத்தனையும் தனக்குள் எத்தனை பேராற்றலை வைத்துக்கொண்டு இத்தனை அமைதியாக இருக்க முடிகின்றது..

வாய் இருக்குதுன்னு பேசிட்டு நாம் படும் துன்பம்..

வள்ளுவன் ”யாகாவாராயினும் நாகாக்க”ன்னு சொன்னதையும் மறந்துட்டு வளவளன்னு பேசியே பொழுது கழிக்கின்றோம்.

மாணவிகளிடம் கூறுவதுண்டு நாம் கூறிய வார்த்தைக்கு நாமே மதிப்பு கொடுக்கலன்னா யார் கொடுப்பா....என...

நாமும் எத்தனை வார்த்தைகளை வாழ்க்கையில் வீணடித்து உள்ளோம்..என எண்ணுகையில் அதனால் இழந்த உறவுகள் கண்முன் நிழலாடுகின்றன...

சொற்களே உறவுகளை நீடிக்க வைக்கின்றன. ..

சொற்களே மகிழ்விற்கு அச்சாணியாகின்றன.

சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லாமல் இருப்பதாலே சில நேரங்களில் மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடுகின்றன..

சில வீடுகளில் பெற்றோரின் ஒரு சொல்லுக்கே அத்தனை மதிப்பு கொடுக்கப்படும்.

சில வீடுகளில் பெற்றோர்கள் எத்தனை கூறினாலும் செவிகளில் நுழையாதது போலவே மதிக்கப்படும்...அவர்களின் குழந்தைகள் வாழ்நாள் முழுதும் யாருடைய சொல்லுக்கும் எப்போதும் மதிப்பளிப்பதில்லை என்பது உண்மை..

சொற்களால் வாழ்கிறது உலகு...சொல்லாத சொற்களும் உலகை வாழ்விக்கின்றன..

சொல்லும் வார்த்தையின் மதிப்பறிந்து பேசக்கற்றுக்கொள்வோம்..

அவை வதந்தியாக ,புறம் பேசுவதாக,பிறருக்கு தீமை தரக்கூடியதாக இருக்க வேண்டாம்...

தாலாட்டும் தென்றலாய் மனதை வருடிக்கொடுக்கட்டும்...
தாயின் அண்மையைக்கொடுப்பதாக அமையட்டும்...
மழலையின் கள்ளமில்லா சிரிப்பை போல அமையட்டும்...


வார்த்தைகளின் வலிமை உணர்வோம்..
சொல்லாயுதத்தை தக்க இடத்தில் பயன்படுத்துவோம்...

9 comments :

  1. ’சொல்லாத சொல்லுக்கு விலையேதுமில்லை ..... விலையேதுமில்லை!’ :)

    சொல் பற்றி ஒருசில சொற்கள் சொல்லியிருப்பினும் மனதில் ஆழமாகத் தைத்துப் போவதாக மிக அருமையாக உள்ளன.

    பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. எப்போதும் முதன்மையாய் வரும் உங்களின் வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்தநன்றி சார்...

      Delete
  2. அமைதியான இயற்கையை சொற்களால் நிரப்பி அசுத்தமாக்குகின்றோமோ எனத் தோன்றுகிறது...


    இரசித்தேன் அம்மா.

    ReplyDelete
  3. சொல்லாத சொல்...

    ஓரு சொல் வெல்லும்
    ஒரு சொல் கொல்லும் அப்படின்னு கிராமங்களில் சொல்வாங்க...

    சொல்லும் வார்த்தையில் ஆயிரம் இருக்கும்...

    அருமையான பகிர்வு அக்கா...

    ReplyDelete
  4. வெட்டியாக அதிகம் பேசுவதைவிட, அமைதியான புன்னகைமேல்...
    அருமையான விடயங்களை அழகாக சொன்னீர்கள் நன்று சகோ.

    ReplyDelete
  5. வார்த்தைகளின் வலிமை.... ஒரே ஒரு வார்த்தை பல உறவுகளை அழித்து விடுகிறது.....

    சிறப்பாகச் சொன்னீர்கள். பாராட்டுகள்.

    ReplyDelete
  6. அவ்வாறான சூழலில் அமைதி காப்பது நன்று.

    ReplyDelete
  7. அருமையான பதிவு...ஒரு வார்த்தை போதும் இனிமையான உறவுகளை முறித்துவிட. அதே போன்று சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லப்படாத வார்த்தைகளாலும் பிரச்சனைகள் தான்.. சொல்லிச்சென்ற விதம் அருமை..

    ReplyDelete
  8. வணக்கம் !

    சொல்லாத சொல்லுக்கும் விலைகள் இல்லை
    ....சொரிந்தாலோ அளவின்றிச் சுவையும் இல்லை
    கல்லாத நெஞ்சுள்ளும் கவிதை வாழும்
    ....காற்றின்'நீர் இதம்போல கருணை சூழும்
    நில்லாத சொல்லொன்று நெருப்பாய்ப் போனால்
    ....நிறைசெல்வம் கொண்டாலும் ஏழை யாக்கும்
    பொல்லாத மொழியப்பா பூலோ கத்தில்
    ....புரிந்தெங்கும் பேசிப்'பைந் தமிழைக் காப்போம் !

    அருமை தொடர வாழ்த்துகள் !

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...