World Tamil Blog Aggregator Thendral: Two days one night-

Sunday, 19 February 2017

Two days one night-

Two days one night

புதுக்கோட்டை உலக சினிமா சங்கத்தின் மூலம் இன்று மாலை கந்தர்வன் நூலகத்தில் TWO DAYS ONE NIGHT -என்ற பிரெஞ்ச் படம் திரையிடப்பட்டது.

ஒரு பெண்ணை அவள் பணிபுரியும் நிறுவனம் ஆட்குறைப்பு என்ற பெயரில் பணிநீக்கம் செய்ய உள்ளதாகவும்...அவளுடன் பணிபுரிபவர்கள் கம்பெனி போனஸாக தரும் 1000 ரூபிளை வேண்டாம் என்றால் அதற்கு பதிலாக அவளை பணிக்கு ஏற்பதாக ந்ர்வாகம் கூறுகின்றது.

அவள் குடும்பம் மட்டுமல்ல அவளுடன் பணிபுரிபவர்களும் மிகவும் கடன் சூழ்ந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் ...தனது பணியைத்திரும்ப பெற அந்தப்பெண் எல்லோரிடமும் தனக்காக போனஸை விட்டுத்தர கேட்டு தவிக்கும் தவிப்பை மிக யதார்த்தமாக படமாக்கியுள்ளனர்.

அவளுக்காக அவளது கணவனும் இணைந்து தவிப்பது அழகான இல்லறத்துணையாக பரிணமிக்கும் காட்சி.

தனக்காக அவள் போராடுவது பெண்களுக்கு தன்னம்பிக்கை அளிக்க கூடிய ஒன்றாக.

இறுதியில் அனைவரிடமும் பேசி பாதிப்பேர் அவளுக்காக தனது போனசை விட்டுத்தர முன் வருகின்றனர்.

பணி உறுதி என்ற நிலையில் அவளது மேலதிகாரி அவளை அழைத்து கறுப்பின வாலிபரை நீக்கி விட்டு உங்கள் பணியை உறுதி செய்வதாக கூறுகையில் ,கறுப்பின தோழருக்காக தனது பணியை விட்டுக்கொடுத்து, மனப்பூர்வமாக வெளியேறுவது ....மனதில் நிலைத்து நிற்கின்றது.

அனைவரிடமும் கையேந்தி பிச்சை கேட்கும் நிலை வந்துவிட்டதே என அவள் தவிக்கும் தவிப்பு ஆசம்...

எந்தவித பின்னணி இசையுமின்றி மிக யதார்த்தமாக படம் உள்ளது.

தனக்காக அவளே போராடி வெற்றி பெறுவதாக அமைந்துள்ள திரைக்கதையைக்காண்கையில் நமது தமிழ்ச்சினிமாவில் பெண்களின் நிலையை ஒப்பு நோக்காமல் இருக்க முடியவில்லை.

நம்நாட்டில் உயிரோடு வாழ்வதற்கே பெண்கள் போராடும் நிலையில் எங்கே அவள் சுதந்திரமாக தனது பணிக்காக போராட முடியும்.

இயல்பாக பெண்களுக்கு அவர்கள் தரும் மரியாதை பண்பாடுமிக்க நாடு என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவில் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

நம் தமிழ்ச்சினிமா யதார்த்தத்தை படமெடுக்க இன்னும் பலமைல் கடக்க வேண்டும்...

இவ்வாய்ப்பைத்தந்த இளங்கோ சாருக்கு மிக்க நன்றி.
.

8 comments :

  1. //எந்தவித பின்னணி இசையுமின்றி மிக யதார்த்தமாக படம் உள்ளது.//

    தாங்கள் அந்தக்கதையைச் சுருக்கமாகச் சொல்லியுள்ள விதமும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்...தாமதமாக நன்றி கூறுவதற்கு மன்னிக்கவும்...

      Delete
  2. படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டி விட்டீர்கள்

    ReplyDelete
    Replies
    1. அவசியம் பாருங்கள் ....

      Delete
  3. வணிக ரீதியாக வெற்றி பெறாத படங்கள் இவை! தமிழிலும் இது போன்ற படங்கள் உண்டு. யாரும் பார்ப்பதில்லை. அவ்வளவே.

    - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்....சார்.

      Delete
  4. இந்தப்படத்தைப் பார்க்க: யு டியூப் இணைப்பு:

    https://www.youtube.com/watch?v=35E2MCkkXKA

    ReplyDelete
    Replies
    1. அவசியம் பார்க்கின்றேன்..சார்.

      Delete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...