World Tamil Blog Aggregator Thendral

Wednesday, 16 November 2016

முன் மாதிரிப்பள்ளி-செவ்வாய்ப்பட்டி ஊ.ஒ.ந.நி.பள்ளி கரம்பக்குடி ஒன்றியம்.புதுக்கோட்டை





ஒன்பது மஞ்ச வேன் வந்த ஊர்ல இப்ப ஒண்ணு தான் வருது அதையும் வராம பண்ணிடுவோம்..

தன்னம்பிக்கையோடு கரம்பக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமிகு சந்திரா அவர்கள் சொன்ன போது நம்பவே முடியவில்லை தான்..ஆனால்...

27.10. 16 இன்று கரம்பக்குடியில் உள்ள செவ்வாய்ப்பட்டி ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளிக்கு பள்ளிப்பரிமாற்றத்திட்டத்தின் படி காலை 8.00 மணிக்கு கிளம்பி  குழந்தைகளின் நடனங்களால் வாகனம் அதிர அதிர 9.00 மணிக்கு இருபது மாணவிகளுடன் ,எங்கள் பள்ளித்தலைமையாசிரியர் ,பொறுப்பாசிரியர்கள் கிருஷ்ணவேணி மற்றும் கீதா[நான்] ஆகியோர் சென்றோம்..

பள்ளியின் நுழைவாயிலில் மாணவர்களும் பள்ளித்தலைமையாசிரியருடன் அனைத்து ஆசிரியர்களும் வந்து வரவேற்றனர்..

சாரண ,சாரணீய மாணவர்களின் சீருடை அணிவகுப்பு மரியாதை மிக நேர்த்தியாக ,சிறந்த காவலர்கள் அணிவகுப்பிற்கு இணையாக மாணவர்கள் அணிவகுத்து சென்ற விதம் மிக அருமை...

கொடியேற்ற நிகழ்விற்கு பின் , அனைவருக்கும் மாணவர்களே தயாரித்த பூங்கொத்து கொடுத்து, வரவேற்று, இறைவணக்கக் கூட்டம் நடந்தது.
சந்தைப்பேட்டைபள்ளியின்  தலைமையாசிரியர் திருமிகு அமுதா அவர்கள் வாழ்த்துரை வழங்க,மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளோடு அன்றைய நாள் துவங்கியது..



மாணவிகளின் கைகளில் நூல் கண்டைக் கொடுத்து நட்சத்திரமாக வடிவமைத்து பின் அழகாகப்பிரித்து அவர்களின் நட்பை வலுப்படுத்திய விதம் அருமை.

வகுப்பறையா அல்லது விண்வெளியா என மலைத்து நின்றோம். அறியலின் முன்னேற்றங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கி உலகத்தை மாணவர்களுக்கு காட்டி வருகின்றது.

தலைமையாசிரியர் திருமிகு சந்திரா அவர்கள் எட்டாம் வகுப்பு தமிழ்ப்பாடத்தை மிக அருமையாக ஸ்மார்ட் கிளாஸாக எடுத்தார்..பாட அறிமுகம் செய்ய திருமிகு அழகேஸ்வரி ஆசிரியரின் சைகை மொழி நடிப்பு மிகவும் பாராட்டுதற்குரியது..
வீர சிவாஜியின் வசனத்தை மாணவர்கள் நடித்து காட்டி வகுப்பிற்கு மெருகூட்டினர். 
















உணவுத்திருவிழா கண்காட்சியை உயர்திரு உதவிக்கல்வி அலுவலர் கரம்பக்குடி அவர்கள் திறந்து வைத்தார்கள்....கூடுதல் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களும் ,வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டு கண்காட்சியைச்சிறப்பித்தனர்.





















மாணவர்கள் காய்கறிகளை பல உருவங்களாகச்செதுக்கி அதன் பயன்களை ஆங்கிலத்திலும் ,தமிழிலும் எடுத்துரைத்த விதம் மிகச்சிறப்பு...ஆங்கில எழுத்துகள் ஏ முதல் இசட் வரை உள்ள பெயர்களைக்கொண்ட காய்கள் மற்றும் பழங்களைத் தேடித்தேடி அதை கண்காட்சியில் வைத்து அதன் சிறப்புகளை மாணவர்களைக் கூற வைத்த தலைமையாசிரியரையும்,உடன் ஒத்துழைத்த ஆசிரியர்களையும் மனம் நிறைந்து பாராட்டலாம்.

வகுப்பறைச்சுவர்கள் கண்கவரும் ஓவியங்களோடு கருத்தையும் கவர்ந்தன.
பள்ளிக்கு முன் மிகப்பெரிய விளையாட்டு மைதானம் அமைந்து தூய்மையான காற்றையும் ,பள்ளிக்கு ஒரு பிரமாண்டத்தையும் தந்து கொண்டுள்ளது.

கழிப்பறைகள் மிகத்தூய்மையாக இருந்ததைக்கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.   

மாணவர்கள் சுற்றுப்புறச்சூழலை மிகத்தூய்மையாக வைத்திருக்கிறார்கள்.
ஒவ்வொருவரும் பொறுப்புணர்ந்து செயல்படுகின்றனர்...அவர்களே இந்நாட்டின் விதைகள் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பும்,தங்கள் பள்ளிக்காக ஆசிரியர்கள் அனைவரும் மாதம் ரூபாய் 500 பங்களித்து பள்ளிக்குத்தேவையான வசதிகளைச்செய்வது அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எல்லாம் ஒரு எடுத்துக்காட்டு.
தனியார் மூலம் தொடுதிரை கணினி வகுப்பு அமைத்துள்ளது தலைமையாசிரியரின் அர்ப்பணிப்புக்கு கிடைத்த பரிசு எனலாம்.

தமிழ்நாடு அரசு நல்லாசிரியர் விருது கொடுத்து தலைமையாசிரியர் திருமிகு சந்திரா அவர்களை கௌரவித்துள்ளது.தனக்கான அரசு அளித்த பரிசுத்தொகையினையும் அப்பள்ளிக்கே தந்து மகிழ்ந்த அவரை என்ன சொல்லி பாராட்டுவது எனத்தெரியாமல் திகைக்கின்றேன்.

இத்தனைக்கும் காரணம் தன்னுடன் பணிபுரியும் சக ஆசிரியர்களே என எளிமையாகக்கூறி ,அவர்களை பொறுப்பு மிக்க ஆசிரியர்களாக உருவாக்கியுள்ளார்.அத்தனை ஆசிரியர்களும் மாணவர்களும் கொண்டாடும் அப்பள்ளியின் தலைமையாசிரியர் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஓர் மிகச்சிறந்த உதாரணம்.

செவ்வாய்ப்பட்டிக்குள் வந்த ஒன்பது மஞ்சள் வாகனங்களை அழித்து அவ்வூருக்கு திறமையான குழந்தைகளை உருவாக்கி தந்து வருகின்றார்.
படிப்பிலும் ,ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கும் மாணவர்களை உருவாக்கி வரும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும்
மனம் நிறைந்த வாழ்த்துகள்.  



மனம் நிறைந்த வாழ்த்துகள் கவிஞர் பூபாலனுக்கு..


மனம் நிறைந்த வாழ்த்துகள் கவிஞர் பூபாலனுக்கு..

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றமும் நியூசெஞ்சுரி புத்தக நிலையமும் இணைந்து நடத்திய விழா

கவிதைகளுக்கான

கே.சி.எஸ் அருணாசலம் விருது

கொலுசு மின்னிதழின் ஆசிரியர் கவிஞர் பூபாலனின்

”ஆதி முகத்தின் காலப்பெருநதி ”என்ற கவிதை தொகுப்பிற்காக 12.11.16 அன்று புதுக்கோட்டை நகர்மன்றத்தில் வழங்கப்பட்டது.

வீதி நண்பர்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தோம்...

இனிமையாகப் பேசக்கூடிய ,எளிமையாகப் பழகக்கூடிய,தன்னடக்கம் நிறைந்த ,தகுதிகள் நிறைந்த கவிஞர் பூபாலனுக்கு விருது கிடைத்துள்ளது பெருமகிழ்வைத்தருகின்றது...

உங்களின் வாழ்த்துகளால் மேலும் பல விருதுகள் கிடைக்கட்டும்..








மனம் நிறைந்த வாழ்த்துகள் பா...

Tuesday, 15 November 2016

ஜெய்க்குட்டியின் பிறந்தநாள் 15.11.16


ஜெய்க்குட்டியின் பிறந்தநாள்

முழுநிலா மேலிருந்து பார்க்க ஜெய்க்குட்டியின் பிறந்தநாள் காட்சிகள்

விழாவில் ரோஸ்லினுடன் பணிபுரியும் ஆசிரியர்கள்,

வீதிக்குடும்பத்தினர்களான ஜெயலெஷ்மி,மீனாட்சி சுந்தரம்,அண்ணி மல்லிகா முத்துநிலவன்,அமிர்தா தமிழ் குடும்பத்தினர்,ரோஸ்லின் உறவினர்கள் சூழ ,துருதுருன்னு ஜெய்க்குட்டி எல்லோருக்கும் கேக் தந்து ஓடி ஓடி கொடுத்துக்கொண்டிருந்தான் வண்ணத்துப்பூச்சியென...
















Monday, 14 November 2016

குழந்தைகள் தின விழா14.11.16


குழந்தைகள் தின விழா14.11.16

இன்று எங்கள் பள்ளியில் குழந்தைகள் தினவிழா மிகச்சிறப்பாக நடந்தது..
 
மாணவிகள் பாடல் ,நடனம்,பேச்சு என அசத்தி விட்டார்கள்.
 
ஆசிரியர்கள் மாணவிகளுக்காக பாடல் பாடி மகிழ்வித்தனர்...
 
மாணவிகள் கைதட்டி ,ஆர்ப்பரித்து மகிழ்ந்த கணங்கள்...வாழ்வின் இனிமையானவையாக..









 

வீதி கலை இலக்கியக்களம் -33


வீதி கலை இலக்கியக்களம் -33

நாள் 27.11.16
இடம் ஆக்ஸ்போர்டு சமையற்கலைக்கல்லூரி

இம்மாத வீதி சிறப்பு குழந்தைகளுக்கான வீதியாக செயல்பட உள்ளது...

சிறப்பு குழந்தைகளுக்காக பள்ளி நடத்தும் கருணைமிக்க ஒருவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கின்றார்..

அவர்களையும் நேசிக்கவே வேண்டும்..கருணை உள்ளங்கள் தங்களது அன்பை வீதியில் கலந்து கொண்டு காட்ட அன்புடன் அழைக்கின்றோம்.

மு.கீதா&பாலாஜி
 

Tuesday, 8 November 2016

கெட்ட வார்த்தையா டீச்சர்?


கெட்ட வார்த்தையா டீச்சர்?

இன்று மாணவிகளுக்கு அறிவியல் பாடத்தில் உறுப்பு மண்டலங்கள் என்ற பகுதியை நடத்திக்கொண்டு இருந்தேன்.

இறுதியாக இனப்பெருக்க உறுப்பு மண்டலம் என்று கூறிய போது ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்..விழித்த படி..கெட்ட வார்த்தை பற்றி பேசுறேன்னு..

அமீபாவாக இருந்த உயிர் இன்று பகுத்தறிவு பெற்ற மனிதனாக வளரக்காரணமே இனப்பெருக்கம் தான் காரணம்..

உயிர்கள் தங்களின் சந்ததிகளை பெருக்கவே இனிப்பெருக்க உறுப்புகள் உள்ளன...

ஒரு மலருக்கு சூலகமும்,மகரந்தமும் எப்படி உதவுகின்றதோ அதைப்போலவே பெண் இனப்பெருக்க உறுப்பும் ,ஆண் இனப்பெருக்க உறுப்பும்...

உயிர்களை இவ்வுலகத்திற்கு தருவதற்காக உள்ள உறுப்புகளின் பெயர்களைத் தான் இன்று கெட்ட வார்த்தையாக மக்கள் பயன் படுத்துகிறார்கள்..இது சரியா என்றேன்?..

இல்ல டீச்சர் ரொம்பத்தப்பு என்றனர்...கண் ,காது போல அதுவும் ஒரு உறுப்பு தான் அதை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டும் என்ற போது உணர்ந்து கொண்டனர்.

வளரிளம் பருவத்தில் உள்ள அக்குழந்தைகளிடம் இன்னும் பேச வேண்டும்...