World Tamil Blog Aggregator Thendral: kalam...

Monday, 27 July 2015

kalam...

தெற்கின் விதையாகி
வடக்கே விருட்சமாகி
தமிழரின் புகழை
தரணியெங்கும் நிலைநாட்டியவர்..

குழந்தைகளோடு குழந்தையாய்
மாறி கலக்க அவரால் மட்டுமே
முடியும்..

அரசுப்பள்ளியின் நம்பிக்கைநட்சத்திரம்
கனவு காணச்சொன்னவர்
கனவாய் மாறினார்....

முதியோர்களினால் பயனில்லை என
மாணவர்களைப்பண்படுத்தியவர்..

”யாதும் ஊரே யாவரும் கேளிர்”
தமிழனின் குரலாய் அன்னிய தேசத்தில்
தழைத்தோங்கியத்தலைவா...

அக்னிச்சிறகுகள் உனைத்தழுவிக்கொண்டதோ

உனைப்போல உயர
உன்னதகுழந்தைகளை உருவாக்க
நீயே சாட்சியானாய்...

குழந்தைகளின் முக்கியத்துவத்திற்கும்
கிராமங்களின் உயர்வுக்கும்
காரணமானவரே.....

எளிமைக்கே எளிமையாய் வாழ்ந்தவரே
நீ இருந்தபோது மட்டுமே
குடியரசு மாளிகை பெருமையாலும்
எளிமையாலும் புகழ்பெற்றது,,,

தன் குருவைமறக்காத குருவே
உன் வாழ்க்கையே தமிழருக்கு
வழிகாட்டியாய்,
ஆசிரியராய்,விஞ்ஞானியாய்,
இந்தியாவின் முதல் மகனாய்
வாழ்ந்தவரே...

உங்களின் பிரிவால் கலங்கி நிற்கின்றோம்...அய்யா..

9 comments :

  1. ஆழ்ந்த இரங்கல்கள்... மனசு வலிக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. இனியொருவர் உண்டோ இவரைப்போல்...

      Delete
  2. மனசுமிகவும் வேதனிக்கின்றது! நாம் மாமனிதரை இழந்து விட்டோம்.... மாணவர்களுக்கு பெரும் இழப்பு! ஆழ்ந்த இரங்கல்கள்! அவரது கனவைச் சிறிதேனும், நம்மால் முடிந்தவரையில், நாமும் நமது சந்ததியினரும் நிறைவேற்ற முயற்சித்தால் அதுவே நாம் அவருக்குச் செய்யும் அஞ்சலி, மரியாதை!

    ReplyDelete
  3. நம்மை கனவு காண வைத்துவிட்டு, நம்மைவிட்டுச் சென்றுவிட்டார் ஒரு முன்னுதாரண மனிதர். அவருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  4. திடீர் பிரிவு
    சொல்லொன்னா
    வேதனையினை அளிக்கிறது

    ReplyDelete
  5. அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலிகள்...

    ReplyDelete
  6. அருமை மனிதரை இழந்தோம்! ஆழ்ந்த இரங்கல்கள்!

    ReplyDelete
  7. நீங்கள் நீண்ட கவிதை எழுதி வெகுநாள் ஆயிற்று! கலாம் உங்களுக்குள் இருந்து எழுதவைத்திருகிறார் அக்கா! மாணவர் தலைவன் என்றே அழைக்கத் தோன்றுகிறது!:(

    ReplyDelete
  8. டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்!

    தெற்கின் விதையாகி
    வடக்கே விருட்சமாகி
    தமிழரின் புகழை
    தரணியெங்கும் நிலைநாட்டியவர்..

    அறிஞர் அப்துல்கலாமிற்கு; நாம் என்ன செய்யப் போகிறோம்?
    http://eluththugal.blogspot.com/2015/07/blog-post_28.html

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...