World Tamil Blog Aggregator Thendral: தி இந்து வின் “வீடில்லாத புத்தகங்கள்”-எஸ்.ராமகிருஷ்ணன்

Thursday, 8 December 2016

தி இந்து வின் “வீடில்லாத புத்தகங்கள்”-எஸ்.ராமகிருஷ்ணன்

தி இந்து வின் “வீடில்லாத புத்தகங்கள்”-எஸ்.ராமகிருஷ்ணன்

இரண்டுநாள் விடுமுறையில் ”வீடில்லாத புத்தகங்கள் ”என்ற நூலை வாசிக்க முடிந்தது.
எப்போதும் புதிய புத்தகங்களையே வாங்கப்பிடிக்கும் அதன் வாசனையும் தான்.

ஆனால் பழைய புத்தகக்கடைகளில் நாம் காண முடியாத புத்தகங்கள் புதையல்களாய் ஒளிந்திருக்கும் என்பதை எழுத்தாளர் எஸ்.ரா அவர்களின் நூல் கூறிய போது எத்தனை அறிவிலியாக அப்பொக்கிஷங்களைக்காணாது இருந்திருக்கின்றோம் என்பதை உணர்ந்தேன்..

பழைய புத்தகக்கடைகளிலேயே அவர் வாழ்ந்திருக்கிறார்.மிக அரிதான செய்திகளை அந்நூலில் அறிமுகப்படுத்தியுள்ள நூல்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது.

அதில் கூறப்பட்டுள்ள நூல்களை எல்லாம் படிக்க வேண்டும் என்ற ஆவல் பிறக்கின்றது..

வாய்ப்பிருந்தால் வாங்கிப்படியுங்கள்.

1]சிறுவயது மரணம்- ஜோனதன் கோசல்.

2] 12 மணிநேரம் -நீலவண்ணன்.

3]Memories of Madras-charless

4]வுதரிங் ஹைட்ஸ்

5] பாரன்ஹீட் 451-ரே பிராட்டரி.

6]தி.ஜானகிராமன் -ஜப்பானியப்பயணம்

7]சாமிநாதசர்மா- பர்மா பயணம்.

8]யுகாந்தா-ஐராவதி கார்வே.

9] சார்லி மற்றும் சாக்லேட் பேக்டரி-ரோல்தால் விகடம் பதிப்பகம்.

10]இழந்த சொர்க்கம்-மில்டன்

11]அர்ச்சுனன் தபசு-சா.பாலுசாமி

12]நரிக்குறவர் இன வரைவியல்-கரசூர் பத்மபாரதி.தமிழினி பதிப்பகம்.

13]பெரும்புள்ளிகள்-குகன்.

14]அற்புத குற்றங்கள்-பண்டித நடேச சாஸ்திரி.

15]பிளாச்சியோ-கொலாடியோ.பாவை பதிப்பகம்.

16] ஆங்கிலேயர்கள் இல்லாத இந்தியா-பியர்லோட்டி.சந்தியா பதிப்பகம் .

இன்னும் நிறைய ஆங்கில நூல்கள் குறித்தும் அவர் எழுதியுள்ளார்..

என்னை போன்று புதிதாய், தரமாய் வாசிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டவர்களுக்கு நல்ல நூல்களை அறிமுகம் செய்துள்ளது ..இந்நூல்.

இனி பழைய புத்தகங்களையும் பார்க்க வேண்டும்

நன்றி புத்தகத்திருவிழாவிற்கு...



3 comments :

  1. உண்மைதான் சகோதரியாரே
    காணக்கிடைக்காதப் புத்தகங்கள் தெருவோர பழைய புத்தகக் கடைகளில்
    மிகவும் குறைந்த விலையில கிடைக்கும்

    ReplyDelete
  2. Wuthering Heights எங்களுக்கு கல்லூரியில் ஒரு பாடமாக இருந்தது. நல்லதொரு கதை. மற்றவையும் இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. பல சமயங்களில் பழைய புத்தகக் கடைகளில் இப்படி பொக்கிஷங்கள் கிடைப்பதுண்டு.

    ReplyDelete
  3. வீடில்லா புத்தகம் குறித்த பகிர்வில் படிக்க 16 நூல்கள் அறிமுகம்....
    பழைய புத்தகக் கடைகளில் கிடைத்தற்கரிய புத்தகமெல்லாம் கிடைக்கும் அக்கா...

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...