World Tamil Blog Aggregator Thendral: என்ன செய்ய போகின்றோம்?

Friday 10 February 2017

என்ன செய்ய போகின்றோம்?

இன்று மாலை 6,7,8 வகுப்பு குழந்தைகளோடு பேசியபோது முதலில் அவர்கள் தயங்கினாலும் பின் இயல்பாக பேசத்துவங்கினர்.

நல்ல தொடுகை ,தீய தொடுகை பற்றி கூறிய போது சில குழந்தைகளின் கண்களில் மிரட்சி தெறிந்தது..அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை உணர முடிந்தது.

சில குழந்தைகள் கூறியதை சீரணிக்க முடியவில்லை..அவர்களைச்சுற்றியுள்ள ஆண்களின் வக்கிரத்தை குழந்தைத்தன்மையுடன் கூறிய பொழுது எச்சரிக்கத்தான் முடிந்தது.

சில குழந்தைகள் அம்மாகிட்ட சொல்ல மாட்டேன் அம்மா உங்ககிட்ட சொல்றோம்,அவங்க அடிப்பாங்க என்ற போது..வீடு அவர்களை நம்ப மறுப்பது எவ்வளவு கொடுமையானது.

நாம பெண்குழந்தைகளிடம் இன்னும் நெருங்க வேண்டும்..அவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்...எப்போது ?

7 comments :

  1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்

    ReplyDelete
  2. பாதுகாப்பு உறுதிசெய்யப்படவேண்டும்

    ReplyDelete
  3. In the current scenario, parents should be extra careful. They must encourage their children to share anything with them. It is absolutely a must.

    ReplyDelete
  4. உண்மை அக்கா...
    வீட்டில் அம்மாக்கள் முதலில் மாற வேண்டும்.

    ReplyDelete
  5. நாம பெண்குழந்தைகளிடம் இன்னும் நெருங்க வேண்டும்..அவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்...எப்போது ?// உண்மை கீதா! பெற்றோர்களும், ஆசிரியைகளும் பெண் குழந்தைகளிடம் நெருங்க வேண்டும். நீங்கள் செயது மிகச் சிறந்த பணி கீதா! குழந்தைகளிடம் இன்னும் உரையாடுங்கள்! வாழ்த்துகள்!! பாராட்டுகள்! தொடருங்கள்!!!

    கீதா

    ReplyDelete
  6. சற்றே சிரமம்தான். கவனமாகவும், நுணுக்கமாகவும் அணுகவேண்டியுள்ளது.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...