World Tamil Blog Aggregator Thendral: கருக்கு

Tuesday, 4 March 2014

கருக்கு

                                  ” சாதிகள் இல்லையடி பாப்பா
                                   குலத்தாழ்ச்சி உயர்ச்சி
                                    சொல்லல் பாவம்”
 என்று பாரதி பாடி,பெரியார் போராடி நூறாண்டுகள் கடந்துவிட்டன.செவ்வாய் கிரகத்திற்கு போனாலும் சாதியையும் சேர்த்தே கொண்டு போவோம் போல....மனிதர்களை ஒன்று சேர்க்காத கல்வி எதற்கு என்றே தோன்றுகிறது
                                         ”கருக்கு”ஆசிரியர் பாமா.
                 சிறகொடிக்கப் பட்ட பறவையின் வலியில் எழுந்த நாவல் இன்று அவரை உச்சி வானில் உலாவரும் இராஜாளியாக உணர வைத்துள்ளது.
 கடுமையான விமர்சனங்களுக்கிடையே இந்நாவல் உதயமாகி உள்ளது.இதனால் ஏற்பட்ட பிரச்சனைகள் இந்நாவலாசிரியரின் சாதனைகளுக்கு படிக்கற்களாக மாறியுள்ளன விளிம்பு நிலை மக்களின் வாழ்வை கண்முன் கொணரும் கலைக்களஞ்சியமாய்த் திகழ்கிறது” கருக்கு”சாதி பிடியில் சிக்கி சிதைக்கப் பட்டவருக்கும்,விளிம்பு நிலைக்கு விரட்டப்பட்டவர்களுக்கும் தங்களது வாழ்க்கைப் பாதையில் மறு பயணிப்பு செய்யவும் ,உளச்சிக்கலை உடைத்தெறிந்து விட்டு தன் மானத்துடன் தலைநிமிர்ந்து சுதந்திரமாக வாழவும் ஒரு உத்வேகத்தை அளித்துள்ளது ”கருக்கு”   என்பது இந்நாவலாசிரியரின் கருத்தாகின்றது .
                                      மலையாளம்,தெலுங்கு,கன்னடம்,ஆங்கிலம் என பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்ட இந்நூல் விளிம்பு நிலை மக்களின் .மொழி,வாழ்நிலை,இச்சமுதாயத்தில் அவர்களுக்கு மறுக்கப்படும் நீதி என அனைத்து நிலைகளையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.கிராமத்து மக்களின் பேச்சு வழக்கிலேயே நாவல் நடைபயில்கிறது.மேற்கு தொடர்ச்சி மலையின் கண் உள்ள கிராமத்தை விவரிக்கும் அழகே நம்மை அக்கிராமத்தில் ஒருவராக கைக்கோர்க்கின்றது  .யதார்த்தமாய்  அவர்களது வலியைப் போகிற போக்கில் படம் பிடித்துக் காட்டுகின்றது.குழந்தைப் பருவச் செயல்களை மனதைக்கொள்ளை கொள்ளும் இயற்கை காட்சிகளுடன் விவரிக்கும் பாங்கு இயற்கை மீதுள்ள காதலைக் காட்டுகின்றது.

      விடியற்காலைச் சூரியன் ,அந்திப்பொழுது சூரியன் மறையும் காட்சி  என அவரின் ரசனை வெளிப்படும் பாங்கு மிக அழகானது.விளிம்பு நிலை மக்களின் பெயரில் கூட சாதி வேரூன்றியுள்ளதை உணரவைக்கின்றார்.

இவரின் பாட்டி கூற்றில்
             “நமக்கு சோறு போடும் மகராக அவுக இல்லன்னா,எப்பிடி நாம பிழைக்க முடியும் ?பரம்பரை,பரம்பரையாக அவுக மேல் சாதி,நம்ம கீழ்சாதின்னு இருக்குதுல்ல அதை மாத்திட முடியுமா?”என்பதில் குருதியில் கலந்துள்ள அடிமைத்தன்மையை உணர முடிகின்றது.
பள்ளிக்கூடம்,விடுதி,ஆசிரியர் ,வார்டன், மட்டுமல்ல சேவை செய்ய துறவறம் மேற்கொண்டவர்களும்என ஒவ்வொருவரும்  சாதிப்பாகுபாடு காட்டும் தன்மையை தோலுரித்துக்காட்டுகின்றார்.
                               இந்நாவல் வெளிவந்த போது இவர் அடைந்த சிரமங்கள் இவருக்கு பலம் சேர்ப்பவையாக மாறியுள்ளன.
சாதித் தீண்டாமை நிலைநிறுத்த மதங்களுக்கிடையே பாகுபாடில்லை
என்பதை எளிய ,யதார்த்தமான நடையில் சாட்டையடியாய் கூறி நம்மை உறைய வைக்கும் நூலாகக் ”கருக்கு” திகழ்கின்றது.
         

8 comments :

 1. நூலின் சுருக்கமான விமர்சனமும் சிறப்பு... விரைவில் உங்களை சந்திக்கும் போது வாங்கிக் கொள்கிறேன்...

  ReplyDelete
 2. இன்றைய பகிர்வில் சில பகுதிகள் உங்கள் தளத்திற்கும் உதவக் கூடும்... முக்கியமாக கீழ் உள்ள தலைப்பு :

  6. .in என்பதை .com-யாக மாற்றி எல்லா நாட்டவரையும் வாசிக்க வைக்க...!

  இணைப்பு : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisom-3.html

  நன்றி...

  ReplyDelete
 3. nool vimarsanam mikavum arumai, vaazhthukal

  ReplyDelete
 4. நல்ல நூலாக இருக்கும் என்றுபடுகிறது...
  படிக்க முயற்சிக்கிறேன்..

  ReplyDelete
 5. அருமை சகோதரியாரே
  அவசியம் வாங்கிப் படிக்கின்றேன்
  நன்றி

  ReplyDelete
 6. கருக்கு நூல் அறிமுகம் வாசிக்கும் ஆர்வத்துக்கு உரமேற்றுகிறது. வாய்ப்பு அமைகையில் அவசியம் வாசிப்பேன். பகிர்வுக்கு நன்றி கீதா.

  ReplyDelete
 7. மகளிர் தினத்துக்கு ஏற்ற அருமையான அறிமுகம் சகோதரி!!

  ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...

There was an error in this gadget