World Tamil Blog Aggregator Thendral: இணையத்தமிழ்ப்பயிற்சி முகாம்-நிகழ்ச்சி18.12.16

Monday 19 December 2016

இணையத்தமிழ்ப்பயிற்சி முகாம்-நிகழ்ச்சி18.12.16

புதுக்கோட்டை கணினித்தமிழ்ச்சங்கம் நடத்திய
இணையத்தமிழ்ப்பயிற்சி முகாம்.

மவுண்ட் சியோன் பொறியியல் கல்லூரியில் 18.12.16 அன்று காலை 10 மணியளவில் தொடக்கவிழாவோடு துவங்கியது.




வரவேற்புரை

                கவிஞர் ராசிபன்னீர்செல்வன் அவர்கள் வரவேற்புரை நல்கினார்.
[விழா நடக்கும் இடத்திற்கான பொறுப்பு மற்றும் அவர்களே உணவும் தேநீரும் வழங்குவார்கள்  என்று கூறி பெரிய நிதிச்சுமையை குறைத்தார் திட்டமிடலின் போது]

வாழ்த்துரை

மவுண்ட் சியோன் பொறியியல் கல்லூரியின் இயக்குநர் திருமிகு ஜெய்சன் ஜெயபரதன் அவர்களும்,கல்லூரியின் முதல்வர் முனைவர் பாலமுருகன் அவர்களும் சிறப்பானதொரு வாழ்த்துரையை வழங்கினார்கள்.

பயிற்சி கையேட்டு நூல் வெளியிட்டு சிறப்புரை


கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் பயிற்சி கையேட்டு நூலை வெளியிட அதை கணினித்தமிழ்ச்சங்க உறுப்பினர்களாகிய பாவலர் பொன்.க அவர்களும் ,கவிஞர் கீதாவும் பெற்றுக்கொண்டனர்.

சிறப்பானதொரு உரையை கவிஞர் தங்கம்மூர்த்தி வழங்கினார்.

பயிற்சி நோக்கவுரை.


கணினித்தமிழ்ச்சங்கத்தின் தோற்றம்...தோற்றுவித்தவர்,ஏன் கணினித்தமிழை வளர்க்க வேண்டும் என கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் விரிவாக எடுத்துரைத்த விதம் அனைவரையும் கவர்ந்தது.ஒவ்வொரு நாளும் தூங்காமல் திட்டமிட்டு அதை வெற்றிகரமாக நடத்தி முடிக்கும் திறமையை பாராட்டாமல் இருக்க முடியாது.

வாழ்த்துரை வழங்கிய சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து நூல்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நன்றியுரை

கவிஞர் கீதா நன்றியுரை கூற தொடக்கவிழா இனிதே நிறைவுற்றது.

 பயிற்சி முதல்நிலை

முதல் பயிற்சியாக தொடக்கநிலையில் உள்ளவர்களுக்கு முனைவர் பழனியப்பன் அவர்கள் மற்றும் புதுகை எல்.கே இன்ஸ்டியூட் உதயக்குமார் ஆகியோர் வழங்கினார்கள்.
புதுக்கோட்டை மற்றும் பல மாவட்டங்களில் இருந்து 80 பேருக்குமேல் பயிற்சியில் கலந்து கொண்டனர்.அதில் 40 பேருக்கு மேல் அன்றைய பயிற்சியில் மின்னஞ்சல் துவங்கி, வலைப்பூவும் வடிவமைத்தனர்.

வலைப்பூவை எவ்வாறு மேம்படுத்தலாம் என்று வலைச்சித்தர் திண்டுக்கல்தனபாலன் அவர்கள் தெளிவாக விளக்கினார்கள்.அனைவரும் தங்களது தளத்தை செம்மைப்படுத்திக்கொள்ள உதவினார்.

விக்கிபீடியாவின் அடிப்படை நோக்கம் என்ன?என்ன எழுதாலாம்....அதன் பயன்கள் என்ன என்று விக்கிபீடியாவைச்சேர்ந்த பிரின்ஸ் என்ராசு அவர்கள் தெளிவுபடுத்தினார்கள்.

முனைவர் ஜம்புலிங்கம் அய்யா தனது விக்கிபீடியா அனுபவங்களைக்கூறி எப்படி எழுத வேண்டும் .எதை எழுதக்கூடாது என்பதை கூறி..
பயிற்சியை மெருகூட்ட விக்கிபீடியாவில் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களுக்காக ஒரு கட்டுரை துவங்குகின்றேன் என்று துவங்கினார்கள்.நம்பிக்கைக்குரிய விக்கிபீடியா உறுப்பினராக அய்யா விளங்குகின்றார்..கணினித்தமிழ்ச்சங்கம் அளித்த முதல்பயிற்சியில் தான் அவர்கள் விக்கிபீடியாவைப்பற்றி அறிந்து பின் 300 கட்டுரைகளுக்கு மேல் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


























திருமிகு ரமேசு டி.கொடி திருச்சி
 யூ ட்யூபில் எவ்வாறு வீடியோவைப்பகிர்வது என்பதைப்பற்றி சிறப்பாக விளக்கினார்.
அலைபேசி பயன்பாடு
அலைபேசியில் என்னவெல்லாம் பயன்படுத்தலாம் என்பதையும்,கூகுளில் ஷார்ட்கட் முறைகளையும்,திருமிகு கோபிநாத் [ஜி டெக் எஜுகேசன்]அவர்களும் திருமிகு ராஜ்மோகன் அவர்களும் எடுத்துக்கூறியது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

கலந்து கொண்டு சிறப்பித்த வலைப்பதிவர்கள்
திருமிகு கில்லர்ஜி,
திருமிகு எஸ்.பி செந்தில்குமார்,
திருமிகு கோபிசரபோஜி,
திருமிகு தமிழ் இளங்கோ..இன்னும் பலர் ....

கவிஞர் செல்வா மற்றும் புதுகை செல்வா ஆகியோர் தங்களது வலைப்பூ அனுபவங்களைப்பகிர்ந்து கொண்டனர்.

கல்லூரி நிர்வாகத்தினர் சிறப்பானதொரு மதிய உணவும் தேநீரும் தந்து உபசரித்த விதம் மிக அருமை.

அனைவரிடமும் கருத்து படிவம் வழங்கி கருத்துகளைப்பெற்றபோது..சிறப்பான பயிற்சி மேலும் வழங்க வேண்டும்,பிறமாவட்டங்களிலும் நடத்த வேண்டும் என அனைவரும் பயன் பெற்றோம் என்று எழுதியிருந்த போது ...அதுவரை பட்ட சிரமங்கள் எல்லாம் பனியாகக்கரைந்தன.

இப்பயிற்சி முழுமையடைய முழுமுதற்காரணம் கவிஞர் முத்துநிலவன் அண்ணா தான்.இரவுபகல் பாராது இதற்காக உழைத்துள்ளார்.அவர்களின் சீரான திட்டமிடலே முக்கிய காரணம்...கணினியில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்..என்ற தாகத்தை அன்றைய பயிற்சி உருவாக்கியுள்ளது.





3 comments :

  1. விழா நிகழ்வு சிறப்பு சகோதரியாரே
    சில தவிர்க்கஇயலாத வேலைகளால் கலந்து கொள்ள இயலாமல் போய்விட்டது

    ReplyDelete
  2. திரு முத்துநிலவன் ஐயாவுக்கும் குழுவினருக்கும் எங்களது நன்றியைத் தெரிவிப்பதில் பெருமையடைகின்றோம். ஒருங்கிணைத்துச் சென்றவிதம் எங்கள் அனைவரையும் ஈர்த்தது. தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு உரிய நேரம் கொடுத்து வாய்ப்பினைத் தந்தவிதம் பாராட்டும்வகையில் இருந்தது. அருமையான பணி, அமைதியாக. வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. இவ்வாறான பயிற்சி நிகழ்வுகள் தொடர வேண்டும்.
    இவற்றை நாளைய தலைமுறை அறிந்தால்
    இணைய வழி தமிழ் பேண உதவுமே!
    விழா ஏற்பாட்டாளர்களுக்குப் பாராட்டுகள்!
    http://www.ypvnpubs.com/

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...