World Tamil Blog Aggregator Thendral: நூல் அறிமுகம் -தைராய்டு ஏன்? எதற்கு?எப்படி?

Monday, 16 January 2017

நூல் அறிமுகம் -தைராய்டு ஏன்? எதற்கு?எப்படி?


நூல் அறிமுகம் –

தைராய்டு.-ஏன்? எதற்கு? எப்படி?
ஆசிரியர்.ஜி.முத்துராமன்.

பதிப்பகம் –ஆரோக்கியம்&நல்வாழ்வு வெளியீடு.

கடந்த 6 வருடங்களாக தைராய்டு குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டு மாத்திரையோடே எழும் எனக்கு அது குறித்த ஒரு விழிப்புணர்வை உண்டாக்கி என்னை நானே சீர் செய்து கொள்ள உதவிய நூல் இது.

இந்நூல் உருவாக காரணமாக இருந்த நல்ல உள்ளங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றியையும் பாராட்டுகளையும் கூறிக்கொள்கின்றேன்.

எத்தனையோ புத்தகங்களைpபடிக்கின்றோம்..
அத்தனையும் ஏதோ ஒரு வகையில் நம் மனதில் இடம் பிடிக்கின்றன…

நமது உடல் ஆரோக்கியம் குறித்து படிக்க வேண்டிய நூல்களில் ஒன்றாக ஆரோக்கியம் &நல்வாழ்வு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் தைராய்டு நோய் குறித்த விழிப்புணர்வு நூல் இது.

அனைவரும் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகளைத்தாங்கி வந்துள்ளது.

தைராய்டு பாதிப்பு இந்தியாவில் நீரிழிவு நோயுடன் போட்டி போட்டுக்கொண்டு முதலிடத்தை பிடித்துக்கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில்..இந்நோய் குறித்த விழிப்புணர்வை இந்நூல் தந்து மறைக்கப்பட்ட உண்மைகளை நமக்கு எடுத்துக்காட்டுகின்றது.

நமது உடல் பற்றிய அறிவைப் புகட்டி நம்மை நாமே அறிந்து கொள்ள உதவுகின்றது.தைராய்டு அறிமுகம் முதல் உணவின் மூலம் தீர்வு முடிய 17 கட்டுரைகள் மிகத் தெளிவாக ”சின்னப்பட்டாம்பூச்சியா நம்மை சிறைப்படுத்துவது” என்ற வினாவை நம்முள் எழுப்பி ஹார்மோன்களைக்கட்டுப்படுத்தும் முக்கிய உறுப்பான தைராய்டு சுரப்பியின் செயல் பாடுகளை அருமையாக விளக்குகின்றது.

நமது உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் சுரக்கும் ஹார்மோன்கள் மற்ற நாளமில்லா சுரப்பிகளுடனும் ,உடல் உறுப்புகளுடனும்,மற்றும் வேதியியல் முறையில் செய்திகளைப்பரிமாறிக்கொள்ள,அதன் செயல்பாடுகளை தூண்டி விட .குறைக்க அல்லது நிறுத்திவைக்க உதவுகின்றது…என்பதை தெளிவாக எளிய முறையில் புரிந்துகொள்ள உதவுகின்றது.

எல்லா உறுப்புகளையும் கட்டுப்படுத்தும் முக்கிய ஹார்மோனாக தைராய்டு எவ்வாறு உள்ளதென்பதை விளக்கி கூறுகின்றது.

தைராய்டு என்ன செய்கின்றது?

குளுக்கோஸ் வளர்சிதைமாற்றம் அடைய,
புரதம் வளர்சிதைமாற்றம் அடைய,
கொழுப்பு வளர்சிதைமாற்றம் அடைய,
செல்கள் வளர்சிதைமாற்றம் அடைய,
உடலின் வெப்பநிலை சமச்சீராக இருக்க,
இதயம் சரியாக இயங்க,
குடலின் உறிஞ்சும் தன்மையை அதிகரிக்க,
கிளைக்கோஜன் சிதைவுபட,
இனப்பெருக்க உறுப்புகளின் வேலைகள் சரியாக நடைபெற,
மூளைச்செயல்பாடு சரியாக நடைபெற,
கொலஸ்ட்ரால் அளவுகள் சரியாக இருக்க,
பால் சுரப்பு கோளங்களைத்தூண்டி அதிக அளவில் பாலைசுரக்க வைக்க ,
ஹீமோகுளோபின் அளவு சரியாக இருக்க,
விட்டமின் பி12 அளவு சரியாக இருக்க ,
விட்டமின் டி அளவு சரியாக இருக்க,
மத்திய நரம்பு மண்டலம் சரியாக இருக்க,
குண்டாகாமல் ஒல்லியாக இருக்க,
மலச்சிக்கல் தீர….

ஆத்தி சுமார் 15 முதல் 25 கிராம் அளவுள்ள தைராய்டின் ஆதிக்கம் நம் மீது மிகவும் அதிகம் என்பதை உணர முடிகின்றது…இதற்கு மருத்துவராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை..நம் உடலைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமே போதும், நம்மை நாமே உணவின் மூலம் சீர்படுத்த வழிகாட்டுகின்றது..

தைராய்டு சுயபரிசோதனை

இதில் நம்மை நாமே தைராய்டு மூலம் பாதிக்கப்புள்ளோமா என்று சுயபரிசோதனை செய்துகொள்ள கேள்வி-பதில்கள் மூலம் உணர வைக்கின்றது.

வீட்டிலேயே பரிசோதிக்கலாம் வாங்க

எளிய சோதனைகள் மூலம் ஹைப்போதைராய்டு அல்லது ஹைபர் தைராய்டு நமக்கு உள்ளதா மருத்துவ வெப்பநிலைமானி அல்லது இருதயதுடிப்பின் அளவின் மூலம் அறிந்துகொள்ள உதவுகின்றது.

ஹைப்போ & ஹைப்பர்
இவற்றை பற்றி தெளிவாக விளக்குகின்றது.

அயோடின் அவசியமா?
அயோடினால் வரக்கூடிய குறைபாடுகள்,அக்குறைபாட்டை எப்படிக்கண்டுபிடிப்பது?

தைராய்டு இருப்பின் தவிர்க்க வேண்டிய காய்கறிகள்,
இரும்புச்சத்து எப்படி கிடைக்கின்றது?
விட்டமின் பி-12 க்கும் தைராய்டுக்கும் என்ன தொடர்பு,,
விட்டமின் பி-12 இன் பயன்கள்,
செலினியம் பயன்கள்,
மெக்னீசியம் ஏன் தேவை?
தைராய்டு இருப்பவர்கள் என்ன சாப்பிடலாம்?
அட்ரீனல் சோர்வு,
ஆண்டி தைராய்டு.
செட்டோகின்,உணவின் மூலம் தீர்வு என அழகாக தைராய்டு பற்றி விளக்கமாக இந்நூல் எடுத்துக்கூறுகின்றது.

தைராய்டு என்பது நோயல்ல ,அது நுண்சத்து குறைபாடு என்பதை கூறுவதன்மூலம் நமக்குள்ள தாழ்வு மனப்பான்மையைப்போக்கி அதை சீர் செய்துகொள்ள வழிகாட்டுகின்றது.

இந்நூலை எழுதிய ஆசிரியர் தூத்துக்குடியில் வசிக்கும் திருமிகு ஜி.முத்துராமன். ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுமத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவராக உள்ளார்.

எதிர்கால தலைமுறையை நல்லுணவு மூலம் காக்கும் பொறுப்பை உணர்த்தி ,வளமான சமுதாயத்தை உருவாக்க ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுமத்தின் நிறுவனர் திருமிகு நியாண்டர் செல்வன் அவர்களின் அனுமதியுடன் ,அவருக்கு உறுதுணையாக விளங்கும் திருமிகு சங்கர்ஜி அவர்களின் முயற்சியோடு வெளிவந்திருக்கும் நூல் இது..

அனைவர் வீட்டிலும். உள்ளத்திலும் இருக்க வேண்டிய நூல்..படித்து பயன் பெற வாழ்த்துகள்.

குறிப்பு-பொங்கல் பரிசாக
----------------
தைராய்டு-ஏன் ?எதற்கு? எப்படி?-ஜி.முத்துராமன்

30 நாட்கள் பேலியோ சேலஞ்ச்-சங்கர் ஜி

பேலியோ சமையல் -சைவம்,

பேலியோ சமையல் -அசைவம்,
ஆகிய நான்கு நூல்கள் இணைந்து மலிவாக ரூ350 க்கு கிடைக்கின்றது..

இத்துடன் வாங்க வேண்டிய நூல்கள்

பேலியோ டயட் –நியாண்டர் செல்வன்,
கிழக்கு பதிப்பகம்

உன்னைவெல்வேன் நீரழிவே-சிவராம் ஜெகதீசன்
பாரதி புத்தகாலயம்.

வெளியீடு
ஆரோக்கியம் & நல்வாழ்வு
19,தம்புசாமிநகர்,
திருவேற்காடு.
சென்னை.-77
அலைபேசி:94459 51115.

6 comments :

  1. அருமையான பயனுள்ள ஒரு புத்தகத்தை அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி சகோ/கீதா

    ReplyDelete
  2. வணக்கம்...
    தைராய்டு என்றால் என்னவென்பதே எனக்குத்தெரியாது..
    நீங்கள் எழுதியிருப்பதை பார்த்தும் ஒன்றும் விளங்கவுமில்லை..
    நல்லாத்தான் கவிதை கட்டுரைன்னு எழுதிட்டு இருந்தீங்க...
    திடீர்ன்னு மருத்துவக்கட்டுரை மாதிரி எழுத ஆரம்பிச்சுட்டீங்களேன்னு வாசிச்சு முடிச்சதும் ..
    பயமாயிருக்கு..
    உடல் பற்றிய அக்கறையை தூண்டிவிட்டிருக்கும் உங்கள் பதிவு ...ஏதோ சொல்லவருவது புரிகிறது..ஆனால் என் போன்றோர் அறிந்து கொள்ளுமளவுக்கு இன்னும் எளிமையாக எழுதுவீர்கள் எனில் நன்றியுடயவராவோம்...
    பரந்த வாசிப்பும்,பண்பட்ட அறிவுமுள்ள நீங்கள் சொன்னால் சரியாயிருக்கும் என நம்புகிறோம்...

    உடல் நலம் பற்றிய உங்கள் பதிவுகள் இன்னும் அதிகமாக வர விரும்புகிறோம்....

    கொஞ்சூண்டு எளிமையா பிளீஸ்ஸ்ஸ்ஸ்...

    ReplyDelete
  3. மிகவும் பயனுள்ள விஷயங்களைச் சொல்லும் இந்த மருத்துவ நூல் பற்றிய தங்களின் அறிமுகம் மிகவும் அருமையாகவும், மனதுக்கு சற்றே ஆறுதல் அளிப்பதாகவும் உள்ளது.

    ஒவ்வொன்றையும் பற்றி மேலும் சில விபரங்களைத் தங்கள் பாணியில் அழகாகவும், விரிவாகவும், ஏழை எளியோருக்கும் மிகச்சுலபமாக தமிழில் புரியும்படியாகவும் தனித்தனிப் பதிவாகத் தந்தீர்களானால் இன்னும் சிறப்பாகவும் வரவேற்கக்கூடியதாகவும் இருக்கும் என நம்புகிறேன்.

    தங்களின் இந்தப் பதிவுக்கும் பகிர்வுக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள் + நன்றிகள்.

    ReplyDelete
  4. நல்லதொரு நூலை அறிமுகம் செய்தமைக்கு நன்றி சகோதரி...

    (எனது அண்ணனுக்கு இந்த பிரச்சனை உண்டு...)

    ReplyDelete
  5. மிகவும் பயனுள்ள பகிர்வு சகோதரியாரே
    நன்றி

    ReplyDelete
  6. நல்ல அறிமுகம்... நன்றி.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...