World Tamil Blog Aggregator Thendral: எங்கே கோளாறு?

Thursday, 29 June 2017

எங்கே கோளாறு?

எங்கே கோளாறு?

அரசுப்பயிற்சி பள்ளியில் படிக்கும் மாணவர்க்கு கல்வி உதவித்தொகை ரூ௨௦௦௦.

தனியார் பயிற்சிப் பள்ளியில் படிக்கும் மாணவர்க்கு
ரூ 23000 கல்வி உதவித்தொகை .

அதிக மதிப்பெண்கள் பெற்று முறையாக அரசுப்பயிற்சி பள்ளி மாணவிகளுக்கு குறைவான தொகை ஏன் ? ,

குறைவான மதிப்பெண்கள் பெற்று ,தேர்வுக்கு வந்தால் மட்டும் போதும் என்று சொல்லி அவர்களது
சேர்க்கையைக்காட்டி அத்தனை மாணவிகளுக்கும் கல்வி உதவித்தொகை அரசாங்கத்திடம் பெற்று ,சீருடை இலவசம் ,எந்த பணமும் கட்ட வேண்டாம் ....உதவித்தொகை முலமே படித்து விடலாம் என ஆசைக்காட்டி பயிற்சிப்பள்ளி நடத்துகின்ற தனியார் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு ஏன் அதிகத்தொகை ? .

சரி அப்படி படிக்கின்ற மாணவர்களுக்காவது பயன் இருக்கா என்றால் ...அதுவும் இல்லை வெறுமே சான்றிதழ் வாங்கிக்கொண்டு இருக்க வேண்டியது தான் .

tet தேர்வில் மதிப்பெண் வாங்கினாலும் வெயிட்டேஜ் என்று , பத்தாம் வகுப்பு ,பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் குறைந்திருந்தால் வேலை கிடைக்காது ....

இப்படி மாணவர்கள் ஏமாந்து போகும் நிலை ஏன்?

இப்படித்தான் பொறியியல் படிக்கும் மாணவர்களின் நிலையும் ..ஏதோ கிடைத்ததைப்படித்து விட்டு வேலையின்றி அலையும் ஒரு சமுதாயத்தை உருவாக்கி கொண்டுள்ளோம் ..என்ன செய்வது இந்நிலை தெளிவாக அனைவருக்கும் தெரிந்தும் ஏதும் செய்ய முடியாத கையறு நிலை ....

4 comments :

  1. மாற்றம் எப்போது உருவாகுமோ

    ReplyDelete
  2. இதை விட சமூகச்சீரழிவு என்ன இருக்க முடியும்...?

    ReplyDelete
  3. என் பையனுக்கும் பிடித்த பாடப் பிரிவு கிடைக்காத நிலை ,cbse ல் 472 மதிப்பெண் பெற்றும் :)

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...