World Tamil Blog Aggregator Thendral: 17.8.16 இன்று ஒரு மடல்...

Wednesday 17 August 2016

17.8.16 இன்று ஒரு மடல்...

இன்று ஒரு மடல்...

 சிவகங்கையிலிருந்து 72 வயது நிறைந்த ஒரு பெரியவர் எனது வேலுநாச்சியார் ஆய்வு நூலை இரண்டாம் முறை படித்ததாகவும் ..... அதில் சில விபரங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்று சில கேள்விகளைக்கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.

 அது விசயமல்ல..

அவர் சேர்வை இனம் என்றும் அகமுடையவர் பிரிவில் உள்ளவர் என்றும் கூறி நீங்க சேர்வையான்னு கேட்டார்... கடிதத்தை படித்துவிட்டு அவரது சந்தேகங்களுக்கு விளக்கம் எழுதவே போகிறேன் .

ஆனால் நான் சேர்வையான்னு கேட்ட போது தான் சேற்றில் விழுந்த உணர்வைப்பெற்றேன்.

 மன்னிக்கவும் அய்யா நான் சாதி பார்ப்பதில்லை என்றேன்.தொடர்ந்து அவர் இல்ல..நீங்க என் சொந்தமாகக்கூட இருக்கலாம்ல என்ற போது..

.முதன்முதலாக இந்தியாவில் வெள்ளையரை எதிர்த்து தன் நாட்டை மீட்க போராடிய வீரமங்கை வேலுநாச்சியாரை எத்தனை சிறிய வட்டத்திற்குள் அடைக்கப்பார்க்கிறார்கள் என்ற வேதனையும் வலியும்.

 எனது இளமுனைவர் பட்ட ஆய்விற்காக எழுத்தாளர் ஜீவபாரதி அவர்களின் வேலுநாச்சியார் நாவலை ஆய்வு செய்த போது...

அதை சிறப்பாகச்செய்ய வேண்டும் என்று வேலுநாச்சியார் நடந்த மண்ணில் அவர் சென்ற இடங்களிலெல்லாம் கால் வைத்தபோது மனம் சிலிர்த்து....ஒரு தவம் போல ...கள ஆய்வு செய்து,நூலகங்களில் அலைந்து சரியான தகவல்களைத்தர வேண்டும் என்ற அக்கறையில் ஈடுபட்டு ஆய்வை முடித்தேன்...

 இன்றுவரை என்னில் உறைந்த வேலுநாச்சியாரை இறக்கும் வரை மீட்க விருப்பமில்லை, அவருடனே வாழ்வதாக உணர்கின்றேன்... என்ன சொல்ல....

அவரிடம் அய்யா நான் மனிதர்களை நேசிப்பவள்.யாரிடமும் சாதி குறித்து பேசவிரும்பாதவள்..சாதி பார்ப்பதை வெறுப்பவள்...என்று கூறினேன்...

 நல்ல விசயம்மா ஆனா நான் சாதி பார்ப்பேன்..அது தேவைதான்மா என்றார்.. 

சாதியால் பிளவுண்ட தமிழனை இணைக்க வேண்டுமே என்ற பெரியாரின் அக்கறையும் கவலையும் நிறைவேறா கனவுதானா...?

6 comments :

  1. நாட்டிற்காக உழைத்தவர்களையம் உயிர் விட்டவர்களையும்
    சாதி என்னும் சுருங்கிய வட்டத்திற்குள் அடைக்கும்
    குறுகிய மனம் படைத்த மனிதர்கள் பெருத்து விட்ட காலம் இது.
    சிவகங்கைக் கோட்டை,ராஜராஜேசுவரி அம்மன் கோயில், காளையார் கோயில், வெட்டுடைய காளி அம்மன் கோயில் என்று வேலுநாச்சியாரின் பாதையில் பயணித்து
    பெருமை கொண்டுள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா....நானும் பயணித்துள்ளேன்....இவர்களை எண்ணி கவலைப்படாமல் இருக்க முடியவில்லை அண்ணா.

      Delete
  2. இதை அவ்வளவு சுலபமாக மாற்ற முடியாது சகோ ரத்தத்தில் ஊறியவை.
    த.ம.1

    ReplyDelete
  3. ஒரு சிலர் அவர்களது எண்ணங்களை மாற்றிக் கொள்வதில்லை.....

    ReplyDelete
  4. சாதி என்னும் சட்டையை போட வேண்டிய நேரத்தில் போடாமல் எப்பவும் கர்ணனின் கவச குண்டலம் போல் சுமக்கும் ஆட்கள் பெரியவர்களாக இருக்கிறார்கள் என்பது வேதனைதான் என்றாலும் இன்றைய தலைமுறை இன்னும் அதிகமாக தூக்கிச் சுமக்கிறது அக்கா...

    ReplyDelete
  5. சகோதரி அவர்களே, அந்த 72 வயது பெரியவர், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு போல உதாரணம் எனலாம். இதுதான் தமிழ்நாட்டின் எதார்த்தமான உண்மை. தமிழ், தமிழன் என்று உங்களைப் போன்றவர்கள் போராடிக் கொண்டு இருக்க, இன்னும் அந்த ஜாதி என்னும் அந்த வட்டத்தை விட்டு தானும் வெளியே வராமல், மற்றவர்களையும் அந்த வட்டத்திற்குள் இழுப்பவர்களே அதிகம்.

    உண்மையை உரத்துச் சொன்ன உங்களுக்கு நன்றியும் பாராட்டுகளும்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...