World Tamil Blog Aggregator Thendral: தொட்டில் குழந்தை

Saturday 7 December 2013

தொட்டில் குழந்தை

அணிமணிகள்
ஆடம்பர உடை
அறுசுவை விருந்து
பகட்டு வாழ்வு
எதுவும் வேண்டாம்..

ஆறுதலாய்
அரவணைக்க
அம்மா
  போதும்

20 comments :

  1. கலங்க வைக்கும் தலைப்பு...

    ReplyDelete
  2. சகோதரிக்கு வணக்கம்
    தாயின் முகம் காணா பச்சிளம் குழந்தையின் வேண்டுதலை மிக அருமையாக கவியாய் தந்த விதம் சிறப்பு. தொடர்க சகோதரி. பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ.ஒரு குழந்தைக்கு வேறென்ன வேண்டும்

      Delete
  3. தலைப்புக்கேற்ற கவிதையா? கவிதைக்கேற்ற தலைப்பா? என ஒரு பட்டிமன்றமே வைக்கலாம். வரிகளின் எண்ணிக்கை முக்கியமல்ல, வரவழைக்கும் உணர்வே முக்கியம். ஜெயிச்சுட்டீங்க...அருமை, கீதா! தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வழிகாட்டுதல் தானே .வாழ்த்திற்கு நன்றி

      Delete
  4. ஒரு பிள்ளையின் பரிதவிப்பு...
    உளந்தொடும் வரிகள்!

    வழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழி.உங்களின் வலையில் நான் விழும் நாளே என் வலையின் சிறப்பை உணர்வேன்.

      Delete
  5. குழந்தையின் தவிப்பு புரிந்தது உமக்கு
    அருமை தோழி அருமை நன்றி தொடர வாழ்த்துக்கள்...!
    வலை தளம் வாருங்கள் புதிய கவிதை பாருங்கள் தோழி.
    நன்றி தொடர வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் .பகிர்விற்கு நன்றிம்மா.வருகிறேன் வலைத்தளத்திற்கு.

      Delete
  6. எந்த அம்மா டீச்சர் .
    நீங்க சொன்னது நம்ம அம்மாவை தானே !?

    ReplyDelete
    Replies
    1. சார் .வம்பு தானே.நன்றி வருகைக்கு.

      Delete
    2. சகோதரி நான் உங்கள் தங்கை மைதிலி .

      Delete
    3. மன்னிக்கவும்மா,நலமா?

      Delete
  7. பச்சிளம் குழந்தையில் வேண்டுகோள் கலங்க வைக்கிறது

    ReplyDelete
    Replies
    1. உண்மை சார்.அம்மா இல்லாத போது தான் அந்த வலி உணர முடிகிறது.

      Delete
  8. பல அர்த்தம் இருக்கிற மாதிரி தெரிந்தாலும்
    கவிதை நல்லா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. பல பொருள் இல்லை.ஒரே பொருள்தான்.குழந்தை விரும்பும் அம்மா.நன்றி வருகைக்கு.

      Delete
  9. அரவணைப்பின் ஏக்கத்தில் துடிக்கும்
    குழந்தையின் குமுறல் தெரிகிறது வரிகளில்.
    அருமை.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...