World Tamil Blog Aggregator Thendral: kavithai potti-படைப்பு

Thursday 20 October 2016

kavithai potti-படைப்பு

                                             நதிக்கரை ஞாபகங்கள்

என்ன சொல்ல
நினைவலைகள் மணலில்
தடம் பதிக்கின்றன...

கரை புரண்டோடியும் ,கரையழித்து பொங்கியும்
கடல் காதலனை கைபிடித்த காலங்கள்

சிறு பிஞ்சு பாதங்களை வருடி,
சிறார்களின் துள்ளலில் கொஞ்சி மகிழ்ந்ததும்...

காதலர்கள் களிப்பில் மீனாக
அவர்தம் மேனி சிலிர்க்க வைத்ததும்..

பரிசலும் படகுகளும் என் மேனியில்
அலைந்து கடந்ததும்..
படிமங்களாகின..

நீராடை அணிந்து வலம் வந்தவளின்
மணலாடையையும் உரித்தனர்..

உலகுக்கே நாகரீகம் தந்தவளை
நாகரீகமற்று ,
உதிரம் உறிஞ்சிய போது
கொஞ்சம் கொஞ்சமாய் மறித்தேன்...

சலசலத்து ஓடிய கால்கள்
வெடிப்புகள் கண்டு புண்ணாகின..

பெண்பெயர்களைக்கொண்டதாலோ
வாழ வழியற்று தவித்தேன்...

மென்மலர் பூக்கள் சுமந்து
தாகம் தீர்த்தவள்
தடமற்று மறைந்தே போனேன்.





 

4 comments :

  1. 'நதிக்கரை ஞாபகங்கள்' ..... அருமையானதோர் ஆக்கம்.

    நான் மிகவும் ரஸித்த முத்திரை வரிகள்:
    ==============================================

    நீராடை அணிந்து வலம் வந்தவளின்
    மணலாடையையும் உரித்தனர்..

    உலகுக்கே நாகரீகம் தந்தவளை நாகரீகமற்று ,
    உதிரம் உறிஞ்சிய போது கொஞ்சம் கொஞ்சமாய் மறித்தேன்...

    ================

    பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டங்கள் உறவை பலப்படுத்துகின்றன என்ற உங்கள் கருத்தை உங்களின் பாராட்டுகள் உறுதி செய்கின்றன சார்....மிக்க நன்றி...

      Delete
  2. this poem should be an EYE OPENER to the unsrupulous people who exploit water sand and all...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்.

      Delete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...