சாப்பிட்டியாடா......கமர் நிஷா...
ஒரு வார்த்தை தான் கேட்டேன்...பொங்கி வரும் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல்...... வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு இல்லை என்று தலையாட்டினாள்....
சாப்பிடலயா.... உனக்கு தானே காய்ச்சல் னு மாத்திரை கொடுத்து விட்டேன்...சாப்பிடாமலா போட்ட....அல்சர் வந்து விடுமேடா.....(பள்ளியில் என் கைப்பை தான் மருந்துக்கடை 29 வருடங்களாக)
சரி ஏன் முடியாம வந்துச்சு.....
நிறைய பாத்திரம் தேய்ச்சேன் மா....தண்ணில நின்னது ஒத்துக்கல....சுரம் வந்து விட்டது...(அவளின் அம்மா சென்ற வருடம் இறந்து விட்டார்.நல்ல தெளிவாக சிந்திக்க கூடிய புத்திசாலி மாணவி)
அப்பா எங்கே?
காலைலயே வேலைக்கு போய்டாரும்மா....
வீட்ல வேற யாரு இருக்கா...?
அண்ணன் இருக்காம்மா....அவன் தூங்கி கிட்டு இருந்தான் மா...
நான் தான் தம்பிய கிளப்பி விட்டு....வீட்டு வேலை முடிச்சேன்மா....
சாப்பாடு கொண்டு வரலயா.....இரு வாங்கிட்டு வரச் சொல்றேன்....
அதற்குள் ஒரு மாணவி அம்மா நான் இட்லி கொண்டு வந்துருக்கேன் சாப்ட சொல்லுங்கம்மா என்று சாப்பாடு டப்பாவை தூக்கி கொண்டு ஓடி வர....
வேண்டாம் மா.... நான் தோசை கொண்டு வந்துருக்கேன் என்றாள்...
சரி அவளது டிபன் பாக்ஸ எடுத்து வாங்கன்னு சொல்லி பார்த்தால்... அழகாக தோசை மை மடக்கி.குழம்பை மேல் டப்பாவில் ஊற்றி எடுத்து வந்திருந்தாள்...
யார்டா சமைச்சா?
நான் தான் மா...
எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒரு வீட்டையே சுமக்கும் கொடுமை.....
மனம் துடிக்க..கண்கலங்கி விட்டேன்.
என்ன கொடுமை.... அண்ணா உனக்கு உதவி செய்வானா என்றதற்கு மாட்டான் அம்மா என்றபோது...
சமத்துவம் வந்து விட்டது என கூறுபவர்கள் முகத்தில்.....துப்ப வேண்டும் போல் பொங்கியது...
14வயது சிறுமி வீட்டு வேலை அனைத்தும் செய்ய, தூங்கி எழுந்து அவளை குறை கூறும் 20 வயது ஆண்மகன்.
அருகில் அணைத்து ஒரு தோசையை நான் ஊட்டி விட்டதை, நிலவேம்பு கசாயம் குடிக்கச் சென்று திரும்பிய எட்டாம் வகுப்பு மாணவிகள் கண்கள் விரிய பார்த்த போது....
உன் கூடப் படிக்கும் தோழி சாப்பிட்டாளா இல்லையானு கேட்க மாட்டீர்களா?. அவளுக்கு முடியலன்னா உதவி செய்ய மாட்டீர்களா.....?
அம்மா இல்லாமல் அவள் படும் வேதனையை நீங்கள் தானே தீர்க்க வேண்டும் என்ற போது மாணவிகள் தங்கள் பொறுப்பை உணர்ந்தனர்.
மனித நேயம் தான் முக்கியம்.... படிப்பு அடுத்தது தான் என்றேன்....
அரசுப் பள்ளி குழந்தைகள்..... கவனிக்க பட வேண்டிய தெய்வங்கள்....

நெகிழ்ச்சி. படிக்கும் குழந்தைக்கு எத்தனை பெரிய சுமை....
ReplyDeleteஉண்மை சகோதரர்...தாங்க முடியாமல் அழுது விட்டேன்
Deleteமனம் கனக்கிறது அந்தக் குழந்தையின் தகப்பன் கவனிப்பது இல்லையா ?
ReplyDeleteஇதே அந்த தாய் இருந்திருந்தால் ?
இவ்வாறான குழந்தைகளை நான் கண்டுள்ளேன். மிகவும் வேதனையே.
ReplyDeleteமனம் கலங்குகிறது....
ReplyDeleteஒரு பக்கம் பசங்களுக்கு செல்லம் கொடுத்து ஒன்றும் பழக்காமல் வளர்க்கும் சமூகம்...
ஒரு பக்கம் எதையும் அறியாமல் ஆனால் அனைத்தையும் சுமக்கும் குழந்தைகள்...
என்றும் உங்கள் உயர்ந்த பணி வளரட்டும் அக்கா...
பல செல்வங்களுக்கு முன் மாதரியாக...