World Tamil Blog Aggregator Thendral: கவிப்பேராசான் மீரா விருது 2015

Tuesday 29 March 2016

கவிப்பேராசான் மீரா விருது 2015

நன்றி நன்றி வளரி ஆசிரியர் குழுவிற்கு!

வளரி கவிதை இதழ்மற்றும்,சூல் வாசிப்புத்தளம் ஒருங்கிணைக்கும் கவிப்பேராசான் மீரா விருது 2015 வழங்கும் விழா

 நாள்:3.4.16 இடம்:மதுரை .நற்றிணை அரங்கு..[மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் அருகில்]

 எனது அன்புத்தோழி தேன் மதுரத்தமிழ் கிரேஸும் நானும் 3.4.16 அன்று பெறுகின்றோம்..கிரேஸுடன் பெறுவதை பெருமையாக கருதுகின்றேன்.    




வளரி ஆசிரியரிடமிருந்து 2015 இல் ஒரு அழைப்பு அலைபேசியில் வந்தது.நான் வளரி ஆசிரியர் பேசுகின்றேன் மா...வளரி இதழ் நடத்திய 2015 கவிப்பேராசான் மீரா விருதிற்காக பெண்கவிஞர்களுக்கான கவிதைப்போட்டியில் உங்களின் நூல் வெற்றி பெற்றுள்ளது என்ற போது நம்ப முடியாது என்னையே நான் கிள்ளிப் பார்த்துக்கொண்டேன்....

 இப்போட்டியைப் பற்றி ஏழைதாசன் அவர்கள் அலைபேசியில் பகிர்ந்த நினைவும், அதற்காக எனது நூல்களை அனுப்பி வைத்ததும், அப்போது தான் நினைவிற்கு வந்தது...

நமக்கு எங்கே கிடைக்க போகிறது என்ற நினைவில் அதை மறந்து விட்டேன் என்பது தான் உண்மை...

 எனது நூல் எந்த அடிப்படையில் வெற்றி பெற்றது என்பதை தெரிந்து கொள்ளும் ஆவலில் கேட்ட பொழுது,வளரி ஆசிரியர் திருமிகு அருணா சுந்தரராசன் அவர்கள், கவிஞர் மீரா, எளிமையான சமூக அக்கறையுள்ள கவிதைகளையே விரும்புவார் என்பதால் சமூகம் சார்ந்த கவிதைகளால் ,உங்களது :”விழிதூவியவிதைகள்” கவிதை நூல் பல கட்ட தேர்வில் வெற்றி பெற்றுள்ளது என்றும் கூறினார்...

மனம் மகிழ்வில் பறந்ததை கூற வார்த்தையில்லை. எனது கவித்திறனை, நான் உணரும் தருணமாய் எண்ணி மகிழ்கின்றேன்..

 உங்கள் வாழ்த்துகளுடன் வளரி இதழ் தரும் விருதை ,உங்களால் பெற உள்ளேன்.

 வாய்ப்பு உள்ள தோழமைகளை அன்புடன் கலந்து கொண்டு சிறப்பிக்க அழைக்கின்றேன்..

20 comments :

  1. விருது விழா சிறக்க எமது
    சின்ன வாழ்த்துக்கள் சகோ
    அப்படியே உங்களுக்கும்
    எனது வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
    Replies
    1. மனம்நிறைந்த நன்றிபா.

      Delete
  2. விருது விழா சிறக்க எமது
    சின்ன வாழ்த்துக்கள் சகோ
    அப்படியே உங்களுக்கும்
    எனது வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  3. இனிய வாழ்த்துகள் தோழி. தொடர்ந்து சிறப்புகள் வந்துசேரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. மனம்நிறைந்த நன்றிமா....

      Delete
  4. சகோதரிகள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரரே..

      Delete
  5. மனம் நிறைந்த வாழ்த்துகள். மென்மேலும் தங்களது சாதனைகள் தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த நன்றி அய்யா..

      Delete
  6. சகோதரி அவர்களுக்கும் மற்றும் தேன்மதுரத்தமிழ் கீதா அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். அட்லாண்டாவில் இருக்கும் தேன்மதுரத்தமிழ் ஆவர்கள் விழாவின்போது இங்கு வருகிறாரா/

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த நன்றி சகோ...இல்லை அவரது தங்கை வருவார் என நினைக்கின்றேன்..

      Delete
  7. விருதுகள் தொடர்ந்து பெற வாழ்த்துகள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த நன்றி சகோ.

      Delete
  8. ஒரே நேரத்தில் எனது இரண்டு தங்கையர்க்கும் விருது என்னும் போது, நானடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்பதுதான் உண்மை. அந்த நூலின் அட்டையோடு உள்ளிருந்து சில கவிதைகளையும் எடுத்துப் போடலாம் ல? நான் அந்தக் கவிதைத் தொகுப்புக்குத் தந்திருந்த அணிந்துரைக்கு “நேர்மையான கவிதைகள்” என்று தலைப்புத் தர, தங்கம்மூர்த்தி, “நேர்மையின் நிறமணிந்த கவிதைகள்” என்று தலைப்பிட்ட அணிந்துரையைத் தந்ததும் இந்தத் தொகுப்புக்குத் தானே? மிக்க மகிழ்ச்சிம்மா. இன்னும் இன்னும் பலவிருதுகளோடு, மக்கள் மனங்களையும் வென்று வளர வாழ்த்துகள் மா.

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த நன்றி அண்ணா...தொடர்ந்து உங்களின் ஊக்கமும் தூண்டுதலும் தான் என்னை இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்க வைத்துள்ளது....புதுகையே என்னை எனக்கு அடையாளப்படுத்தி உள்ளது அண்ணா...

      Delete
  9. தேன்மதுரத் தமிழில் எழுதும் இரண்டு மகளிர் திலகங்களுக்கும் பரிசு கிடைப்பது மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்க, வளர்க!

    ReplyDelete
  10. எளிமையான சமூக அக்கறையுள்ள, சமூகம் சார்ந்த கவிதைகளால், உங்களது ”விழிதூவியவிதைகள்” கவிதை நூல் பல கட்ட தேர்வில் வெற்றி பெற்றுள்ளது என்பது கேட்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

    தங்களுக்கும் தங்களுடன் பரிசுபெறும் தோழிக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    மென்மேலும் தாங்கள் பல நூல்கள் வெளியிடவும், இதுபோல வெற்றிமேல் வெற்றி பெறவும் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. பரிசுக்கு வாழ்த்துக்கள்!!!!!!

    ReplyDelete
  12. இன்னும் பல விருதுகளைப் பெற வாழ்த்துகள்!

    ReplyDelete
  13. கிரேசுடன் பெறுங்கள். எங்கள் கிரேஸ் வாழ்த்து எப்போதும் உண்டு. வாழ்த்துக்கள் தோழி ...!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...