World Tamil Blog Aggregator Thendral: ரெமோ

Saturday 8 October 2016

ரெமோ

ரெமோ

படிக்க வேண்டாம்
பணிபுரிய வேண்டாம்
டாக்டர் பொண்ணா பாத்து
டாவடிச்சு லவ்பண்ண வச்சு ஏமாத்தி
கல்யாணம் பண்ணா போதுமா?
சிவகார்த்திகேயன்..


இதனால பசங்களும் படிக்க மாட்டேன்னு பொண்ணு பின்னாடி சுத்த வைக்குறீங்க...படிச்சு வேலைக்கு போற பொண்ண திருமணம் செய்யுற வரைக்கும் ஏமாத்தலாம்..அதுக்கு பின் சம்பாதிக்கல...வேலைக்கு போலன்னு சண்டை வருமே....
சம்பாதிக்கிற பொண்ணு எத்தன நாளு உக்கார வச்சு சோறு போடுவான்னு நினைக்கிறீங்க...

முன்பு வாழ்க்கையின் ஒரு பகுதியா இருந்த காதலை வாழ்க்கையே அதுக்குத்தான்னு மாத்தி ...அலைய விடுகின்ற சமூகத்தில் பசங்களும் பொண்ணுங்களும் இப்படியே நாசமா போகட்டும்...
நீங்க இது பொழுது போக்குப்படமா எண்ணி நடிக்கலாம்..ஆனா இளைஞர்கள் உங்களையெல்லாம் தலைவரா எண்ணி வீழ்ந்தா உங்களுக்கு நட்டமென்ன...

உங்களுக்குன்னு வந்தா துடிப்பீங்க சேரன் மாதிரி...பொண்ணுங்க படிச்சுடுவாங்க..இந்த பசங்கள நினைச்சாத்தான் கவலையா இருக்கு...உங்க நிலைமைக்கு வர எவ்ளோ கஷ்டப்படனும்கிறதயும் கொஞ்சம் முடிஞ்சா சொல்லுங்க...
நடிப்புல நல்ல முன்னேற்றத்திற்கு வாழ்த்துகள்..



8 comments :

  1. நல்ல சவுக்கடி கேள்விகள் சமூகம் எக்கேடு கெட்டால் இவர்களுக்கு என்ன ? அக்கவுண்டில் பணம் நிறைந்தால் போதும்.

    ReplyDelete
  2. அடடே! சுடச்சுட ஒரு திரைப்பட விமர்சனமா? (முதல்நாளேவா...?)
    அடுத்து சுட்டுச்சுட்டு சிவாவை சிவசிவா என என வைத்ததற்கு வாழ்த்துகள். விமர்சனம்னா இப்படித்தான் நச் னு இருக்கணும்.

    ReplyDelete
  3. அக்கா...
    தமிழ் சினிமாவில் கதாநாயகன் ஊதாரிதான்...
    அதுவும் சிவகார்த்திகேயன் படங்கள் எல்லாமே அந்த ரகம்தான்...
    வேலைக்குப் போகமாட்டார்...
    வெட்டியா சுத்துவார்...
    பெரிய இடத்துப் பெண்ணை லவ்வுவார்...
    அவளுக்காக அதிகமாக செலவு செய்வார்... (எங்கிருந்து வரும்ன்னு கேக்கப்படாது)

    இப்படியே பயணிப்பது இவரின் பாணி என்பதை விட இயக்குநர்களின் விருப்பமும் அதுவே...

    இவருக்கு சூப்பர் ஸ்டாராகணும்... எவன் கெட்டா இவருக்கென்ன...

    அருமையான கேள்விகள்...

    ReplyDelete
  4. இன்று இளைஞர்களை மையமாக வைத்து வெளிவரும் எல்லா படங்களுமே இந்த ரகம்தான். கதாநாயகன் எப்போதும் ஊதாரியாகவே இருப்பான். ஆனால் அவன் விரும்பும் பெண்ணுக்கு மட்டும் அனைத்து தகுதிகளும் இருக்கும். தனக்கு எந்த தகுதி இல்லாவிட்டாலும் அதை பற்றி கவலைப்படாமல் எந்தவித பெண்ணையும் விரும்பலாம் என்றுதான் சினிமா கத்துக்க கொடுக்கிறது. அதனால்தான் பெண் உணர்வை மதிக்காமல் கொன்று போடும் ராம்குமார்கள் உருவாகிறார்கள். பெண்களை மதிக்கும் சினிமாக்கள் வருவதே சமூகத்துக்கு நல்லது.
    அருமையான விமர்சனம்.

    ReplyDelete
  5. நல்ல கேள்விகள் சகோ! நச் விமர்சனம்

    ReplyDelete
  6. இன்றைய படங்கள் இளைஞர்களை தவறான வழிக்கு அழைத்துச் செய்வது
    கொடுமை சகோதரியாரே

    ReplyDelete
  7. the irony is this siva talks like a budhha in a private event...
    he has not honoured his committments...
    he is not even grateful to director pandia raj who lifted him up...
    besides he targheted all girls men in the name of KALAAIPPU
    many people got wounded by his remarks
    and now he is crying in all functions...

    ReplyDelete
  8. en purithal padi padam nalathaan iruku poluthpokukana amsam iruku nala karuthukal solapatu iruku. hero nala padikera payan thaan avan virupam nadikan aaga vendum. naadakam nadikeran aprom cinema nadika aasai 2 nd part fulla movie ya edukuraga. remo kula innoru movie iruku. jjt pr

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...