World Tamil Blog Aggregator Thendral: அறம்

Friday 29 November 2013

அறம்




நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்வு.அதில் நான் மிகவும் மதிக்கும் கமல்ஹாசன் அந்நிகழ்வில் பிரகாஷ் ராஜூவிற்கு ஜெயமோகன் எழுதிய ”அறம்” நூலைப் பரிசாக அளித்து அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் என்று கூறினார்.மிகுந்த ஆவலுடன் புத்தகத்தை வரவழைத்து படித்தபோது....

என்னை புதிய உலகிற்குள் மூழ்கடித்தது.அதில் உண்மை மனிதர்களின் கதைகளாய் 12 கதைகள் ..என்னை சுனாமியாய் சுழற்றி அடித்தது என்றே கூறலாம்.

ணங்கான்
இது ஒரு கதையின் பெயர்.நெல்லைப் பகுதியில் வாழும் மனிதரை பற்றிய கதை..தீண்டாமையின் மறு பக்கத்தை உணர முடிந்தது.
பெயர் கூட நாய் குட்டிகளுக்கு வைப்பது போலவே கறுப்பாக இருந்தால் கறுத்தான் ,ஏழான்....என..
 

அதில் எச்சில் பற்றி..

”அத்தனை பேரும் அதிகாரத்தால் கீழ் கீழாக அடுக்கப் பட்டிருந்தார்கள்.அடுக்குகளுக்கு எச்சில் ஓர் அடையாளமாக இருந்தது.கூலி அடிமைமீது குலமேலாள் காறித்துப்பினால்அவன் முன்னால் நிற்பது வரை அடிமை அதைத்துடைத்துக் கொள்ளக்கூடாது.காரியஸ்தன் கோபம் கொண்டு வெற்றிலைச் சாற்றை மேலாட்கள் மேல் துப்பினால் அவர்கள் பணிவுடன் சிரிக்க வேண்டும்.காரியஸ்தன் நாயர் வீட்டு உறுப்பினர் யார் வெற்றிலை வாயைக் குவித்தாலும் பணிவுடன் கோளாம்பியை எடுத்து முன்னால் நீட்ட வேண்டும்.அந்த குடும்பத்திற்கு மன்னர் குலத்தில் இருந்து யாராவது வந்தால் கையில் கோளாம்பியுடன் கரைநாயரே பின்னால் செல்ல பணிந்து நடந்துசெல்ல வேண்டும்”

அக்கதையை படித்து முடித்து பல நாட்கள் மீள முடியாது இருந்தேன்.ஆங்கிலேயரின் வரவு அடிமைகளுக்கு ஒரு மருந்தாக இருந்ததோ என்று நினைக்கும் அளவிற்கு இருந்த சாதீயக் கொடுமையை உணர முடிந்தது
 

”.யானை டாக்டர்” என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நபராகி விட்டார்.அதைப் பற்றி சொல்ல வார்த்தையில்லை.நிச்சயம் அனைவரும் படிக்க வேண்டிய நூல் தான் .அறிமுகம் செய்த உலக கலைஞனுக்கு நன்றி

13 comments :

  1. நல்லதொரு விமர்சனம்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. உணர்வுகளை பதிவிட்டதற்கு வாழ்த்துக்கள் ...
    நல்ல புத்தகம் படியுங்கள் என்று தம்பி அண்ணா வைகை விஸ்வநாதனும், கே.வி அவர்களும் சொன்னார்கள்.

    கொசுறாய் ஒரு தகவல் , கமலின் அறிமுகத்திற்கு பின் சுமார் 3000 புத்தகங்கள் விற்பனையாகிருப்பதாய் கே.வி சொன்னார்.

    ஜெமோ குறித்த எனது பிரிஜூடிஸ் உங்கள் பதிவின் பிறகு மாறியிருக்கிறது. படிக்கலாம் என்று இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொன்னது உண்மை 3000 நூல்கள் விற்பனையாகியுள்ளது.நல்ல நூல் படியுங்கள்

      Delete
  3. புதிய டெம்ப்ளேட் ரொம்ப கூல் ...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. மிக மிக அருமையான விமர்சனம். இப்பவே வாங்கிப் படிகத் தோன்றுகிறது.

    நான் தொலைக் காட்சி பார்ப்பதில்லை. காரணங்கள் பல!
    ஆனால் மிக நல்ல நிகழ்ச்சி என யாராவது கூறும்போது ஓன்லைனில் தேடிப் பார்ப்பேன்.

    இவ்வரிய நிகழ்ச்சியைப் பார்க்கக் கிட்டவில்லை. அதனால் இதனை அறியவில்லை. பார்க்கின்றேன் இங்கு ஜேர்மனியில் உள்ள நம்மவர் கடைகளில் இப்புத்தகம் வந்துள்ளதா என்று..

    மிக்க நன்றி நன்றி அருமையான பகிர்வு. வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. நன்றிம்மா.கட்டாயம் படியுங்கள்.

      Delete
  5. “எனக்குப் பிடித்த புத்தகம்“ என்று நீங்கள் பேசியதை விடவும் சுருக்கமாகவா எழுதுவது? அந்த நிகழ்வு பற்றி எழுதுவதற்கான குறிப்புகள் என் கணினி மேசையிலேயே கடந்த 13நாள்களாக... (இந்தத் திருமயத்திலிருந்து அந்தப் பக்கம் இந்தப்பக்கம் திரும்ப முடியலயே...!) அதுசரி.. அந்த “அறம்” நூலை எழுதிய ஜெ.மோ. அதை யாருக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார் என்று நீங்கள் பார்க்கலயா...? பாருங்கள்! அதில் ஓர் ஆச்சரியம் காத்திருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. இப்போது தான் பார்த்தேன் தோழர் ஜெ.ஹேமச்சந்திரன் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்.இவரின் சமூக உணர்வுகள் அவரிடமிருந்தே தோன்றியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.நன்றி அய்யா.

      Delete
  6. நல்லதொரு விமர்சனம். வாய்ப்பமைந்தால் கட்டாயம் வாசிப்பேன். நன்றி கீதா.

    உங்களுடைய சில பதிவுகளுக்கு நானிட்டப் பின்னூட்டங்கள் வெளியாவில்லையே... ஸ்பேமுக்குப் போய்விட்டதா?

    ReplyDelete
    Replies
    1. நன்றிம்மா.சில பதிவுகள் தவறுதலாக டெலிட் ஆகிவிட்டது.மிகவும் வருத்தப்பட்டேன் தோழி.

      Delete
  7. சகோதரிக்கு வணக்கம்..
    எனக்கு பிடித்த நூல் என்ற தலைப்பில் நீங்கள் பேசியதா சகோதரி. நிகழ்ச்சிக்கு அன்போடு நீங்கள் அழைத்தும் அம்மாவுக்கு உடல்நலமின்மையால் கலந்து கொள்ள முடியவில்லை. இன்னொரு நிகழ்ச்சியில் அவசியம் கலந்து கொள்கிறேன். அற்புதமான உள்வாங்களால் எழுந்த பதிவு. தங்கள் பதிவைப் படித்ததும் புத்தகம் வாங்கி படிக்க வேண்டுமெனும் ஆவல் பிறந்துள்ளது. கண்டிப்பாக புத்தகத்தைப் படிக்கிறேன்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...