World Tamil Blog Aggregator Thendral: காவு கொடுக்கவா வளர்த்தோம் ..

Thursday 23 March 2017

காவு கொடுக்கவா வளர்த்தோம் ..

காவு கொடுக்கவா வளர்த்தோம் ..

எத்தனையோ வலிகளில் ஆறுதலாய் இருப்பது குழந்தைகளே ....

என் தோழியின் கவலைக்கு மருந்தாக அவர்களின் குழந்தைகளே இருந்தனர் .வேதனைகளை அவர்களின் வளர்ச்சி கண்டு துடைத்து வாழ்ந்தார் ....

சில மாதங்களுக்கு முன் கடைவீதியில் மகிழ்வாய் ஓடி வந்து கீதா நல்லாருக்கீங்களான்னு கேட்டு கையை பிடித்த போது , நீண்ட நாள் கழித்து அவர் முகத்தில் சிரிப்பை பார்த்தேன் . மனம் நிம்மதியாய் இருந்தது ...

நலமான்னு கேட்டேன் ..நல்லாருக்கேன்..உங்களுக்கு தெரியுமா ரமேஷுக்கு வங்கில வேலைக்கிடைச்சிருக்கு..கரூரில் எஸ்.பி.ஐ.வங்கில பணி செய்கின்றான் என்ற போது அப்பாடான்னு இருந்துச்சு ..

நல்லா படிக்கிற பையன் ...பொறியாளர் படிப்பு முடித்த உடன் வங்கித்தேர்வு எழுதி தேர்வாகியிருந்தான் .இனியாவது மகிழ்வா இருங்கம்மா கஷ்டப்பட்டதுக்கு விடிவு காலம் வந்துடுச்சுன்னு ..மனம் நிறைய சொன்னேன் ..

நல்லவங்க நல்லாருக்க கூடாதுன்னு இருக்கும் போல ...

இன்று அவன் இல்லை.

என்ன சொல்வது திங்களன்று காலை பணிக்கு சென்றவன்..ஏன் செவ்வாய் கிழமை காலை அதிகாலையில் நண்பனிடம் வண்டியை வாங்கிக்கொண்டு புதுக்கோட்டைக்கு வரணும்?. நண்பனிடமும் கூறாமல் ,அம்மாக்கிட்டயும் வரேன்னு சொல்லாமல்....வந்து புதுகை எல்லையில் விபத்துக்குள்ளாகி ஏன் கிடக்கணும் ..?.

தன்  ஆசை மகனின் மரணத்திற்கு காரணம் தெரியாமல் வாழ்வதென்பது ஒரு பெற்றோருக்கு எவ்வளவு வலியைத்தரும் ..

மரணத்திற்கு பலி தரவா குழந்தைகள் ...

அவர்கள் பாதுகாப்பை யோசிக்காமல் ..இப்படி அகலமாக போவதற்கா பிறக்கின்றனர் ..

அதே இடத்தில் இன்று மாலை ஒரு இருபத்து நான்கு வயது வாலிபன் விபத்துக்குள்ளாகி அடையாளம் தெரியாமல் புதுகை மருத்துவமனையில் உள்ளதாக முகநூலில் செய்தி வருகின்றது..

எப்படி பாதுகாப்பாக வண்டி ஓட்டுவதென்பதை இன்னும் கற்று கொடுக்கவில்லையா அல்லது அவர்களின் அலட்சியமே காரணமா ?

தலைக்கவசம் அணிந்திருந்தால் அவர்கள் இருவரும் இன்று உயிருடன் இருந்திருப்பார்கள் ....

பெற்றோர்களை வேதனைக்கடலில் ஆழ்த்தவா பிள்ளைகள் .

...நடைப்பிணமாக இனி அவர்களது வாழ்க்கை ....

10 comments :

  1. மரத்து போன மானிடர்க்கு கண் முன்னே நிகழும் மரணமும் சர்வ
    சா'தா' ரணம் தான். மரித்த மணிதரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற அறிவில்லை எமக்கு.

    ReplyDelete
  2. மனம் வருந்தச் செய்த நிகழ்வு
    செய்தித்தாளில் பார்த்தேன் ஆனால் சம்மந்தப் பட்டவர் நம் வட்டத்திற்குள் வருவார் என்று நினைக்கவில்லை

    ReplyDelete
    Replies
    1. g.h.s.s. parampur tamil bt ..rajarajeswari"s son ramesh...mikavum kodumai.

      Delete
  3. //தன் ஆசை மகனின் மரணத்திற்கு காரணம் தெரியாமல் வாழ்வதென்பது ஒரு பெற்றோருக்கு எவ்வளவு வலியைத்தரும் ..//

    திருச்சியில் என்னுடன் பணியாற்றிய மிகவும் நல்லவரான என் நண்பர் ஒருவருக்கு முதலில் இரு பெண்கள், அதன்பின் ஒரே மகன். மகன் BE படித்து முடித்து IT Company ஒன்றில் சென்னைக்கு வேலைக்குச் சென்றான். மிகவும் இளம் வயது. பணியில் சேர்ந்த ஆறே மாதத்தில் எலெக்ட்ரிக் ட்ரெயின் மோதியதாலோ, உரசிச் சென்றதாலோ என்னவோ ப்ளாட்பார்மில் வீசி எறியப்பட்டு, தலையில் மட்டும் பலத்த அடியுடன் பிணமாகக் கிடந்துள்ளார். அருகில் கிடந்துள்ள அவரின் கம்பெனி அடையாள அட்டை மூலம் ரெயில்வே போலீஸார் அந்தக் கம்பெனிக்குத் தகவல் கொடுத்து, அவர்கள் மூலம் இங்கு திருச்சிக்குத் தகவல் வந்து ஓடிச்சென்றவர், தன் ஒரே மகனின் போஸ்ட்மார்டம் செய்யப்பட்ட டெட் பாடியுடன் திருச்சிக்குத் திரும்பினார்.

    இன்றுவரை என்ன நடந்தது அவன் எப்படிச் செத்தான் என்பதே தெரியவில்லை. அவன் சாவில் கலந்துகொண்டு, பார்த்துவிட்டு வந்த எங்களுக்கே மிகவும் கொடுமையாக இருந்தது. இது நடந்து இப்போது சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டன.

    தன் ஆசை மகனின் மரணத்திற்கு காரணம்கூட தெரியாமல் வாழ்வதென்பது ஒரு பெற்றோருக்கு மிகவும் வலியை மட்டுமே தரக்கூடும். :(

    ReplyDelete
  4. ரணம் மிக்க நிகழ்வு!!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...