World Tamil Blog Aggregator Thendral: ஏன் கூடாது?

Wednesday, 3 February 2016

ஏன் கூடாது?

ஏன் கூடாது?

தோழர் செல்வக்குமாரின் கொய்யாவுல என்ற வலைப்பதிவைப்படித்த போது....குழந்தைகளின் மிட்டாய்களில் கலந்திருக்கும் சீனக்கொய்யா மிட்டாய்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை படித்திருக்கின்றேன்...

இன்று தோன்றியது...

ஏன் முடிந்தவரை நாம் நம் நாட்டுப்பொருட்களையே வாங்கக்கூடாது?

ஏன் நம் அருகில் உள்ள சகோதரர் கடையில் மளிகைச்சாமான்களை வாங்கக்கூடாது...?

புதுகையில்”பதஞ்சலி”சுதேசிப்பொருட்கள் மட்டுமே விற்கப்படும் என்ற விளம்பரத்தைப் பார்த்த போது மீண்டும் ஒரு சுதந்திரப்போருக்கு நாம் தயாராகின்றோமோ...என்ற கவலை வந்தது.மேலும் அந்தக்கடையில் அத்தனை பொருட்களும் மிகவும் விலைக்குறைவு....

குருடாயிலில் தான் ரீபைண்ட் ஆயில் தயாரிக்கப்படுகிறது தெரிந்தும் ஏன் நாம் பாரம்பரியக்கடலை எண்ணெய் வாங்கக்கூடாது...?

நான் கடலை எண்ணெய் வாங்கிய போது பாதிக்கு பாதி விலை உள்ளதை அறிந்தேன் ...அதிக விலை கொடுத்து மாரடைப்பை உண்டாக்கும் ரீபைண்ட் ஆயிலை வாங்குவதைத் தவிர்க்கலாமே எனத்தோன்றியது.

எனக்கு தெரிந்து அனைவரும் செக்கு எண்ணெய்க்கு மாறிக்கொண்டு வருகின்றார்கள்..

குழந்தைகட்கு வாங்கும் திண்பண்டங்களில் பாரம்பரிய தின்பண்டங்களே முதன்மை பெறட்டும்...

மாற்றத்தை நம்மிலிருந்து துவங்குவோம்..பேசுவது மட்டுமல்ல ..செயலிலும் முகநூல் முன்னோக்கி செல்லட்டும்..


இத்தனை நண்பர்களில் [4522] ஒரு ஆயிரம் பேராவது மாறினால் நன்மைதானே..

14 comments :

  1. மாற்றத்தினை நம்மிலிருந்து தொடங்குவோம். நல்ல சிந்தனை. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்கநன்றி சகோ..

      Delete
  2. //எனக்கு தெரிந்து அனைவரும் செக்கு எண்ணெய்க்கு மாறிக்கொண்டு வருகின்றார்கள்..//

    எள்ளையும் கடலையையும் நாமே செக்குக்குக் கொண்டுபோய் அவற்றை நல்லெண்ணெ + கடலெண்னெய் ஆக ஆட்டி வருவது மட்டுமே மிகவும் நல்லது எனச் சொல்லுகிறார்கள். எல்லோராலும் இது சாத்யப்படுமா எனத் தெரியவில்லை. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. செக்கு எண்ணெய் விற்கும் கடைகள் உள்ளது அய்யா...மீண்டும் நன்மைக்கு திரும்ப நாம் விரும்பவேண்டும்...

      Delete
    2. என் மேற்படி பின்னூட்டத்தில் அவசரத்தில் ஒருசில எழுத்துப்பிழைகள் ஆகியுள்ளன.

      ’நல்லெண்ணெ + கடலெண்னெய்’ = ’நல்லெண்ணெய் + கடலெண்ணெய்’ என இருக்க வேண்டும்.

      -=-=-=-=-

      //செக்கு எண்ணெய் விற்கும் கடைகள் உள்ளது அய்யா...மீண்டும் நன்மைக்கு திரும்ப நாம் விரும்பவேண்டும்...//

      இங்கும் அதுபோன்ற செக்கு எண்ணெய் விற்கும் கடைகள் உள்ளன. இப்போது மூன்று மாதங்களுக்கும் மேலாக அதில் தான் நாங்கள் வாங்கி வருகிறோம். மீண்டும் நன்மைக்குத் திரும்ப விரும்பி நாங்கள் எங்களை மாற்றிக்கொண்டு விட்டோம்.

      இருப்பினும் அதிலும் ஏதாவது கலப்படங்கள் இருக்கக்கூடுமோ என்று சிலர் சந்தேகத்தைக் கிளப்பி வருகிறார்கள். அதனால்தான் நாமே எள், கடலை முதலியவற்றை செக்குக்கு எடுத்துச்சென்று எண்ணெயாக ஆட்டிக்கொண்டு வருவது நல்லது என்றும் ஆனால் இது எல்லோராலும் சாத்யப்படும் விஷயம் அல்ல என்றும் சொல்லியிருந்தேன்.

      Delete
  3. நல்ல சிந்தனைதான் சகோதரியாரே
    மாற்றத்தை முதலில் நம்மிலிருந்து தொடங்குவோம்

    ReplyDelete
    Replies
    1. ஆம் அண்ணா...நன்றி.

      Delete
  4. செக்கு எண்ணெயின் மணமே தனி தான். அது அடர்த்தியாக இருக்கும் ஆகையால் பயன் படுத்துவதும் குறைவாக ஆகும். வத்தக்குழம்பின் மணம் அற்புதமாக இருக்கும்.

    மீண்டும் நன்மைக்கு மாறத்தான் வேண்டும்.நன்றி கீதா.

    ReplyDelete
  5. நான் சாதாரணமாக கடலை மிட்டாயை விரும்புவேன். பல கடைகளில் சாதாரணமாக இப்போது கடலை மிட்டாய்கள் (கடலை உருண்டை) கிடைப்பதில்லை. தற்போது பல கடைகளில் விசாரித்து நான் ஏமாந்துபோகிறேன். பல் வண்ணங்களில் பலப்பல பெயர்களில் என்னென்னவோ விற்கப்படுகின்றன. என்ன செய்வது?

    ReplyDelete
  6. மாற்றம் நம்மிடம் இருந்தே!

    ReplyDelete
  7. நல்ல கருத்து சகோ. நாங்கள் பெரும்பாலும் நாட்டுப் பொருட்களையே வாங்குகின்றோம்.

    ReplyDelete
  8. நானும் மாறியாச்சு ..துரித உணவு இனிப்பு எதுவுமே மகளுக்கு தருவதில்லை எண்ணெயும் virgin coconut ஆயில் ,நெய் ,வெண்ணெய் போன்றவற்றை மட்டுமே பயன்படுத்தறேன் ..செயற்கை நிறம் சேர்த்த ஸ்வீட்ஸ் பிள்ளைங்களுக்கு கெட்டது ..adhd hyperactivity யின் மூல காரணமே இந்த செயற்கை நிறங்கள் மற்றும் இனிப்பு தான்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...