World Tamil Blog Aggregator Thendral: இலக்கியம் பேசி கலையும் கூட்டமல்ல வீதி

Wednesday, 4 May 2016

இலக்கியம் பேசி கலையும் கூட்டமல்ல வீதி

இலக்கியம் பேசி கலையும் கூட்டமல்ல வீதி
 ---------------------------------------------------------------------

புதுகையின் இலக்கிய ஆளுமைகளின் மனிதநேயம் வியப்பில் ஆழ்த்துகிறது....

 இளம் கவிஞர்களை ஊக்கப்படுத்துவதிலும் ,அவர்களுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்பதிலும் அவர்களுக்கு நிகர் அவர்களே.. கவிஞர் தங்கம் மூர்த்தியும் கவிஞர் முத்துநிலவனும் ஒரே மனிதநேயத்தோடு செயல்படுவதைக் காண்கையில் ...என்ன சொல்வது..

 கவிஞர் தங்கம் மூர்த்தி நேற்று நடந்த நினைவஞ்சலி கூட்டத்தில் ”வைகறையின் மகன் வளர்ந்த பிறகு என்ன நமக்கு அப்பா சேர்த்து வைத்தார்னு நினைக்கக்கூடாது.

இத்தனை மனித உள்ளங்களை சேர்த்து வைத்துள்ள தனது அப்பாவை எண்ணி பெருமைப்பட வேண்டும். அவன் பெயரில் நாம் போட இருக்கும் பெரும் தொகை அவனுக்கும் அவனது அம்மாவிற்கும் தன்னம்பிக்கை அளிக்கும் ஊன்று கோலாக ...வைகறை வெறுமையாக விட்டு சென்று விடவில்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும்...

 காலத்தால் வைகறையின் பெயர் அழியாது நிரந்தரமாக இருக்கும் வகையில் ”வைகறை நினைவு விருது “ இளம் கவிஞர்களுக்கு வழங்கப்பட வேண்டும்... அதுவரை நம் கண்ணீரின் ஈரம் காயாது இருக்கட்டும்” என்று கூறிய அவரின் வார்த்தைகள் அனைவரின் மனதிலிருந்து வந்த உண்மையான அன்பின் வெளிப்பாடு.. 

அதற்கான முயற்சியில் வீதி களம் இறங்கியுள்ளது.. இதற்காகவே பொதுவான ஒரு சேமிப்புக்கணக்கு துவங்கப்பட உள்ளது. அதில் பணம் போடுபவரின் பெயர்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படும்...

உங்களின் கரமும் எங்களோடு இணைந்தால்.....வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் எங்களின் இலக்கு வெற்றி பெறும்.... நம்பிக்கையோடு காத்திருக்கின்றோம்.

4 comments :

  1. "வைகறை நினைவு விருது" தொடர வேண்டும் - என்றும்.....

    ReplyDelete
    Replies
    1. தொடர்வோம் சார்.

      Delete
    2. தொடர்வோம் சார்.

      Delete
  2. அருமை! தொடருங்கள்....நம் நண்பரின் நினைவில்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...