World Tamil Blog Aggregator Thendral: 2.7.15 இன்று என் வகுப்பு மாணவிகளுக்கு மறக்க முடியாதநாள்

Thursday 2 July 2015

2.7.15 இன்று என் வகுப்பு மாணவிகளுக்கு மறக்க முடியாதநாள்












2.7.15 இன்று என் வகுப்பு மாணவிகளுக்கு மறக்க முடியாதநாள்
----------------------------------------------------------------------------------------------------------
ஆம், இன்று அவர்கள் மகிழ்வின் எல்லையை, வியப்பின் உச்சத்தை தொட்டு வந்தார்கள்....

காலை 10 மணியளவில் 42 குழந்தைகளும், நான்கு ஆசிரியர்களும் தொல்பழங்காலமறிய புதுக்கோட்டையில் உள்ள தமிழ்நாட்டிலேயே இரண்டாவது மிகப்பெரிய அருங்காட்சியகத்திற்கு  சென்றோம்....

ஆறாம்வகுப்பு வரலாற்று பாடத்தில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் ,சிந்துசமவெளி நாகரிகம் ஆகிய பாடங்களுக்குக்கான ஆதாரங்கள் இந்த அருங்காட்சியகத்தில் இருந்தன.

கண்கள் விரிய ஒவ்வொன்றையும் ரசித்து வியந்து குதித்து கும்மாளமிட்டதைக்காண கண்கள் கோடி வேண்டும்..

இந்த வருடம் புது வரவாக அருங்காட்சியகத்தில் டைனோசர் ஒன்று வந்து எங்களை உருமி வரவேற்றது ..முதலில் குழந்தைகள் பயந்தாலும் பிறகு ஆசையுடன் அதனுடன் விளையாட வேண்டுமென கூறினார்கள்...பேசவே பேசாத சுகன்யா டைனோசரின் முதுகில் உட்கார்ந்து சறுக்கி விளையாடனுமென்கிறாள்...
பிரியதர்ஷ்னிக்கு அதன் அசையும் வயிறு தான் பிடித்துள்ளதாம்.ஒரு குட்டி அதன் வாயில் விரல வைக்கனுமாம்...

பதப்படுத்தப்பட்ட பாம்புகளைப்பார்த்து அச்சத்தில் ஒதுங்கினர்...எல்லா குழந்தைகட்கும் பறவைகளும்,மயிலும் பிடித்திருந்தன...

இரண்டு தலைகளுடன் பிறந்திருந்த கன்றுகுட்டி,ஆட்டுக்குட்டியைப் பார்த்து அதிசயித்தனர்.

இசைக்குருவிகளும்,போர்க்கலத்தில் அணியும் இரும்பு உடைகளும்,துப்பாக்கிகளும்,பீரங்கியும் ,ஈட்டியும் வாட்களும்....குழந்தைகளை வரலாற்றுக்காலத்திற்கு அழைத்துச்சென்றன.

முதுமக்கள் தாழியை அச்சத்தோடு எட்டிப்பார்த்தது ஒரு குட்டி...

தமிழெழுத்துகள் வளர்ந்த விதம்.கற்சிலைகள்,உலோகப்பொருட்கள்...எல்லாவற்றையும் கண்டு மகிழ்ந்தனர்...

வாழ்க்கையில் மறக்கவே முடியாதும்மா என்றதுடன் வகுப்புத்தோழிகளுடன் பார்த்தது தான் மிகவும் பிடித்திருப்பதாகக் கூறினர்..

இக்காலத்தில் குழந்தைகளை வெளியில் அழைத்துச்சென்று பத்திரமாக வருவென்பது சிரமமான ஒன்று என்பதால் அனைவரும் விரும்புவதில்லை..ஆனாலும் குழந்தைகளை அழைத்து செல்கின்றேன் எனக்கேட்டவுடன் அனுமதி வழங்கி எல்லாவற்றையும் குழந்தைகள் பார்க்க வேண்டுமென்று கூறிய எங்கள் பள்ளித்தலைமையாசிரியருக்கும்,என்னுடன் வந்து குழந்தைகளை பார்த்துக்கொண்ட ஆசிரியர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்...

6 comments :

  1. மாணவிகளுக்கு வாழ்த்துக்கள். தங்களின் பெருமுயற்சிக்குப் பாராட்டுக்கள்.
    தினமணியில் வெளியான எனது முதல் பேட்டியை http://www.ponnibuddha.blogspot.com/2015/07/blog-post.html என்ற இணைப்பில் காண அழைக்கிறேன்.

    ReplyDelete
  2. ஆகா... அருமையான சுற்றுலா .................வாழ்த்துக்கள்

    எங்களுக்கும் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது ...

    ReplyDelete
  3. இந்த பதிவை படிக்கும் போது என் மனதில் தோன்றியதை கடைசி பாராவில் நீங்கள் எழுதிவிட்டீர்கள்..!
    //இக்காலத்தில் குழந்தைகளை வெளியில் அழைத்துச்சென்று பத்திரமாக வருவென்பது சிரமமான ஒன்று என்பதால் அனைவரும் விரும்புவதில்லை..ஆனாலும் குழந்தைகளை அழைத்து செல்கின்றேன் எனக்கேட்டவுடன் அனுமதி வழங்கி எல்லாவற்றையும் குழந்தைகள் பார்க்க வேண்டுமென்று கூறிய எங்கள் பள்ளித்தலைமையாசிரியருக்கும்,என்னுடன் வந்து குழந்தைகளை பார்த்துக்கொண்ட ஆசிரியர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்...//
    த ம 3

    ReplyDelete
  4. குழந்தைகளின் சந்தோஷத்தில் உங்கள் குதூகலம் பகிர்வாய் அக்கா... அருமை.

    ReplyDelete
  5. இப்படிச் சென்று வருவது குழந்தைகளுக்கு நல்லதோர் அனுபவம்..... பாராட்டுகள்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...