World Tamil Blog Aggregator Thendral: ஆணும் பெண்ணும் சமமா ?

Friday, 7 April 2017

ஆணும் பெண்ணும் சமமா ?


 
ஆணும் பெண்ணும் சமமா ?

ஒன்பதாம் வகுப்பு மாணவி இன்று என்னிடம் வந்து மிக ரகசியமாக அம்மா ஒருத்தன் என் பின்னாடியே வந்து அவனை காதலிக்கச்சொல்லி கட்டாயப்படுத்துகின்றான் ...இல்லைனா விசம் குடிச்சி நீதான் காரணம்னு சொல்லிட்டு செத்து போய்டுவேன் ...உன் பள்ளியில் உன்னை அவமானப்படுத்துவேன்னு மிரட்டுகின்றான்மா. அப்பா அம்மா கிட்ட சொன்னேன் அவங்க அவன் ரவுடி நீ தான் கவனமா போனும்னு பயப்படுறாங்கம்மா...

என்னம்மா செய்வதுன்னு கலங்கியபடி கேட்ட பொழுது..மனம் வெடிக்கும் நிலை..ஒரு பெண் குழந்தை எதெற்கெல்லாம் போராடி வளர வேண்டியுள்ளது ..

துணிச்சலா இருடா இதற்கெல்லாம் பயப்படக் கூடாதுன்னு தைரியம் கொடுத்தாலும் ..இனி உன் அப்பா கூடவே வந்துட்டு போண்ணு தான் சொல்ல முடிந்தது ...

அதையும் மீறி தொல்லை செய்தால் காவல் துறையில் சொல்லிடுவோம்னு சொல்லி அனுப்பினாலும் மனதில் ஒரு அச்சம் படுபாவி ஆசிட்டை ஊத்திடுவனோன்னு..
 
தனக்கு தானே குழி தோண்டும் மாணவிகள் ....

ஆண்பிள்ளைகள் மட்டும் குறை கூறினால் உண்மையை மறைப்பதாக ...ஆகும் ..

இன்று பெண் குழந்தைகள் பெற்றோர்களைப்படுத்தும் பாடு..சொல்லி மாளாது...

பருவத்தின் வாயில் நின்று அவர்கள் இக்காலக்கட்டத்தில் மனதை வழிப்படுத்தும் முறையை கூறினாலும் புறந்தள்ளி வீழவே துணியும் நிலை.

பெண்குழந்தைகள் படும் பாடுகளை தினமும் அறிவுறுத்தி நீங்கள் தான் உங்களுக்கு முதல் பாதுகாப்பு ...எதையும் மறைக்காமல் பெற்றோரிடம் கூறுங்கள் ...என்று எவ்வளவு முறை சொன்னாலும் விழலுக்கு இறைத்த நீராக ஆகின்றது ...

திரைப்பட கதாநாயகிகள் போல் காதல் மட்டுமே வாழ்க்கை எண்ணி வலையில் வீழ்கின்றனர் ..

முன்பெல்லாம் சில மாணவிகள் மட்டுமே இப்படி இருப்பார்கள்..ஆனால் இன்று அதற்கு எதிராக பல மாணவிகள் விட்டில் பூச்சிகளாக ...

பெண்ணை பெற்ற பெற்றோர்கள் அவர்களை வழி நடத்த முடியாமல் இரத்த கண்ணீர் வடிக்கின்றனர் ...

பல பெண்களை சுற்றும் ஒருவன் எனத்தெரிந்தும் அவன் தான் வேண்டும் என முட்டாள் தனமாக கூறும் மாணவிகளின் வாழ்க்கை என்ன ஆவது .....

திரைப்படங்கள் ரவுடிகளின் பின்னே அலைய வைத்து வருங்கால சந்ததிகளை வீணாக்கியது தான்  மிச்சம் ..

14 comments :

  1. சொல் புத்தியும் இல்லை... சுய புத்தியும் இல்லை...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சார்..ரொம்பக்கஷ்டம் ..

      Delete
  2. நடப்பதை எல்லாம் பார்க்கும்போது பயமாகத் தான் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஆசிட் வீச்சுகள் பற்றிய செய்திகள் - மனித மனம் ரொம்பவே கேவலமாகப் போய்க்கொண்டிருப்பதாய் படுகிறது.... என்ன சொல்ல.....

    ReplyDelete
    Replies
    1. ஒன்றும் செய்ய முடியாத இயலாமை..கோபம் தான் வருகின்றது சகோ ...

      Delete
  3. இருபாலருமே பக்குவமற்று இருக்கின்றனர். பெற்றோரைக் குறை சொல்வது வீண். நீங்கள் சொல்வது போல பெற்றோரிடம் அவ்வப்போது அனைத்தையும் பகிர்வது மட்டுமே சிறந்தது. இருபாலருக்கிடையேயான ஆரோக்கியமான நட்பு மலர்வதே இது போன்ற மனநோய்க்கு மருந்து

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் .பெற்றோர் மட்டுமல்ல... சமூகம் தான் முக்கியக்காரணம்

      Delete
  4. ஆசிரியையான நீங்கள் இந்தப் பிரச்சினையை ஒரு விவாத மேடையில் வைக்க முடியுமா? அப்போது ஏதாவது வழி கிடைக்குமா எனப் பார்க்கலாம். பெண் பிள்ளைகள் மனதளவில் வளர்ந்து நல்ல மனப் பக்குவம் பெற என்ன செய்யமுடியும் என்றும் விவாதிக்கலாம்.

    எனக்கு இந்தப் பிரச்சினையின் பரிமாணத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் விவாதம் செய்து ஒரு தீர்வு காண வேண்டும் அவசியம் ...குழந்தைகள் வீணாகிக்கொண்டுள்ளனர் ..அப்பா .

      Delete
  5. இரு பாலாரும் தடம் மாறுகின்றார்கள். தடுமாறுகின்றார்கள். பொதுவிடங்களில் நடக்கும் சில நிகழ்வுகளும், அவர்கள் நடத்தும் சேஷ்டைகளும் முகத்தை சுளிக்க வைக்கின்றன. இரு பாலாருமே பொறுப்பு. சமூகத்தின் போக்கானது மிகுந்த வேதனையையும் வலியையும் தருமளவு உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அய்யா .

      Delete
  6. வயதில் ஹார்மோன்கள் தாறுமாறாக வேலை செய்தால் இப்படித்தான் நிகழும்.

    ReplyDelete
    Replies
    1. ஏதாவது செய்யனும்பா ..

      Delete
  7. திரைப்படங்கள் உணர்ச்சிகளைக் கிளறிவிட
    திரைப்படம் பார்த்த இளசுகள்
    எல்லோருமே உணர்ச்சிகளோடு மோதுறாங்க...
    மோதலில் வென்றவர்கள்
    காதல் பக்கம் நாடுவதில்லை...
    மோதலில் தோற்றவர்கள் (உணர்ச்சிகள் வெல்ல)
    காதல் பக்கம் நாடுகிறார்கள்
    இதில்
    ஆணும் பெண்ணும் சமமாகுமே!
    இதற்கு
    மக்களாய/குமுகாய (சமூக) விழிப்புணர்வே மருந்து!

    ReplyDelete
  8. வாழ்க்கையல் எந்த ஒரு லட்சியமும் இல்லாமல் அலட்சியமாக வாழ்பவர்களின் வாழ்க்கை அச்சாணி இல்லா தேர்போல ஆகும்...
    https://www.scientificjudgment.com/

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...