World Tamil Blog Aggregator Thendral: நாங்க கொடுக்கிறோம்மா.

Friday 11 March 2016

நாங்க கொடுக்கிறோம்மா.

நாங்க கொடுக்கிறோம்மா! ------------------------------------

கற்பித்தலின் போது எப்போதும் குழந்தைகளை படிக்கலன்னு தண்டிப்பது இப்போது இல்லை .

பணிக்கு சேர்ந்த புதிதில் அடித்து விட்டு ,நான் அழுவதைப்பார்த்து மாணவர்கள் ஏன் மிஸ் அழுவுறீங்க எங்க நல்லதுக்கு தானே அடிச்சீங்கன்னு சொல்வாங்க..இன்று அந்த மாணவர்கள் என்னுடன் தொடர்பில் மிகுந்த அன்புடன் என்னுடன் தொடர்பில் உள்ளனர்.

27 வருட அனுபவம் குழந்தைகளை குழந்தைகளாகப் பார்க்க கற்றுக்கொடுத்துள்ளது...
குழந்தைகளிடம் இருந்தும் நாள் தோறும் கற்றுக்கொண்டே வருகின்றேன். குழந்தைகளுக்கு என்ன படிக்க விருப்பமோ அதைப்படியுங்கள் என்று சொல்லி விடுவேன்.ஒருமதிப்பெண் வினா மட்டும் தான் என்றாலும் என்னைப்பொறுத்தவரை கற்றலில் பின் தங்கியுள்ள குழந்தைகளுக்கு ஓகே தான்.
 குழுவாகப்படிக்கும் போது கண்காணிப்பாளராக மட்டும் என் செயல் பாடுகள் இருக்கும்.. படிப்பது அவர்களுக்காக தான் என்ற எண்ணத்தை எப்போதும் அவர்கள் மனதில் ஊன்றி விடுவேன். யாருக்காக படிக்கிறீங்கன்னு கேட்டால் கோரஸாக எங்களுக்காகன்னு பதில் வரும்.

 பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு பணிக்கு போறேன்மா.நான் இல்லன்னு படிக்காம இருக்க கூடாதுன்னு பாவமா கேட்டதும் இல்ல அம்மா நாங்களே டெஸ்ட் எழுதி படிக்கின்றோம்னு சொன்னாங்க...

 இன்று வகுப்புக்கு சென்றபோது குழுத்தலைவிகள் அருகே ஓடி வந்து அம்மா பரிசு கொடுங்கம்மான்னு சத்தம் என்ன பரிசுடான்னு கேட்ட போது .. அம்மா நாங்களே தேர்வு வச்சோம்மா...நல்ல மதிப்பெண் எடுத்தவர்களுக்கு பரிசு வாங்கிட்டு வந்திருக்கோம்மா நீங்க கொடுக்கனும்னு குழுத்தலைவிகள் சொன்ன போது கண்கலங்கி விட்டேன்...

 நீங்க தானே வாங்கி வந்தீங்க நீங்களே கொடுங்கன்னு சொன்னதும் அனைவருக்கும் பரிசளித்தனர்.





 இதில் வருடத்துவக்கத்தில் எதைப்பேசினாலும் மந்தமாகவே இருக்கும் முத்துலெட்சுமி கார்த்திகா,ஆஃப்ரின்,அகல்யா,அஸ்வினி,என்ற குழந்தைகளும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து பரிசு வாங்கிய போது மனம் நெகிழ்ந்து விட்டேன்.

பரிசு என்னவோ பென்சிலும் ,லெட் பேனாவும் .,ரப்பரும் தான் என்றாலும் அதை கொடுக்கனும்னு தோன்றிய குட்டி மனங்கள் என் மனதை நெகிழச்செய்து விட்டனர்.

இதைவிட பரிசு வாங்கிய குழந்தைகள் எங்களுக்கு பரிசு கொடுத்த லீடருக்கு நாங்க எல்லாரும் சேர்ந்து ஒரு பரிசு கொடுக்கிறோம்னு சொன்னது தான் ஹைலைட்... வேறென்ன வேண்டும்...எனக்கு...இதைவிட..





















11 comments :

  1. அருமையாக நடத்தி
    வருகிறீங்க சகோ......
    உங்களை விட அன்பான
    ஆசிரியரை நான் இதுவரை
    பார்த்ததே இல்லை........
    வாழ்த்தி வணங்குகிறேன் சகோ....
    தொடருங்கள் பணியை....

    ReplyDelete
  2. சந்தோஷ தருணங்களை
    பதிவிட்டதை மிகவும் இரசித்தேன்

    யாரும் விடுதலாகிவிடக்கூடாது
    என அக்கறையுடன் அனைவரும்
    இருக்கும்படியாக அனைத்துப் படங்களையும்
    பதிவிட்டதில் தாய்மையின் மென்மையைக் கண்டேன்

    மனம் கவர்ந்த பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அருமை அருமை சகோ. இப்படி அன்புடன் செய்தால் குழந்தைகள் வெற்றியைத் தொட்டு விடுவார்கள். எங்கள் பள்ளி நினைவுகளை மீட்டெடுத்தது.

    கீதா: ஒரு மார்க் வினா விடை என்றாலும் ஓகே என்று சொல்லிவிடுவேன்// என்று நீங்கள் சொல்லியது எனக்கு என் மகனின் குறைபாடு நினைவுக்கு வந்தது. ஆம் என் மகனை தேர்வில் தேர்ச்சிப் பெற வைக்க நான் கையாண்ட முறைகளில் அதுவும் ஒன்று. நான் தனியாக அவனுக்குப் பாடம் கற்றுக் கொடுத்தது வேறு. அதற்குத் தேர்வுகள் கிடையாது. வாழ்க்கைப் பாடமும், அவன் விருப்பப் பாடங்களின் சுவையானவற்றைப் பற்றியும் தகவல்களை அறிய வைத்து...பள்ளி ஆசிரியர்கள் அவனைப் புரிந்து கொள்ளாததால், அவன் தேர்ச்சிப் பெற என்று சிறிய சிறிய விடைகளை மற்றும் கற்க வைத்து தேர்ச்சிப் பெற வைத்து என்று...அப்படியும் தமிழும், இந்தியும் அவன் கஷ்டப்பட்டான், ஆங்கிலம் தேர்ச்சிப் பெறுவான் அவ்வளவே. இப்போது தமிழ் ஆங்கிலம் இரண்டும் நன்றாக வருகின்றது என்றாலும் எழுதுவதற்குக் கொஞ்சம் தாமதமாகும். எப்படியோ பள்ளி, கல்லூரி எல்லாம் கஷ்டப்பட்டுத் தாண்டி இன்று அவன் தன்னைப் பார்த்துக் கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டான். குழந்தைகள் என் நினைவுகளுக்குக் கொண்டு சென்றனர். குழந்தைகள் அனைவரும் நன்றாக வருவார்கள். நல்ல நிகழ்வு தோழி. உங்கள் அன்பு அவர்களை வெற்றியடைய வைக்கும் ஐயமில்லை. வாழ்த்துகள் தொடருங்கள் உங்கள் பணியை.

    ReplyDelete
  4. அனைவரும் தேர்வில் வெற்றி பெற எனது வாழ்த்துகள்....

    ReplyDelete
  5. வணக்கம்
    இப்படியான எண்ணங்கள் எல்லோருக்கும் வராது தங்களின் சிந்தனை உணர்வு கண்டு மகிழ்கிறேன் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. போற்றுதலுக்கு உரிய ஆசிரியை
    பாராட்டிற்குரிய மாணவிகள்
    மகிழ்ந்தேன் சகோதரியாரே

    ReplyDelete
  7. ஆஹா... சந்தோஷ தருணங்கள்.

    ReplyDelete
  8. மாணவிகளிடம் பாஸிடிவ் திங்கிங்கை
    வளர்ப்பதென்பது இதுதானே,,,,?

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் சகோ. இவர்கள் அரசுப் பள்ளி மாணவியர்தான் என்பது கூடுதல் சிறப்பு. வசதி படைத்தவர்கள் முழு மதிப்பெண் எடுப்பது ஓரு சிறப்பல்ல.
    அதனால் தான், இது போன்ற அரசுப் பள்ளி மாணவர்களை எமது சிறகுகள் அறக்கட்டளை ஊக்கபடுத்தி சிறப்பிக்கிறது. அது தொடர்பான பதிவுகளை இங்கே காணலாம்.

    http://aarurbass.blogspot.com/2015/06/blog-post.html
    http://aarurbass.blogspot.com/2014/12/blog-post_30.html

    ReplyDelete
  10. பாராட்டுக்கள் உங்களுக்கும்..அன்பான மாணாவிகளுக்கும் ..
    மிக அழகாக குழந்தைகளை வழி நடத்துகிறிர்கள் ....அவர்கள் என்றும் இதுபோல் அன்பாக மகிழ்வாக இருக்கட்டும் ...

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...