World Tamil Blog Aggregator Thendral: தேர்வு வெற்றி..உண்மையா?

Tuesday 17 May 2016

தேர்வு வெற்றி..உண்மையா?

தேர்வு வெற்றி..உண்மையா?

 நம் குழந்தை பிராய்லர் கோழியா?

 தமிழகம் முழுதும் தேர்வு வெற்றி குறித்துப் பேசப்படும் சூழ்நிலையில்....அவ்வெற்றிக்கு பின் உள்ள மாணவர்களின் நிலையை எண்ணுகையில்...

 வெறும் மனப்பாடத்திறனை மட்டும் வெற்றியாக கொண்டாடுகின்றோமா ?என யோசிக்க வேண்டியுள்ளது.

 பாட புத்தகத்தை மட்டும் படித்து விட்டு அதிக மதிப்பெண் பெறுவதை பார்க்கும் போது...


 நாம் முன்பு அம்புலி மாமா,பால மித்ரா போன்ற சிறுவர் நூல்கள்,சிறுகதைகள்,நாவல்கள் படித்து அத்துடன் இப்பாடப்புத்தகத்தையும் படித்து குறைவான மதிப்பெண்களே பெற்றிருந்தாலும் வாசிப்பின் பலனாய் பிழையின்றி எழுத,தானாக சில வரிகள் எழுதத் தெரிந்து இருந்தோம்.

 ஆனால் முழுமையாக மதிப்பெண்கள் வாங்கியுள்ள சில மாணவர்களைத்தவிர பெரும்பாலான மாணவர்களுக்கு,

ஏன் சில ஆசிரியப்பயிற்சி மாணவர்கள் கூட தமிழை பிழையாகத்தான் எழுதும் நிலை இன்று.

 தமிழும் தெரியாமல்,ஆங்கிலமும் தெரியாமல் குழந்தைகளைகளை மதிப்பெண்கள் கொண்டு பார்க்கும் நிலை சரியான ஒன்றா?

 பெற்றோர்களின் மனநிலை இப்போது என்னவெனில் குழந்தைகள் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்தாலும் எழுதிக்கொண்டும்,பாடப்புத்தகத்தை படித்துக்கொண்டுமே இருப்பது தான் நல்லது என்ற மனப்பான்மை அவர்களின் பிற திறன்களை எண்ணிப்பார்க்காத சூழ்நிலை..

 பிராய்லர் கோழி போல வாயில் ஊட்டும் கல்வியைத்தந்து கொழுக்க வைக்கின்றோம்.

 கல்வியில் மாற்றம் இல்லாத வரை இந்நிலை தொடர்ந்து கொண்டே...

6 comments :

  1. பிராய்லர் கோழி என்ற தலைப்பில் அனைத்தும் அடங்கிவிட்டது. நல்ல அலசல்.

    ReplyDelete
  2. நல்ல அலசல்! ஆங்கில மீடியம் என்று சேர்த்துவிட்டு தமிழே தெரியாமல் வளர்கின்றன குழந்தைகள். சிலர் இதை பெருமையாகவும் பேசுவது வேதனை!

    ReplyDelete
  3. உண்மைதான் அம்மா இனியேனும் மாற்ற முயல்வோம்

    ReplyDelete
  4. ம்ம்ம்...

    எங்கே செல்கிறோம் என்ற கவலை தான் எனக்குள்ளும்.

    ReplyDelete
  5. உண்மைதான் சகோ. நல்ல பதிவு. தலைப்பும் அருமை. அப்படித்தான் குழந்தைகள் இப்போது...கல்வியில் மாற்றம் வரும்வரை இந்த அவதிதான்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...