World Tamil Blog Aggregator Thendral: ஆ

Friday, 14 March 2014

வாசலிலே வந்துருக்கேன்
வாடியம்மா கஞ்சி ஊத்த

காலையில கறந்துட்ட
கதியத்த என் கன்னு
கத்துது பசியோட..

குருதியெல்லாம் பாலாக
ஊத்தம்மா கழுநீரு

குச்சியெடுத்து விரட்டுறியே
கறக்கும் போது
காலம் பார்த்த
கஞ்சி குடுக்க
பார்த்தா என்ன....?

10 comments :

  1. அதானே...?
    சுயநலம் ஒன்றே பிரதானம்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார்.நன்றி

      Delete
  2. அதானே?
    தாய்நாடு பற்றியெல்லாம்
    தமிழ்க்கவியும் எழுதுறாங்க,
    தாய் மாடு பற்றி ஒரு
    தாய்தானே எழுதுகிறார்?
    அருமையான கற்பனை வளம்
    அழகான சொற்புனை நலம். தொடர்க!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வாழ்த்துக்களால் வளரட்டும் என் கவிதை

      Delete
  3. குருதி மற்றும் கழுநீரு ரெண்டு சொல் மட்டும் -செய்யுளுக்கே உரிய சொற்களாகத் துருத்தி நிற்கின்றன. ரெண்டையும் ரெத்தம், கழனித் தண்ணி னு மாத்தியிருந்தா இன்னும் சிறப்பாகி யிருக்கும்ல? ( பேச்சு நடை கவிதையின் அழகை அதிகப் படுத்தும் அதே வேளையில் கவிஞரைக் கூடுதலா வேலைவாங்கும்)

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் தோழர்.இயல்பான பேச்சை படித்த படிப்பு தடைசெய்தாலும் மீறி எழுந்த கவிதை.நன்றி

      Delete
  4. வித்தியாசமான நடையில் அருமையான கவிதை!

    ReplyDelete
  5. அருமையான சிந்தனை நியாயமான கேள்வி வாழ்த்துக்கள் தோழி....!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...