World Tamil Blog Aggregator Thendral: சீட்டுக்கம்பெனியா இதுவும்?

Tuesday 5 January 2016

சீட்டுக்கம்பெனியா இதுவும்?

சீட்டுக்கம்பெனியா இவையும்?

மகளின் கல்விக்கடன் வாங்கும் பொழுது இன்ஷுரன்ஸ் கட்ட வேண்டும் என்றார்கள்..அது பற்றிய அறிவு எனக்கு கொஞ்சம் கம்மிதான்...வருடத்திற்கு ரூ 10,000 கட்ட வேண்டும் என்றவுடன் சரி என்று 4 வருடங்கள் கட்டினேன்.

கல்விக்கடனை வட்டி மட்டுமே 3 வருடத்திற்கு ரூ1,85,000 கட்டி அந்தக்கொள்ளையிலிருந்து தப்பித்து,முழுமையாக கடனை ஆள விடுப்பான்னுகட்டி முடித்துவிட்டேன்.

இதுல ஒருதவணைக்கூட கட்டாதவர்களுக்கு சப்சீடின்னு ரூ50,000 கொடுத்தார்கள்..தவறாமல் கட்டியவர்களுக்கு கிடையாதுன்னு கொடுக்க மறுத்துட்டாங்க...ஏன் கட்டுனீங்கன்னு எனக்கு திட்டுதான் எல்லோரிடமிருந்தும்,

சரி இந்த பாலிசியையாவது சரண்டர் செய்து விடலாம் என்று எல்.ஐ சி க்கு சென்று கேட்டால் ..இது 30 வருடப்பாலிசியாம் [இது என்னிடம் சொல்லவே இல்ல]அதனால் சரண்டர் செய்தால் ரூ40,000க்கு, ரூ 20,000 ...மட்டும் தான் தருவார்களாம்..

பகல் கொள்ளையை விட மோசமா இருக்கே..சார் நான் கட்டியப்பணத்திற்கு வட்டி கொடுக்க வேண்டாம்,கட்டியப்பணத்தையாவது முழுசாத்தரக்கூடாதா என்றேன்...அதற்கு ஏன்மா சரண்டர் செய்யுறீங்க ...பேசாம தொடர்ந்து கட்டுங்க ..போனஸ் நிறையக்கிடைக்கும் என்கிறார்..

இதுல பழைய பாலிசிக்கு சர்வீஸ் டாக்ஸ் இல்லம்மா புது பாலிசி எடுத்தா சர்வீஸ் டாக்ஸ் பிடிப்பார்கள்..பிரிமியம் அதிகமா வரும்னு வேற சொன்னாங்க..

படித்த நமக்கே இந்த நிலை என்றால் படிக்காதவர்களின் நிலை...என்னன்னு சொல்றது..

கல்விக்கடன் வாங்குறவங்க இனியாவது முழிச்சிக்கனும்னு தான் இந்தப்பதிவை எழுதுறேன்...



10 comments :

  1. இன்ஷூரன்ஸ் நிலவரங்கள் இப்போதைக்கு சரியாக இல்லை என்றே தோன்றுகிறது!

    ReplyDelete
  2. பல இடங்களில் இப்படி ஏமாற்று வேலை தான்.....

    ReplyDelete
  3. நல்ல வேலை இந்த கல்விக் கடன் பக்கமெல்லாம் போகவில்லை, என்ற நிம்மதி உங்களின் அனுபவத்தை கண்டபோது ஏற்படுகிறது. அரசாங்கம் எப்போதுமே சிக்கலான நடைமுறைகளைதான் கையாளுகிறது. அது பெரும்பாலும் ஏமாற்றுபவர்களுக்கு சாதகமாக இருக்கிறது. நல்ல விழிப்புணர்வு பதிவு!

    ReplyDelete
  4. அநியாயமா இருக்கே!!

    ReplyDelete
  5. கடன் இருக்கும்போது பாலிசி இருக்க வேண்டும் - கடன் வாங்கியவருக்கு ஏதாவது ஆகிவிட்டால் வங்கிக்கு பணம் யார் கொடுப்பது? - என்ற விதிமுறை இருந்தால், அந்த பாலிசி, கடன் எவ்வளவு நாட்களுக்கோ அந்த அளவு தான் இருக்க வேண்டும். 30 ஆண்டு பாலிசி என்பது கல்விக் கடனை எப்போது வேண்டுமானாலும் கட்டலாம் என்று இருப்பதாலோ?

    இன்சூரன்ஸ் பாலிசி ப்ரீமியம் என்பது பாலிசி தாரருக்கு ஏதாவது ஆகிவிட்டால் பணம் கொடுக்கப் படும் என்பதால், அந்த ப்ரீமியத்தின் ஒரு பகுதி, ரிஸ்க் கவர் செய்ததற்க் காண பணம் , அந்தக் கம்பெனிக்கே. அதனால் பாதிப் பணம் தான் கொடுப்பார்கள் என்பது கொள்ளை போலத் தெரிந்தாலும், சரியான ஒன்றே. இல்லையேல், இன்சூரன்ஸ் கம்பெனி என்ற ஒன்றே இருக்காது!

    ReplyDelete
  6. நல்ல பகிர்வு அக்கா...
    கொடுமையான விஷயம்..

    ReplyDelete
  7. நேர்மைக்கு எங்கும் சிக்கலே.

    ReplyDelete
  8. இவற்றையெல்லாம் கேட்கவே தலையைச் சுற்றுகிறது.

    நாம் பாலிஸி எடுக்கும் போது ஏஜண்டுகள் ஏராளமான கையெழுத்து நம்மிடம் வாங்கிக்கொள்வார்கள். நாமும் எதையும் படித்துப் பார்க்காமல் கைழுத்துப்போட்டு விடுவோம்.

    ஒவ்வொன்றிலும் கிட்டமுட்டிப் போனால் இதுபோல ஏதேதோ சொல்லி நம்மைக் குழப்பித்தான் விடுவார்கள்.

    30 வருஷங்கள் போன்ற நீண்ட கால பாலிஸீக்கள் எடுக்காமல் இருப்பதுதான் நல்லது.

    விழிப்புணர்வு தரும் தங்களின் அனுபவப்பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...