World Tamil Blog Aggregator Thendral: 15.8.15 இன்று சுதந்திர தினவிழா

Saturday 15 August 2015

15.8.15 இன்று சுதந்திர தினவிழா

15.8.15 இன்று சுதந்திர தினவிழா

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சந்தைப்பேட்டையில்

மிகச்சிறப்பாக  கொண்டாடப்பட்டது....

தலைமை ஆசிரியர் தலைமையேற்க

உதவித்தலைமை ஆசிரியரும்,பட்டதாரி ஆசிரியரும் சகோதரியுமான திருமதி .அஞ்சலிதேவி அவர்களும் சிறப்பான வாழ்த்துரை வழங்கினார்கள்.

நான் கவிதை வாசித்து என் தாத்தா தியாகி மாணிக்கம் அவர்களை நினைவு கூர்ந்தேன்.

முதுகலைத்தமிழாசிரியர் திரு .பரமசிவம் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.

பேச்சுப்போட்டி,கட்டுரைப்போட்டி ,ஓவியப்போட்டி ஆகியவற்றில் கலந்துகொண்டு வெற்றிப்பெற்ற மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் புத்தகப்பரிசுகள் வழங்கி பாராட்டினார்.


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு என் மாணவன் ராமகிருஷ்ணன்[இத்தாலி]வழங்கிய ரூ1000 பரிசுத்தொகையை வழங்கி மகிழ்ந்தேன்

..தலைமை ஆசிரியர் என் மாணவனைப்பாராட்டி மேலும் அதிக மாணவிகள் நல்ல மதிப்பெண்கள் எடுத்து அடுத்த ஆண்டு பரிசுகள் பெறவேண்டும் என வாழ்த்தினார்

இவன் என் மாணவன் என பெருமை பெற்ற தருணம்..முன்பே பன்னிரண்டாம் வகுப்பு மாணவிக்கு ரூ 1000 தந்துள்ளான்.

முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு ரூ 500 பரிசு வழங்கி பாராட்டினார் தமிழாசிரியர் சுமதி.

தமிழில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கும்,இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு தமிழாசிரியர்கள் கிருஷ்ணவேணியும் ,சுமதியும் புத்தகங்கள் பரிசளித்துப்பாராட்டினார்கள்..

மாணவிகளை ஊக்குவிப்பதில் எங்கள் பள்ளி ஆசிரியர்கள் முன்னுதாரணமாய் திகழ்வதில் மிகவும் பெருமை உண்டு...

அறிவியல் பாடத்தில் 100% தேர்ச்சி பெற்ற மாணவிக்கு சூன் மாதம் அறிவியல் ஆசிரியர்  திருமதி பிரமிளா ரூ1000 கொடுத்து பாராட்டி மகிழ்ந்தார்.


மாணவிகள் சிறப்புடன் நாட்டியமாடி அனைவர் மனதையும் கவர்ந்தனர்.ஆசிரியர்கள் சுதாவசந்தியும், ஜெயாவும் கலைநிகழ்ச்சிகளை சிறப்பாக நடக்க உதவினார்கள்...

ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சுதந்திரதினவிழாவை சிறப்பாகக்கொண்டாடி மகிழ்ந்தனர்..

 [போட்டோவை செல்லில் எடுத்ததால் பதிவேற்றம் செய்யமுடியாமல் சுத்திக்கிட்டேயிருக்கு......]

6 comments :

  1. இனிய சுதந்திர தின வாழ்த்துகள் சகோ.

    ReplyDelete
  2. சிறப்பான கொண்டாட்டம் கீதா. ஆமாம், நீங்களும் உங்கள் பள்ளி ஆசிரியர்களும் நன்கு ஊக்குவிக்கிறீர்களே , வாழ்த்துகள்! மாணவிகளுக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. முன்மாதிரியான ஆசிரியர்களுக்கும், நன் மாணவ மணிகளுக்கும் எனது இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  4. அக்கா!!! கண்ணுபட போகுது!! ஸ்கூல்கே சுத்திபோடுங்க:) நம் பள்ளி இத்தனை சிறப்பாய் இருப்பது மகிழ்ச்சி அக்கா! வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. இனிய சுதந்திர தின வாழ்த்துகள்...

    ReplyDelete
  6. சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...