World Tamil Blog Aggregator Thendral: Bloggers Meetவலைப்பதிவர்கள் திருவிழா

Wednesday, 5 August 2015

Bloggers Meetவலைப்பதிவர்கள் திருவிழா

புதுகை கணினித்தமிழ்ச்சங்கம் - நடத்த இருக்கும்

வலைப்பதிவர்கள்[Bloggers Meet] திருவிழா

நாள்: 11.10.15 [ஞாயிற்றுக்கிழமை]

இடம் :புதுக்கோட்டை

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த வலைப்பதிவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து கொண்டாடும் வலைப்பதிவர்கள் திருவிழா அக்டோபர் மாதம் 11 ஆம் நாளன்று நடக்க உள்ளது .

அன்று புத்தகவெளியீட்டு விழாவும் நடைபெறும்...தமிழ்நாட்டு வலைப்பதிவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு வலைப்பதிவர்களும் மகிழ்வுடன் கலந்து கொள்ளும் மாபெரும் நிகழ்வில் வலைப்பதிவர்கள்[Bloggers] அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க  வாருங்கள். புதுகையின் சிறப்புகளை அறிய அன்புடன் அழைக்கின்றோம்.

முன் பதிவு விவரம் விரைவில்...

நார்த்தாமலைக்கோவில்

புதுகையின் நீதிமன்றம்,கருவூலம்





புதுகையில் விக்டோரியா மகராணிக்காக அமைக்கப்பட்ட வளைவு

\
பழமையின் புகழ் கூறும் திருமயம் கோட்டை




புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வளாகம்





கி.மு.5000 க்கு முற்பட்ட பாறை ஓவியங்கள்...முனைவர் அருள்முருகன் அய்யா அவர்களால் உலகறியச்செய்யப்பட்டன.





நீதிமன்ற முன் தோற்றம்


அஜந்தா குகை ஓவியக்கலைக்கு நிகரான சித்தன்னவாசல் குகை ஓவியங்கள்





தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய அருங்காட்சியகம்

உலகிற்கு எடுத்துக்காட்டாய் விளங்கும்  தனியொருவராக அறிவுப்புதையல்களை தேடிச்சேர்த்து அனைவருக்கும் பயன் தரும் ஞானாலயா நூலகம்





இசைபாடும் தூண்கள் அமைந்த குடுமியான் மலை


இன்றும் ஆடை வடிவமைப்பிற்காக சித்திரம் தேடிவரவழைக்கும் கலையழகு மிக்க ஆவுடையார்கோவில்









வரவேற்கிறது புதுகை கணினித்தமிழ்ச்சங்கம்...
                            

32 comments :

  1. புதுக்கோட்டையில் வலைப்பதிவர் சந்திப்பு என்கிற செய்தி இனிக்கிறது. அடியேனும் புதுக்கோட்டைக்காரன்தான்! மன்னர் கல்லூரியின்.மகத்தான ப்ராடக்ட்!
    வெளிநாடுகளில் கொஞ்ச காலம் இருந்துவிட்டு தற்போது டெல்லியில் வசிக்கிறேன். புதுக்கோட்டையைப் பார்த்து வருஷங்களாகிவிட்டது. வர முயற்சிக்கிறேன். வாழ்த்துக்கள்.
    மென்கவிதைகள், கட்டுரைகளுக்கான எனது வலைப்பூ: aekaanthan.wordpress.com
    -ஏகாந்தன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி விழாவிற்கு அவசியம் வரவும்..

      Delete
  2. அற்புதமான படங்களைப் பகிர்ந்து இப்போதே எங்களை அழைத்துவிடுவீர்கள் போல தங்கள் ஊருக்கு... விழா இனிதே நடக்க வாழ்த்துகள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. உங்களைக்காண ஆவலுடன் காத்திருக்கின்றோம் மா..அவசியம் வாங்க

      Delete
  3. அனைவரையும் சந்திக்கும் ஆவல் உள்ளது. வர முயற்சிக்கிறேன் கீதா.

    ReplyDelete
    Replies
    1. கட்டாயம் வாங்கம்மா

      Delete
  4. வணக்கம்
    சகோதரி

    தகவலை பார்த்தவுடன் மகிழ்ச்சியடைந்தேன் இப்போது முத்து நிலவன் ஐயாவின் தலைமையில் வலைப்பதிவர்கள் வச்சப்பில் உடனுக்கு உடன் தகவலை வழங்கி கொண்டு இருக்கிறார்கள். அதில் நானும் ஒருவன்... புதுக்கோட்டையின் சிறப்பை அறிந்தேன் படத்தின் வாயில். நிகழ்வு சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வரவை ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றோம் சகோ

      Delete
  5. ஆகா... அருமை சகோதரி...கீதா.. நீர் புலவர்தான்..
    அருமையான படங்களைத் தேடி எடுத்துப் போட்டுவிட்டீர்கள்..
    இவைபற்றிய இரண்டுமூன்றுவரி விளக்கமும் இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும்ல? அசத்துங்க...

    ReplyDelete
    Replies
    1. அண்ணா நீங்க சொன்னதை செய்து விட்டேன்...

      Delete
  6. சிவபார்கவியின் வாழ்த்துக்கள்... திருச்சியில் நடத்தினால் நல்லது...
    http://sivaparkavi.wordpress.com/

    ReplyDelete
    Replies
    1. நடத்தலாம் ...இங்க அவசியம் வாங்கம்மா

      Delete
  7. ஆஹா வாழ்த்துகள் முயற்சிக்கின்றேன்.....

    ReplyDelete
    Replies
    1. கட்டாயம் எதிர்ப்பார்க்கின்றோம் சகோ.

      Delete
  8. வாழ்த்துக்கள்/

    ReplyDelete
    Replies
    1. விழாவில் கலந்துகொண்டு வாழ்த்துங்கள் சகோ

      Delete
  9. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    புதுக்கோட்டையின் படங்களை வெளியிட்டது நன்று.

    நானும் விழாவில் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அவசியம் வாங்க....

      Delete
  10. ஆரம்பமே அமர்க்களம்
    மகிழ்ச்சி சகோதரியாரே
    அந் நன்னாளுக்காகக் காத்திருக்கிறோம்
    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. ஆம் அண்ணா வாங்க அண்ணியும் முடிந்தால் அழைத்து வாருங்கள்

      Delete
  11. அய்யா முத்துநிலவன் அவர்களின் அறிவிப்பிற்குப் பின், உங்களது பதிவின் வழியே வலைப்பதிவர் திருவிழா களை கட்டத் தொடங்கி விட்டது.

    ReplyDelete
    Replies
    1. ஆம் சகோ....உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.

      Delete
  12. ஞானாலயா, சித்தன்னவாசல், ஆ.கோவில் , அருங்காட்சியகம் மற்றும் நம்ம முட்டை மாஸ் மிஸ்ஸிங் தங்கையே!

    ReplyDelete
    Replies
    1. போட்டாச்சு அண்ணா ...காலை பள்ளிக்கு செல்லும் வேகத்தில் எழுதியதால் ...அப்படி ...இப்போ சேர்த்து எழுதியிருக்கேன்...

      Delete
  13. இதற்கான பதிவுகள் விரைவில்...

    ReplyDelete
    Replies
    1. உகளின் ஒத்துழைப்பு மிகவும் தேவை சார்

      Delete
  14. ஆரம்பித்தால்
    நன்று

    ReplyDelete
    Replies
    1. ஆரம்பிச்சாச்சே

      Delete
  15. அனைவர் மனதிலும் ஆவலை ஏற்படுத்திவிட்டீர்கள் அம்மா படங்களின் வாயிலாக... arumai

    ReplyDelete
  16. விழா மிக சிறப்பாக நடைபெற்றது நானும் கலந்துகொண்டேன் மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...