World Tamil Blog Aggregator Thendral: தீபாவளி தேவையா ?தேவை இல்லையா?-பட்டிமன்றம்

Saturday, 7 November 2015

தீபாவளி தேவையா ?தேவை இல்லையா?-பட்டிமன்றம்

                              6.10.15 வெள்ளிக்கிழமை காலை  ஆறாம் வகுப்பிற்குச்சென்றதும்..குழந்தைகள் தங்களுக்குள் ஏதோ கதைத்துக்கொண்டே இருந்தனர்...என்னம்மா என்றேன்..அம்மா நிறைய பேர் வரலம்மா என்றார்கள் ஏன் என்றதற்கு தீவாளிக்கு டிரஸ் வாங்கப் போயிட்டாங்கம்மா என்ற போது தான் ,ஒரு பட்டி மன்றம் வைக்கலாமா? என்றேன் உடனே அய்ய்ய்  வைக்கலாம்மா என்னதலைப்பு என்றார்கள் தீபாவளி தேவையா? தேவையில்லையா ?என்றேன்...தேவைதான்மான்னு கோரஸாக குரல் ஒலித்தது..யாரெல்லாம் தேவையின்னு பேசப்போறீங்கன்னு கேட்டதும்சிலரைத்தவிர அனைத்துக்கைகளும் உயர்ந்தன...மதியம் பட்டிமன்றம்னு சொல்லி ஆனா அதற்குள் சொன்ன எழுத்துவேலையெல்லாம் முடிச்சிடனும்னு சொன்னதும் ஓகேம்மான்னு ...குரல் கொடுத்தனர்..
மதியம் தயாராக கையில் குறிப்பெல்லாம் வச்சிருந்தனர்..சரி ஆரம்பியுங்கன்னு சொன்னதும்
 ஜனனி:அம்மா..தீபாவளி அன்று புது டிரஸ் கிடைக்கும்,பலகாரமெல்லாம் கிடைக்கும் நாங்க எல்லார் வீட்டுக்கும் போவோம் தீபாவளிக்குத்தான் ,சந்தோசமா பட்டாசெல்லாம் வெடிப்போம் அதனால தீபாவளி வேணும்ம்மா..

சிவயோகமதி:தீபாவளிக்கு அதிக செலவாகும் கடன் வாங்கித்தான் டிரஸ் பட்டாசு வாங்கனும்,வெடி வெடிக்கும் போது கையில பட்டு விபத்து வரும் அதனால தீபாவளி வேண்டாம்மா.

கவிதாஅம்மா அன்று தானே குழந்தைகள் சந்தோசமா இருக்கும் அதை ஏன் வேண்டான்னு சொல்லனும்மா வேணும்மா

அபிஸ்ரீ:அம்மா தீபாவளி அன்று அதிக விபத்தெல்லாம் நடக்கும்மா ...நம்ம சந்தோசத்துக்காக மத்தவங்க ஏன்மா பாதிக்கப்படனும் ..அதனால வேண்டாம்மா..அப்படி கடன் வாங்கி கொண்டாடனும்மாம்மா...
திவ்யா:அம்மா...எல்லோரும் அன்று வீட்டுக்கு வருவாங்க...சொந்தக்காரங்கள எல்லாம் பாக்கலாம் அதனால வேணும்மா..
ராஜபூரணி:வாங்க முடியாத குழந்தைகள் மற்றவர்கள் புது டிரஸ் போட்டுருக்கறத பாத்து ஏங்குவாங்கல்ல மா அதனால வேண்டாம்மா..

பரிதுல் பர்ஜானா...தீபாவளின்னா சந்தோசம்னு எல்லாரும் விருப்புவாங்க அதனால வேணும்மா
 சரி தீபாவளிய ஏன் கொண்டாடுறாங்கன்னு கேட்டேன்.
லலிதா : கிருஷ்ணர் நரகாசுரன கொன்றபோது நரகாசுரன் தான் இறந்த நாளை எல்லாரும் கொண்டாடனும்னு வேண்டிக்கிட்டானாம் அதனாலதான் கொண்டாடுறோம் .

நல்லவனோ கெட்டவனோ ஒருவன் இறந்த நாளைக்கொண்டாடுவது சரியா..என்று கேட்டதும்...இல்லம்மா கொண்டாடக்கூடாதும்மா..என்றனர் கோரஸாக..

தமிழர் திருநாள் எது என்றேன் ..பொங்கல் என்றனர்...தனக்கு உதவி செய்த சூரியனுக்கும் மாட்டுக்கும் நன்றி சொல்லி விழா கொண்டாடும் தமிழினம் தீபாவளியைக்கொண்டாடுவது முறையா என்றேன்...அனைவரும் யோசிக்கத்தொடங்கினர்..காலங்காலமாக கொண்டாடுகின்றார்கள் என்பதற்காகவே ஒரு விழாவை கொண்டாடலாமா என்றபோது அமைதி காத்தனர்,,

சிவயோக மதி: அம்மா நாம் வெடிகிற வெடிகளைச்செய்வதும் குழந்தைகள் தான்மா அதை வெடிக்கும் போது அவர்களையே வெடிப்பது போல் இருக்கும்மா...படிக்க போகாம அவங்க வெடி தயாரிக்கப்போறாங்கம்மா..தீபாவளி வேண்டாம்மா..என்றாள்..


மூன்று குட்டீஸ் சேர்ந்து ஒரு நாடகமும் போட்டனர் ...பேசவே பேசாத ரோகிணியும் முத்து லெட்சுமியும் வந்து பேசியது மகிழ்வாயிருந்தது...

வகுப்பே தீபாவளி கொண்டாடுவது தவறு என்றது...இக்குழந்தைகள் மனதில் விதைத்தான் தூவியுள்ளேன்..எந்த விழாவையும் காரணம் புரிந்து கொண்டாட வேண்டும்...இக்குழந்தைகளின் குடும்பங்கள் மிகவும் வறுமையான சூழ்நிலையில் இதில் கடன் வாங்கி ஆடம்பரமாகக்கொண்டாடி  பின் தவிக்கலாமா?

ஊடகங்களும் சமூகமும் தீபாவளிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மனிதநேயத்திற்குக்கொடுத்தால் தமிழினம் சிறப்படையாதா?யோசிப்போம்..


30 comments :

 1. ஆகா.. அருமை! தங்கையே
  ஆசிரியர் என்பவர் பாடத்தை மட்டும் புரிந்துகொள்ள நடத்துபவர் அல்லவே?
  சமூகத்தையே சரியாகப் புரிந்துகொள்ளச் செய்வதுதானே?
  அந்த வகையில் இதுபோலும் நிகழ்வுகளில் மாணவரின் தனித்திறன் வெளிப்படுவது மட்டுமல்ல, சமூக அறிவும் வளர்கிறது.
  அரசுப்பள்ளிகளில்தான் இது சாத்தியம். நீங்கள் நல்ல(ா)ஆசிரியர்தான். வாழ்த்துகள் மா.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் தங்கை வேறெப்படி இருப்பேன் அண்ணா....எதிர்பார்க்கல மாணவர்களின் புரிதலை...

   Delete
 2. பேசாத குழந்தைகள் பேசுமேன்றால் தீபாவளி தேவைதான்... வறுமையில் வாடும் குழந்தைகள் ஏந்குவார்களே.... நெருடிய வரிகள்... வகுப்பை கலகலப்பாக்கியமைக்கு நன்றி அம்மா

  ReplyDelete
 3. நாம் சிரிக்கும் நாளே திரு நாள்
  என ஒரு பாடலில் வரும்
  அந்த ஒரு நாள் எல்லோருக்கும்
  எந்த நாளுமாக ஆகிற வரையில்
  கொஞ்சம் கடன் வாங்கியாவது
  சிரித்து மகிழ்ந்திருப்போமே ?

  ReplyDelete
  Replies
  1. விழா மகிழ்வே ..ஆனா தீபாவளிக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கணுமான்னு தான்....தமிழர் பண்டிகைகள் இதனால் ஒதுக்கப்படுகின்றதே சார்..

   Delete
 4. எந்தப் பண்டிகையென்றாலும் சிலருக்கோ அல்லது பலருக்கோ நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. ஊரையையே கிடுகிடுக்கச்செய்யும் தீபாவளி அதில் முக்கிய இடம் பெறுகிறது என்பது மறுக்க இயலாததுதான்.

  பிற்காலத்தில் நம் அன்புக்குரிய பதிவர்களான திரு. முத்துநிலவன் ஐயா போன்றும், நம் திருமதி பவித்ரா நந்தகுமார் அவர்கள் போன்றும் மிகச்சிறப்பான பட்டிமன்ற பேச்சாளர்களை உருவாக்க உதவும் தங்களின் இந்த முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது.

  பாராட்டுகள் + வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. என் பின்னூட்டத்தின் இரண்டாம் வரியில் ’ஊரையையே’ என்ற சொல் ’ஊரையே’ என்று இருக்க வேண்டும். எழுத்துப்பிழையாகி விட்டது. வருந்துகிறேன்.

   Delete
  2. பரவால்ல சார்...மிக்க நன்றி தங்களின் ஊக்கம் மேலும் எங்களை உழைக்கத்தூண்டுகின்றது..

   Delete
 5. Replies
  1. நன்றி நன்றி சார்.

   Delete
 6. தீபாவளி தேவையில்லை என்பது எங்கள் கருத்து. அப்படிக் கொண்டாட நினைப்பவர்கள் தீபங்கள் ஏற்றியோ இல்லை அமைதியாகவோ கொண்டாடலாம். அப்படி நினைப்பவர்களுக்கு. இனிப்புகள் பலகாரங்கள் செய்வது குழந்தைகளுக்கு விருப்பமாகத்தான் இருக்கும்.

  பட்டாசு என்பது தேவையற்றது. அது சுற்றுப்புறத்தைச் சீரழிப்பதுடன், குப்பைகள் சாக்கடை அடைப்பு, விலங்குகள் மிரளல் என்று பல வகைகளில் கேடு. அழகான பதிவு. நல்ல முயற்சி சகோ. குழந்தைகளை ஊக்கப்படுத்தி, ஆக்கப்படுத்தும் நல்லதொரு முயற்சி வாழ்த்துகள் பாராட்டுகள் சகோ...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ..நீங்கள் கூறிய உடனே மின்னஞ்சல் பகுதியை இணைத்துவிட்டேன்..

   Delete
 7. சகோ ஒரு இமெயில் சப்ஸ்கிரிப்ஷன் வைங்களேன். எங்கள் மின் அஞ்சல் கொடுத்தால் உங்கள் பதிவுகள் எங்கள் பெட்டிக்குள் வந்துவிடுமே....எளிதாக இருக்கும். இல்லை என்றால் விடுபட்ட்டு விடுகின்றது..

  ReplyDelete
  Replies
  1. வச்சாச்சே...இனி வந்துடும் நீங்களும் இணைத்து விட்டதால்....

   Delete
 8. பார்த்துவிட்டோம். பதிந்தும் விட்டோம்...சப்ஸ்கிர்ப்ஷன் சகோ ....மிக்க நன்றி வேண்டுகோளை ஏற்றதற்கு...மிக்க மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நன்றி நன்றி சொல்லி அந்நியப்படுத்த வேண்டாமே..

   Delete
 9. ராஜபூரணி சொன்னது எனது மனதை வருடியது நல்லதொரு அலசல் இதை குழந்தைகளே வேண்டாம் என்று சொல்கின்றார்கள் என்றால் இவர்களின் பிஞ்சு மனதில் அதற்க்குள் சுமையா ? என்ற வேதனைக்கு சமூக அங்கத்தினராகிய நாமும் ஒரு காரணமே...

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் சகோ..

   Delete
 10. பட்டி மன்றம் அருமை! குழந்தைகளின் சிந்தனையைத் தூண்டும் தங்கள் செயல் பாராட்டத் தக்கது!

  ReplyDelete
  Replies
  1. உங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி அய்யா..

   Delete
 11. பல காரியங்களை கடன் வாங்கித்தான் செய்கிறோம். தன் சக்திக்குத் தக்க கடன் வாங்கவேண்டும். தீபாவளி சாக்கில் குழந்தைகளுக்கு ஒரு டிரஸ் கிடைக்கும். இனிப்புகளுடன் நல்ல சாப்பாடு கிடைக்கும். தீபாவளி கொண்டாடாவிட்டால் இவைகளை அந்தக் குழந்தைகள் எப்போது அனுபவிக்கப் போகின்றன?

  ReplyDelete
 12. உங்கள் பார்வையில் சரிதான் அப்பா...ஆனா பொருள் நிறைந்த பொங்கல் விழாவை கொண்டாடலாமே..என்றுதான்..

  ReplyDelete
 13. திபாவளி தேவையோ இல்லையோ, இதுபோலும் விவாதங்கள் தேவை!! அர்த்தமுள்ள விவாதங்களை தொடங்கி வைத்து ஊக்குவிக்கும் உங்களை போல அருமையான ஆசிரியர்களும் தேவை!!!!

  ReplyDelete
 14. அருமையான பதிவு. குழந்தைகளை இப்படி பேச வைக்கும்போதுதான் அவர்களிடம் சிந்திக்கும் திறன் வளரும். நல்ல ஆசிரியர் என்பவர் பாடங்களை தாண்டியும் பல விஷயங்கள் பேசவேண்டும்.
  எனக்கு தெரிந்தவரை தீபவாளி பெரியவர்களுக்கு வேண்டுமானால் சுமையாக இருந்திருக்குமே தவிர குழந்தைகளுக்கு அது என்றுமே குதூகலம்தான்.
  தீபாவளிக்கு நாம் வாங்கும் துணிகளில் ஒரு ஆயிரம் ரூபாய்க்காவது கைத்தறி துணிகள் வாங்கலாம். எல்லோரும் அப்படி செய்தால் நெசவாளர்கள் வீட்டிலும் தீபாவளிக்கு துணி வாங்க முடியும். நான் வருடம் தவறாமல் இதை செய்து விடுவேன். இது ஒரு உதாரணம்தான் இப்படி பல இருக்கிறது. இந்த பண்டிகைகள் மூலம் உழைக்கும் தொழிளார்களுக்கு நாம் எப்படி உதவலாம் என்று நினைத்து உதவி செய்தாலே போதும் பண்டிகைகளுக்கான அர்த்தம் வந்துவிடும்.

  பொங்கல் அற்புதமான பண்டிகைதான். உலகம் முழுக்க அறுவடை திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் மட்டும்தான் பொங்கலின் பெருமை மங்கிக்கொண்டே வருகிறது. பொங்கலைக் கொண்டாட நாம் முதலில் விவசாயத்தைக் கொண்டாட வேண்டும். விவசாயியை கொண்டாட வேண்டும். இரண்டையும் நாம் கொண்டாடவில்லை. அப்புறம் எப்படி பொங்கலைக் கொண்டாட முடியும்.

  உங்கள் ஊரில் நெல் விவசாயம் செய்யும் ஏழை விவசாயி இருந்தால் அவனிடமிருந்தே கடை விலைக்கு அரிசி வாங்கிக்கொள்ளுங்கள். எல்லோரும் அப்படி செய்தால் பொங்கலும் தீபாவளியை விட பலமடங்கு உற்சாகம் தரும் பண்டிகையாக பொங்கல் மாறும். முதலில் விவசாயியை கொண்டாடுவோம். தானாக பொங்கல் சிறப்படையும்.

  ReplyDelete
 15. குழந்தைகளை சிந்திக்க செய்யும் நல்லதொரு முயற்சி! உங்களைப் போன்ற ஆசிரியர்களிடம் படிக்க குழந்தைகள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 16. நல்லதொரு சிந்தனை....

  பல வீடுகளில் துணி வாங்குவதே தீபாவளிக்கோ பொங்கலுக்கோ தான்... அதற்காக சிறிதேனும் சேமிக்கிறார்கள். அதற்காகவேனும் பண்டிகைகள் கொண்டாடப் பட வேண்டும்....

  ஆடம்பரம் தேவையில்லை.

  ReplyDelete
 17. பட்டி மன்றம் ரசித்தேன்.

  ReplyDelete
 18. இத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு
  நன்மை தரும் பொன்நாளாக அமைய
  வாழ்த்துகள்!

  யாழ்பாவாணன்
  http://www.ypvnpubs.com/

  ReplyDelete
 19. இத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு
  நன்மை தரும் பொன்நாளாக அமைய
  வாழ்த்துகள்!

  யாழ்பாவாணன்
  http://www.ypvnpubs.com/

  ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...

There was an error in this gadget